Thursday, November 21, 2013

If Tomorrow Comes - TV Series

Sidney Sheldonன் If Tomorrow Comes என்ற நாவலின் திரை வடிவம் தான் இந்த சிறிய தொலைக்காட்சி தொடர். 1986ம் ஆண்டு இயக்கியதை இப்போது பார்த்தால் சில காட்சிகள் குழந்தை தனமாக இருந்தது.

நாவலில், Traceyம் Jeffம் கதையின் ஓட்டத்தில் நடுவில் தான் சந்தீப்பார்கள் ஆனால் இதில் முதலிலேயே சந்திக்கிறார்கள். நாவலில், Tracey பொய் குற்றச்சாட்டில் சிறைச்சாலை சென்றதும், அவள் காதலன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதோடு நம் உறவு முடிந்தது என்று சொல்லுவான். இதில் சிறைச்சாலைக்கு வந்து நேரில் சொல்கிறான். இந்த மாதிரி சில, பல மாற்றங்களோடு இயக்கியுள்ளார்கள்.

இத்தொடர் கொஞ்சம் வேகமாக செல்வது போலிருந்தது. கதை படிக்காமல் பார்த்தால் அந்தளவுக்கு புரியுமா? என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

ஒரு நாவலை படமாகவோ, தொடராகவோ உதாரணமாக Pretty Little Liars, The DaVinci Code பார்த்தபோது அத்துடன் ஒன்ற முடிந்தது. ஆனால் இத்தொடருடன் ஒன்ற முடியவில்லை. ஏதோவொரு குறை. Originality இல்லை என்பது போல் ஓர் உணர்வு.

Monday, November 18, 2013

Sidney Sheldon's Novels (Part 2)

If Tomorrow Comes
தன் தாயின் பணத்தை ஏமாற்றியவனிடம் நியாயம் கேட்க அவன் வீட்டிற்கு செல்ல, அங்கு நடக்கும் எதிர்பாராத நிகழ்வினால் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெரும் Tracey, தனக்கு துரோகம் செய்தவர்களை பழிவாங்க துடிக்கிறாள். இந்த பழிவாங்கும் படலம் 150 - 200 பக்கங்களுக்குள் முடிந்து விடுகிறது.

அதன் பின், சிறையில் இருந்ததால் வேறு வேலை கிடைக்காமல் ஒரு வீட்டிற்கு திருட செல்கிறாள். அங்கு வரும் போலீஸ்காரரை ஏமாற்றி தப்பிக்கிறாள். போலீஸ்காரரை ஏமாற்றி தப்பும் அந்த திரில், அந்த உணர்வினால் தவறானவர்களை மட்டும் ஏமாற்ற ஆரம்பிக்கிறாள்.

உலகின் மிசச்சிறந்த இரண்டு சதுரங்க விளையாட்டு வீரர்கள், ஒரு நகை கடை மேலாளர், அரும்பொருள்காட்சியகத்திலிருந்து ஒரு பழைமையான ஓவியம்  என்று அவளின் ஏமாற்று படலம் தொடர்கிறது.

இன்சூரன்ஸ் விசயங்களில் ஏமாற்றுபவர்களை கண்டு பிடிக்கும் ஒருவன், Traceyஐ பிடிக்க முயற்சி செய்வதும், Tracey, அவளை போலவே திறமைசாலியான இன்னொரு ஏமாற்று பேர்வழியுடன் கூட்டு சேர்ந்து திருடுவதும் திருடன்-போலீஸ் ஆட்டம் போல கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்தது.

Friday, October 25, 2013

When Strangers Meet

எழுதியவர்: ஹரி குமார். K

தந்தை - மகனுக்குமான உறவை பற்றியது. எனக்கென்னவோ தந்தையின் நிலையை இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. நீங்கள் செல்லும் வழியில் ஒரு தடை இருக்கிறதென்றால், தெரியாத ஒருவருக்கு அவ்வழியில் ஒரு தடை உள்ளது என்று மனிதாபிமான எண்ணத்தில் எச்சரிப்பீர்கள். அதே நண்பன் அல்லது உறவுக்குகாரன் என்றால் ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்போம். அதே தன் மகன் இல்லை மகள் என்றால் அத்தடையை நீக்க என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள். அதற்கு அவர்கள் மேல் உள்ள பாசம் அல்லது தன் மகன் அத்தடையை வெற்றி கொள்ள வேண்டும் என்ற ஈகோ அல்லது தன்னால் உருவாக்கப்பட்டவன் தானே என்ற எண்ணம் தான் காரணமாக இருக்கும். என்ன கடைசி இரண்டு, அவர்களை மகனின் எண்ணத்தை ஆசையை புரிந்துக்கொள்ள விடாது.

பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வா என்று சொல்லாமல், மைதானம் சென்று சிறிது நேரம் விளையாடிட்டு வா என்றும், என் விருப்பபடி டிப்ளோமா, B.Eயிலும் எனக்கு பிடித்த கணிபொறி படிப்பு, வேலைக்காக அலைந்த போதும் ஆதரவாக இருந்து, என் வாழ்வை இரண்டு வருடத்திற்கு முன்பு வரை   என் விருப்பபடி வாழ அனுமதித்த என் பெற்றோரை இந்நாவல் படிக்கும் போது பல முறை நினைத்துக்கொண்டேன்.

இந்நாவல் படிக்கும் போது உங்களுக்கும் உங்கள் தந்தைக்குமாக உறவை நிச்சயமாக எண்ணிப்பார்ப்பீர்கள். எனக்கு அமீர்கான் நடித்த Talaash படமும் ஞாபகம் வந்தது. அந்த படத்திற்கும் இக்கதைக்கும் ஒரே ஒரு ஒற்றுமை தான்.

இந்நாவலில் மலையாள Bollywood நடிகனான அந்த பேடியின் பெயரை பயன்படுத்தியது பிடிக்கவில்லை.

Before I go to sleep

எழுதியவர்: S J Watson

கஜினி திரைப்படத்தில் வருவது போல, இக்கதையின் முக்கிய பெண் கதாபாத்திரம் ஒரு விபத்தினால் எல்லாவற்றையும் மறந்து விடுகிறார். படிப்படியாக மருத்துவத்தினாலும், பயிற்சியினாலும் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து அவர் ஞாபகங்களின் வாழ் நாள் ஒரு நாள் என்றாகிறது. அதாவது ஒரு நாள் வரை தான் அவர் ஞாபகம் வைத்திருப்பார். தூங்கி எழுந்த மறு நாள் மறந்து விடுவார். இச்சூழ்நிலையில் தான் கதை தொடங்குகிறது.

ஒரு மருத்துவர், அவர் செய்யும் ஆராய்ச்சிக்காகவும், ஏற்கனவே இது மாதிரியான நோயாளிகளுக்கு மருத்துவம் செய்த அனுபவத்தையும் வைத்து தாமாகவே அப்பெண்ணை சந்தித்து தினமும் நடக்கும் விஷயங்களையும், அப்பப்ப ஞாபகம் வருகிற பழைய விஷயங்களையும் எழுதி வைத்துக்கொள்ள சொல்கிறார்.

தினமும் அந்த மருத்துவர், அப்பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்பெண் எழுதி வைத்த குறிப்புகள் உள்ள புத்தகம் வீட்டில் எங்கு உள்ளதென்று சொல்ல, அப்பெண் அந்த குறிப்புகளின் மூலம் தனக்கு நடக்கின்ற, நடந்த விஷயசங்களை ஞாபகபடுத்திக் கொள்கிறார். சில சமயங்களில், சில பழைய விசயங்களும் ஞாபகம் வர, அதை வைத்து தன் கணவர் சொல்பவை பொய் என்று கண்டு பிடிக்கிறார்.

ஏன் அப்பெண்ணின் கணவர் பொய் சொல்கிறார்? எதனால் அவர் ஞாபகம் பறிபோனது என்று கதை கொஞ்சம் சுவாரசியமாக நகருகிறது.

அப்பெண் அனுபவிக்கும் கஷ்டங்கள் எனக்கு பெரிதாக தெரியவில்லை. செய்த தவறிற்கான தண்டனை என்று தான் தோன்றியது.

Thursday, October 10, 2013

S V V

ராஜாமணி

www.scribd.com சென்று தமிழ் புத்தகங்களை எப்போதாவது தேடுவேன். சுதந்திரத்திற்கு முன்னாடி எழுதின நாவல் என்று இந்நாவலை பற்றி குறிப்பிட்டிருந்ததால் தரவிறக்கம் செய்தேன். நாவலின் பின் அட்டையிலும், எஸ்.வி.வியை பற்றி 1940ல் ஆனந்த விகடனில் அமரர் கல்கி எழுதியதையும் படித்ததும் இந்நாவல் படித்தே தீரவேண்டும் என்று படிக்க ஆரம்பித்தேன்.

கதாநாயகனுக்கு படிப்பு மட்டும் வெகு தூரம். அதை வைத்து அப்பா, மாமா, அவரின் பெண் மட்டம் தட்ட, படிப்பு மீது வெறுப்பு வராமல் ஒரு வைராக்கியத்தோடு படிக்க ஆரம்பிக்கிறார். சொந்த ஊரை சேர்ந்த ஒரு பெண், அந்த ஊரிற்கு குடிபெயர்ந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், மாமன் மகள் என்று இம்மூவரில் யாரை கதாநாயகன் கை பிடிக்கிறார் என்று நீண்ட நெடுந்தொடருக்கான கதையாக சொல்லியிருக்கிறார்.

எடக்கு மடக்கான உரையாடல்களை தவிர வேறொன்றும் இருப்பதாக தெரியவில்லை.

Friday, September 27, 2013

நிலமெல்லாம் ரத்தம்

குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக பா. ராகவன் என்பவரால் எழுதப்பட்டது.

ஒரு காலத்தில், தன் மண்ணிலிருந்து துரத்தி, துரத்தியடிக்கப்பட்ட ஒரு இனம், எங்கு அகதியாக சென்றாலும் அங்கு ஏதாவது என்றால் கொல்லப்பட்ட, துரத்தப்பட்ட ஒரு இனம், பல நூற்றாண்டுகளாக அகதிகளாகவே வாழ்ந்த ஒரு இனம் இன்று அமெரிக்கா கூட வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கும் அளவுக்கு மாறியதன் பின்னணியை தெரிந்துக் கொள்ள கொஞ்ச நாட்களாக இஸ்ரேல் (யூதர்கள்) வரலாற்றை தேடிக்கொண்டிருந்தேன். இந்த புத்தகம் கிடைத்தது. மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" போல சரித்திரத்தின் நிகழ்வுகளை நன்றாக ஆராய்ந்து எழுதியுள்ளார்.

"ஜெருசலேம்" - மூன்று மதத்தினரையும் (கிறிஸ்துவர்கள், யூதர்கள், முஸ்லீம்கள்) அடித்துக்கொள்ள வைத்துள்ளது. இதிலென்ன விசேசம் என்றால் கிறிஸ்துவர்கள் யூதர்களிருந்து வந்தவர்கள். ஆனால் கிறிஸ்துவத்தை பரப்ப கிறிஸ்துவர்கள் செய்தவைகளை எனக்கு தெரிந்து வேறு எந்த மதமும் செய்ததில்லை.

யூதர்களுக்கு உதவிய நாடுகள், சொந்த மண்ணில் வாழமுடியாமல் பரிதவிக்கும் ஈழ மக்களுக்கு உதவ வரவில்லை. ஈழத்தில் பெட்ரோல் இல்லாதது தான் காரணமோ?

இந்நூலின் ஆசிரியர், ஹிட்லர் செய்த கொடுமைகளை விவரிக்கும் போது, இது போல் உலகில் வேறுங்கும் நடக்கவில்லை என்று சொல்லியுள்ளார். ஏனெனில் அவர் இந்நூலை அதாவது இத்தொடரை எழுதியது 2005ல். 2009ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு எழுதியிருந்தால் ஹிட்லருடன், ராஜபக்சேவையும் சேர்த்திருப்பார்.

தான் வாழும் இடத்திலிருந்து துரத்த படும் போது, சொத்து, வாழ்ந்த பூமி என்று எல்லாவற்றையும் விட்டு போகும் போது வரும் உணர்வு, வலி, வேறிடத்திற்கு அகதியாக செல்லும் போது அனுபவிக்கும் தொல்லைகள் எல்லாம் யூதர்களுக்கு நன்றாக தெரியும். பல ஆண்டுகளாக அதை அனுபவித்தவர்கள் அவர்கள். அதனால் தான் ஈழ தமிழர்கள் அந்த தொல்லைகளை அனுபவிக்காமல் செத்து ஒழியட்டும் என்று ஹிட்லரை விட கேவலமான ராஜபக்சேவிற்கு துணை நின்றார்களோ என்னவோ!

கூப்பிடும் தொலைவில் நடந்த இன அழிப்பை தடுக்க தவறிய, தடுக்க வக்கில்லாதவர்கள்(நான் இந்த category), திரையில் மட்டும் வீரத்தை காட்டும் பேடிகளுக்காக உயிரை கூட தர தயாராக இருக்கும் மூடர்கள், கேடு கெட்ட ஒரு ஜென்மத்தை மணம் செய்துக்கொண்டு அந்த கட்சிக்கே தலைவியான இத்தாலிகாரியை அன்னை என்று கொண்டாடும் ஈனப்பிறவிகள், ஊழல் மேல் ஊழல் செய்தது மட்டுமில்லாமல், தமிழினத்திற்கு துரோகம் செய்கிறார் என்று தெரிந்தும் ஒரு தெலுங்கனுக்கு காவடி தூக்கும் மானங்கெட்ட மடையர்கள் வாழும் என் தாய் தமிழ் நாடு அழிந்து நாசமாக போகட்டும்.

"வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு" என்று மலையாளி, தெலுங்கன், கன்னடக்காரன் என்று வாழ வைத்து, அழிந்தது தான் மிச்சம். வாழ்ந்த மலையாளிகளில் ஒருவரை தவிர வேறு யாரும் தமிழர்களையோ, தமிழ்நாட்டையோ மதித்ததாக கூட தெரியவில்லை. கண்டவர்கள் வந்து வாழ்ந்ததும் போதும், எங்களை அழித்ததும் போதும்டா சாமி. இதற்கு மேல், திருடனாகவே இருந்தாலும் தமிழனுக்கு தான் என் ஓட்டு.

Thursday, September 19, 2013

Dexter - TV Series (Part 4)

Season 08
Debra, Dexterஐ வெறுக்கிறாள். Lieutenant வேலையை விட்டுவிட்டு private detectiveவாக வேறொரு companyயில் வேலைக்கு சேர்கிறாள். ஒரு குற்ற சம்பவத்தில் போலீசுக்கு உதவ வரும் Dr. Vogelக்கு, Dexterஐ பற்றி முழுவதும் தெரிந்திருக்கிறது. Dexter, Dr. Vogelக்கு எப்படி தன்னை பற்றி தெரியும் என்று கண்டுபிடிக்கிறார். வேறொரு serial killer Zachக்கு தன்னை போலவே குற்றவாளிகளை கொலை செய்ய கற்றுக்கொடுக்கும் நிலைக்கு Dexter தள்ளப்படுகிறார். Dexterன் முன்னாள் காதலி Hanna, மறுபடியும் Dexterஐ சந்திக்கிறாள். சில பல கொலைகள் நடக்க, Dexterக்கு Zach மீது சந்தேகம் வருகிறது. Dr. Vogelக்கு ஆபத்து என்று நினைக்கும் Dexter அவரை காப்பாற்றி விட்டு, தன் குழந்தை, Hannaவுடன் நாட்டை விட்டு வெளியேற நினைக்கிறார்.

சில பல எதிர்பாராத திருப்பங்களோடு Dexter தொடர் இந்த seasonனோடு முடிவடைகிறது. சாதாரணமாக Dexter போன்ற ஒரு கதாபாத்திரம் எப்படி முடியுமோ அப்படித்தான் முடித்துள்ளார்கள்.

எனக்கு பிடித்த தொடர்களில் இதும் ஒன்று. பிடித்த காட்சிகள் பல இருந்தாலும், Debra, காவல் நிலையம் வந்து Quinனிடம் தான் செய்த ஒரு கொலையை பற்றி சொல்ல, அதை நம்பாத Quin, Dexterக்கு தகவல் தர, அங்கு Dr.Vogel உடன் வரும் Dexter Debraவை அங்கிருந்து கொண்டு செல்லும் அதிரடி காட்சி.

Dexter தொடர் முடிந்தது வருத்தமாக இருந்தாலும், Pretty Little Liars மாதிரி ஜவ்வாக இழுத்து சலிப்படைய செய்யாமல்  முடித்தது சந்தோஷம் தான். இது ஒரு நல்ல த்ரில்லிங்கான தொடர். அதனால் 8 சீசன் பற்றி எழுதும் போது spoilers இருக்க கூடாதென்று மிகவும் கவனமாக எழுதியுள்ளேன்.

Dexter தொடருக்காக உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள்.

Criminal Minds - TV series


imdb rating 8 - http://www.imdb.com/title/tt0452046/

CSI மாதிரி இன்னொரு தொடர். FBIயின் BAU (Behavioral Analysis Unit) என்கிற ஒரு குழுவின் உதவியால், உள்ளூர் போலீஸ் குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்று ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது ரொம்ப இக்கட்டான சூழ்நிலையை தவிர, இவர்களாக எந்த குற்றத்தையும் விசாரிக்க மாட்டார்கள். உள்ளூர் போலீஸ் இவர்களின் உதவியை நாடினால் விமானத்தில் வந்து குற்றவாளிகளை கண்டு பிடித்து கொடுத்து, மறுபடியும் விமானத்தில் திரும்பி விடுவார்கள்.

விமானம் புறப்படும் போதும், இறங்கும் போதும், அந்த எபிசோடிற்கு சம்பந்தப்பட்ட, அந்த எபிசோடில் முக்கிய பங்காற்றும் ஒருவர் ஏதாவது ஒரு தத்துவத்தை சொல்வார். இவர்களுக்கான தனிப்பட்ட அந்த விமானத்தில் தொலைபேசியில் பேசுவார்கள், ஏன் webcamல் chat கூட செய்வார்கள்.

குழுவில் 7 பேர். 4 ஆண்கள், 3 பெண்கள். ஒவ்வொரு எபிசோடில் ஒவ்வொருவர் முக்கிய பங்காற்றுவார். ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு குற்ற சம்பவத்தை பற்றியது. ஒரு சில நேரங்களில் ஒரு குற்ற சம்பவம் இரண்டு எபிசோடாக வரும்.

எந்த விதமான தகவலாகட்டும் அவர்களின் கணிப்பொறியிலிருந்து எடுக்கிறார்கள். பெற்றோர்களினால் தனித்து விடப்பட்ட குழந்தைகள், பெற்றோர் இறந்து விட்டதால் வேறொருவரிடம் வளரும் குழந்தைகள், போரினால் மனநலம் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள்,   சிறு வயதில் தான் அனுபவித்த கொடுமைகளினால் எப்படி பட்ட serial killerகளாகவும் மாறி விடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். அவர்களின் சமுதாயம், அந்த வாழ்க்கை முறை தான் அவர்களை அப்படி மாற்றுகிறது என்று நினைக்கிறேன்.

Dexterல் Debraவின் இரண்டு boyfriends இதில் serial killerகளாகவும், Lie to meல் Lightmanன் மகளாக வருபவர் கொலை செய்யப்படுபவராகவும் வருகிறார்கள். Dexterன் அப்பா கூட வருகிறார்.

ஒரு குடும்பமாக வேலை செய்கிறார்கள், வாழ்கிறார்கள். ஒருவருக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உயிர் கூட தர தயாராகயிருக்கிறார்கள்.

Jennifer Jareau (JJ), எந்த குற்றத்தை அவர்களின் குழு ஆராயவேண்டும் என்று தேர்வு செய்து, அதை பற்றி தன் குழுவிற்கு விளக்கமளிப்பார். கொஞ்ச நாள் அந்த கதாபாத்திரம் காணாமல் போக, Penelope Garcia (இவர் அந்த குழுவின் Hacker) செய்து வருகிறார். குறிப்பாக ஏன் இதை சொல்கிறேனென்றால் JJ ஒரு குற்றத்தை விளக்கும் போது, குரலில், முகத்திலிருக்கும் ஒரு கவலை இந்த பெண்ணிடம் சுத்தமாகயில்லை. வசூல் ராஜா MBBS, பிரகாஷ் ராஜ் கதாபாத்திரம் தான் ஞாபகம் வந்தது.

ஒன்பதாவது Season போய் கொண்டிருக்கிறது.

Vikas Swarup

Q & A

இக்கதையை படமாக (Slumdog Millionaire) பார்த்திருந்தாலும், ஆவலோடு ஆரம்பித்தேன். படத்தின் கதைக்கரு ஞாபகமிருந்தாலும் காட்சிகள் ஞாபகமில்லை.

ஒவ்வொரு கேள்விக்குமான பதில் வாழ்கையின் மறக்க முடியாத ஒரு சம்பவத்தில் இருக்கும். இரண்டு கேள்வி வரை கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்த மாதிரி இருந்தது. அப்புறம் சலிப்பு தட்டியது. படமே பல மடங்கு பரவாயில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் நான்கு gay கதாபாத்திரங்கள் ஏனோ?


Six Suspects

தில்லியில் கொலை செய்யப்பட்ட Jessica Lalயை மையமாக வைத்து "No one killed Jessica" திரைப்படம் வந்தது. இந்த நாவலும் அந்த கொலை சம்பந்தப்பட்டது தான். Ruby Gillயை (Jessica Lal) கொலை செய்த உத்திரப்பிரதேச உள்துறை அமைச்சரின் மகன் Vicky Rai (Manu Sharma)யை நீதி மன்றம் விடுதலை செய்கிறது. அதை கொண்டாட Vicky Rai ஏற்பாடு செய்யும் விருந்தில், Vicky Raiயை கொலை செய்தது யார்? என்று கதை நகருகிறது.

Vicky Raiன் கொலையில் ஆறு பேரின் மேல் சந்தேகம் வருகிறது. முதலில் அந்த ஆறு பேரை பற்றியும் அதன் பின், அவர்கள் Vicky Raiயை ஏன் கொலை செய்திருக்கணும்? என்ற காரணம், தடையங்கள், உண்மையில் கொலை செய்தது யார்? என்று கதை நகருகிறது.

நாவலை படிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே சலிப்பு தட்டியது. நிறுத்திவிடலாமா? என்று கூட நினைத்தேன். ஏன்? என்று தெரியவில்லை, கொஞ்சம் கட்டுபடுத்திக்கொண்டு படித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு வழியாக இன்று(10-10) இந்நாவலை முடித்தேன். இந்நாவலில் ஆறு பகுதிகள்(Murder, Suspects, Motives, Evidence, Solution, Confession) உள்ளது. முதல் மற்றும் கடைசி பகுதி ஒரே ஒரு chapter மட்டும் தான். Motives வரை கதை மிகவும் மெதுவாக செல்வது மட்டுமில்லாமல் சலிப்பை ஏற்படுத்துகிறது. Evidenceலிருந்து கதை கொஞ்சம் விறுவிறுப்பாக செல்கிறது.

Wednesday, September 4, 2013

தமிழின துரோகிகள்

ஈழத்தில் நடந்த கோரங்களையும், அதற்கு துணை புரிந்த மானங்கெட்ட, ஈன பிறவிகளுக்கு நாம் ஒரு இனத்திற்கு, அப்பாவி மக்களுக்கு துரோகம் செய்கிறோம் என்பது தெரியும். இந்த பதிவு முதுகில் குத்திய அந்த பேடிகளை பற்றியதில்லை. தன் இனத்திற்கு துரோகம் செய்கிறோம் என்பதை தெரியாமல் (தெரிந்தும் இருக்கலாம்) வாழும் சில/பல துரோகிகளை பற்றியது.

போன வாரம், நான் வேலை செய்யும் அலுவலகத்தில், ஒரு பயிற்சி. வேறொரு நிறுவனத்திலிருந்து வந்த பெண் ஒருவர் அந்த பயிற்சி கொடுத்தார். இடைவெளியில் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது, சக ஊழியர்கள் அந்த பெண்ணிடம், அவரின் சொந்த வாழ்கையை பற்றி கேட்க, அவரும் நான் இந்த ஊரில் படித்தேன், அந்த ஊரில் இரண்டு வருடம், இந்த ஊரில் சில வருடம் வேலை செய்தேன் என்று சொல்லி கடைசியில் "நான் தமிழ், ஆனால் தமிழ் தெரியாதென்று" சொன்னார். அவர் சொன்னது, "so sad na". அவர் சொன்ன விதத்திலிருந்து, எனக்கு அவர் வருத்தப்பட்டதாக தெரியவில்லை.

அப்படி அவர் உண்மையாக வருத்தப்பட்டதாக இருந்தால், அவர் தமிழை கற்றுக் கொண்டிருக்கலாம். தமிழ் ஒன்றும் அவ்வளவு கடினமான மொழி அல்ல. பெங்களூரில் எனக்கு தெரிந்த ஒருவர் தமிழ் நண்பர்களிடம் பேசியும், தமிழ் படங்களை பார்த்தும் தமிழ் கற்றுக் கொண்டுள்ளார். நான் அந்த பெண்ணை குற்றம் சொல்ல வில்லை. ஒரு வேளை, அவரின் தந்தைக்கு அடிக்கடி மாற்றலாகியிருக்கலாம். அதனால் அவருக்கு தமிழ் கற்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம். அவர் தந்தை, வேலைக்காக வேறு இடத்திற்கு சென்றது தப்பில்லை. ஆனால் அதற்காக தன் தாய் மொழி வேண்டாம் என்று விடுவதென்பது எந்த விதத்தில் நியாயம்?

அவர்கள் குடும்பத்தில், அவர் தந்தையோடு தமிழ் அழிந்தது. இந்த பெண்ணிற்கு தமிழ் தெரியாது, தமிழின் அருமை தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. அதனால் அந்த பெண்ணின் வாரிசுகள்(அதாவது அடுத்த தலைமுறை) தமிழ் கற்றுக் கொள்வார்கள் என்பது சந்தேகம் தான். இவர்கள் மட்டுமில்லை, இவர்களை போல நான் பல பேரை சந்தித்திருக்கிறேன். அவர்கள் சொல்லும் ஒரே பதில், "வேலைக்காக அப்பா அந்த ஊருக்கு சென்றார், நான் அங்கு படித்து, வளர்ந்தேன். அதனால் எனக்கு தமிழ் தெரியாது". ஆனால் வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவர் இப்படி சொல்வதை நான் கேட்டதில்லை.

அவர்களுக்கு அவர்கள் செய்யும் தவறு/துரோகம் தெரியவில்லை. இந்த மாதிரி வேலைக்காக வேறு இடத்திற்கு செல்பவர்கள் எல்லாம் தமிழ் வேண்டாம் என்று விட்டால், தமிழ் இன்னும் சிறிது காலங்களில் அழிந்து விடும். தன் இனமும், மொழியும் அழிய தானும் ஒரு காரணம் என்று தெரிந்தோ இல்லை தெரியாமலோ இருக்கும் இவர்களும் என்னை பொறுத்தவரை தமிழின துரோகிகள் தான்.

அழியா நினைவுகள்... 3

6.2 படத்தில் வரும் ஒரு நகைசுவை காட்சி, "வடிவேலுவிடம், சிங்கமுத்து சில அடையாளங்களை சொல்லி அந்த ஆள் தெரியுமா? என்பார். வடிவேலு தெரியாதென்று சொல்ல, சிங்கமுத்துவும் அவர் அடியாட்களும் வடிவேலுவை அடிப்பார்கள்". இது என் வாழ்வில் நடந்த ஒன்று, ஆனால் வேறு விதமாக.

Updated on Mar 12: நீண்ட இடைவெளிக்கு பின், இன்றுதான் blogஐ திறந்தேன். இந்த நான்கு மாதங்களிலும் ஏகப்பட்ட நிகழ்வுகள். கொஞ்சம் நினைத்து பார்த்தால், ஒரு விதத்தில் என்னை சந்தோசபடுத்தியவைகள்.

இரண்டரை - மூன்று வருடங்களில் நடந்தவைகளில் சிலவற்றை உறவினர்கள், சிலருடன் பகிர்ந்துக்கொள்ளும்படியான சூழ்நிலை. என்னை எந்தளவுக்கு புரிந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பமாக இருந்தது. என் குடும்பத்தை விட என் நண்பர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தந்திருக்கிறேன். ஆனால் USலிருந்து தோற்று திரும்பியபோதும், இன்றைய மிக மோசமான நிலையிலும் என்னை புரிந்துக்கொண்டு பக்கபலமாக இருக்கிறவர்கள் என் குடும்பமும் உறவினர்களும் தான்.

இப்போதெல்லாம் கூட 1100, 1200 மணிக்கு தூங்கி, 0330, 0400 மணிக்கு விழிப்பு வந்து, என்ன செய்வது என்று தெரியாமல், பலவற்றை நினைத்து பார்க்க விரும்பாமல் புரண்டு புரண்டு படுத்து, எப்போது தூங்கினேன் என்று தெரியாமல் 0830 மணிக்கு எழுந்து அலுவலகம் சென்றுக் கொண்டிருக்கிறேன்.

இன்றும் அப்படிதான். 0330 மணிக்கு எனது, என் நண்பர்களின் முகபக்கங்களை பார்த்துவிட்டு, (இரண்டு வருடங்களுக்கு முன் இருந்த மனநிலையில் என் முகபக்கத்தை அழித்து விட்டேன். சில மாதங்களுக்கு முன் தான் மறுபடியும் முகபக்கத்தை திறந்தேன். இப்போது அதில் பிரெஞ்சு வகுப்பு தோழர்கள் ஒரு சிலரும், முகப்பக்கம் வழியாக ஒரு சிலரும் நண்பர்களாக இருக்கிறார்கள்) மறுபடியும் படுக்க போன போது blog பற்றி ஞாபகம் வர, வந்தேன்.

புலம்பலுக்கு காலம் தான் முற்றுப்புள்ளி வைக்கணும், வைக்கும் என்று நம்புகிறேன். சரி. இந்த நான்கு மாதங்களில் நடந்த நல்ல விஷயங்கள், இந்த வருடத்தின் தொடக்கத்தில்(அதாவது நான் 30தை கடந்த பின்) பதவி உயர்வு தந்தார்கள். ஒரு மாதத்திற்கு முன், இப்போது செய்துக்கொண்டிருக்கும் projectன் TL ஆக்கினார்கள். போன வாரம் Spot Award தந்தார்கள். சொந்த வாழ்கையில் தோற்றாலும், பணியிலாவது சொல்லிக்கொள்ளும்படி இருக்கிறேன்.

Tuesday, August 20, 2013

Sidney Sheldon's Novels (Part 1)

The Doomsday Conspiracy
நான் படித்த முதல் Sidney Sheldonன் நாவல் மட்டுமல்ல, முதல் ஆங்கில நாவலும் கூட இதுதான். கல்லூரியில் படிக்கும் போது, சகமாணவன் ஒருவர் சொல்ல, இந்த நாவலை வாங்கிப் படித்தேன். அவருக்கு என் நன்றி. இந்த நாவலின் கதைக்கரு சுற்றுச்சுழல் பற்றியது என்று நினைக்கிறேன். படித்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் சரியாக ஞாபகமில்லை. இந்நாவல் இரண்டு பகுதி கொண்டது.

1. வேட்டையாடுதல் - ஒரு அதிகாரியிடம் ஒரு சுற்றுலா குழுவில் இடம் பெற்றிருந்தவர்களை கண்டு பிடிக்க சொல்வார்கள். அந்த குழுவில் இருந்தவர்கள், அச்சுற்றுலா மூலமாகதான் அறிமுகமானவர்கள். அதாவது அச்சுற்றுலாவிற்கு முன் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லாதவர்கள். அந்த அதிகாரி கிடைக்கும் ஒரு தகவலை வைத்து, அச்சுற்றுலா குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவரை கண்டுபிடித்து, அவர் மூலமாக மற்றொருவர், அந்த மற்றொருவர் மூலமாக இன்னொருவர் என்று அவர் கண்டுபிடிப்பது சுவாரசியமாக இருந்தது.

2. வேட்டையாடப்படுதல் - தான் கண்டுபிடித்த சுற்றுலா குழுவை சேர்ந்தவர்கள் என்ன ஆனார்கள்? என்று தெரிந்துக்கொள்ளும் அந்த அதிகாரி, தன்னையும் சிலர் துரத்துகிறார்கள் என்று புரிந்துக்கொள்கிறார். அச்சுற்றுலா குழுவை சேர்ந்தவர்கள் என்ன ஆனார்கள்?, ஏன் அந்த அதிகாரியை துரத்துகிறார்கள்? அவர் எப்படி தப்பித்தார்? என்பதெல்லாம் சுவாரசியமாக சொல்லப்பட்டுள்ளது.


The Naked Face
The Soulkeepers நாவல் படித்து முடித்தப்பின், எந்த புத்தகத்தை படிப்பது என்று ஒரு குழப்பம். தொடர்ந்து ஏதாவது ஒரு நாவல் படித்து கொண்டிருந்ததால் கொஞ்ச நாள் இடைவெளி விடலாமென்று நினைத்தேன். ஆனால் தினமும் பேருந்து பயணம், எதையாவதை படித்தேயாக வேண்டும் என்று என்னை தள்ளியதால், இந்த நாவலை ஆரம்பித்தேன்.

Sidney Sheldonன் முதல் நாவலாகயிருந்தாலும் சுவாரசியமாகவும், திரில்ங்காகவும் இருந்தது. ஒரு மனோதத்துவ மருத்தவரிடம் வரும் ஒரு நோயாளியும், அந்த மருத்துவரிடன் வேலை செய்யும் ஒரு பெண்ணும் கொலை செய்யப்பட, போலீஸ் மருத்துவரை சந்தேகப்பட, மருத்துவர், துப்பறியும் நிபுணரிடன் செல்கிறார். இதற்கு மேல் சொன்னால், அது spoiler ஆகிவிடும். நீங்கள் படிக்கும் போது அந்த சுவாரசியம் விட்டு போய்விடும்.

இந்நாவலின் இறுதி கட்டத்தை படிக்கும் போது, இரண்டு விசயங்கள் ஞாபகம் வந்தது. ஒன்று, முதல்வன் படத்தில் இறுதியில், அர்ஜுன் மணிவண்ணனிடம், "கடைசியில் என்னையும் அரசியல்வாதியாகிட்டாங்களே!" என்பார். இரண்டாவது John Grishamன் The Racketeer நாவலில் எனக்கு பிடித்த வரிகள், "I guess under the right circumstances, a man will do just about anything".

Monday, August 12, 2013

Dexter - TV Series (Part 3)

Dexterஆக நடிக்கும் Michael C.Hallக்கும், தங்கை Debraவாக நடிக்கும் Jennifer Carpenterக்கும் இத்தொடரில் நடிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு கல்யாணம் செய்துக்கொண்டு ஓரிரு வருடத்தில் பிரிந்திருக்கிறார்கள். அண்ணன் தங்கையாக நடித்தவர்களா? என்று நினைக்கும் போது தான் விஜய் tvல் உன்னை போல் ஒருவன் சிறப்பு நிகழ்ச்சியில் கமல் சூர்யாவிடம், ஒரு விதத்தில் நீ ஸ்ருதிக்கு சித்தப்பா முறை என்று சொன்ன ஓரிரு வாரங்களில் ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவிற்கு ஜோடி ஸ்ருதி என்று அறிவித்தது நினைவுக்கு வந்தது.

Season 06
Dexter, ஒருவரை குற்றவாளியாக சந்தேகப்பட, அவரோ நல்லவராகயிருக்க இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். போலீஸ் துறையினுள் நடக்கும், அரசியலினால் Batista எதிர்பார்க்கும் Lieutenant பதவி Dexterன் தங்கை Debraவுக்கு கிடைக்கிறது. Batistaவும் அதை சகஜமாக எடுத்துகொண்டு Debraவுக்கு கீழ் பணிபுரிகிறார். Debra தன்னுடைய ஐந்தாவது boy friend Detective Quinn கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று கேட்டதற்கு, Quinnஐ பிரிகிறாள்.

இந்த seasonல் அந்நியன் படத்தை போல, Book of Resolutionஐ பின் பற்றி ஒரு கல்லூரி ஆசிரியரும், அவருக்கு உறுதுணையாக அவர் மாணவனும் கொலைகளை செய்கிறார்கள். போலிசும் "The DoomsDay Killers"ன்னு பேரை வைத்து தேட, எப்பவும் போல போலீசிடம் கொலையாளிகளை பற்றிய ஒரு தடயத்தை மறைத்து Dexter கொலையாளிகளை கண்டுபிடிக்கிறான்.

இதற்கிடையில், Dexterன் புதிய நண்பர் கொலை செய்யப்படுவதால் Dexterன் கவனம் நண்பரின் கொலை மேல் திரும்புகிறது. அதற்குள், DDK இன்னும் சில கொலைகளை செய்கிறார்கள். Dexter தன் நண்பனை கொலை செய்தவனை கொன்று விட்டு, DDKயை கொலை செய்வதை Dexterக்கு மிகவும் வேண்டப்பட்டவர் பார்த்துவிடுவதோடு இந்த season முடிவடைகிறது.

Season 07
Dexter, DDKஐ கொல்வதை பார்த்தவருக்கு தன்னை பற்றி சொல்கிறான். அவர் இதற்கு மேல் நீ யாரையும் கொல்லக்கூடாது, நான் உன்னை 24 மணி நேரமும் கண்காணிப்பேன் என்று சொல்ல Dexterம் வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறான்.

இதுவரை Dexterஆல் கொல்லப்பட்டவர்களை யாரும் தேடுவதில்லை. ஆனால் இந்த, seasonன் முதல் episodeல் போலீஸ்காரரை கொல்லும் மாபியா கூட்டத்தை சேர்ந்த ஒருவனை Dexter கொல்ல, அவனது கூட்டாளி Dexterஐ கொல்ல துரத்துகிறான்.

DDKஐ கொல்லுமிடத்தில் Dexter தவறவிடும் ஒரு தடயத்தை வைத்து, Deputy Chief Matthewsஐ மிரட்டி Captain பதவிக்கு வரும் María LaGuerta அந்த கொலையாளியை அதாவது Dexterஐ தேடுகிறார்.

Dexter பயன்படுத்தும் netwrangle என்கிற தேடுபொறியை (search engine) நான் googleல் தேடும்போது தான் தெரிந்தது அது போல் ஒன்று இல்லை என்றும், இந்த தொடரில் பயன்படுத்தும் ஒன்று என்று.

Thursday, August 8, 2013

அழியா நினைவுகள்... 2

பிரெஞ்சு மொழி வகுப்பில் 15 - 20 நிமிடங்கள் இடைவெளி இருக்கும். நாங்கள் எதிரிலிருக்கின்ற ஒரு உணவகத்தில் காலை உணவருந்துவோம். நேற்று அந்த உணவகத்தில், என் சகதோழி ஒரு நாள் கூட விடுப்பில்லாமல் வகுப்பிற்கு வருகிறாயே நீ என்ன ஜென்மமோ என்றார். ஆனால் அவருக்கு தெரியாது நான் ஏன் தவறாமல் வகுப்பிற்கு வருகிறேன் என்று. வகுப்பிலிருக்கும் அந்த இரண்டு மணி நேரம் எனக்கு சுகத்தை தருகிறதோ இல்லையோ ஆனால் வீடு தரும் வெறுப்பை, அந்த ஒரு வித உணர்வை தருவதில்லை.

நாளையோடு இந்த வகுப்பும் முடிவடைகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த இரண்டு மணி நேரத்தை சமாளிக்க ஏதாவது வழி கண்டுபிடிக்க வேண்டும். அடுத்து A2 சேரலாம் என்றால், வரும் திங்கட்கிழமையே A2ஐ தொடங்குகிறார்கள். A1ன் தேர்வு முடிவு தெரியாமல் A2 சேர முடியாது.

கல்லூரியில் படிக்கும் போது, கடைசியில் பெஞ்சில் தான் உட்காருவேன். என் பக்கத்தில் உட்காரும் சக மாணவன் கெட்ட வார்த்தை ஒன்றை சாதாரணமாக பயன்படுத்துவார். ஆனால் அவர் மட்டுமில்லை, வேறு யாருமே என்னிடம் தவறாக பேசியதில்லை போன வருடம் வரை.

இத்தனை வருடத்திற்கும் சேர்த்து வைத்து Practical Man பேசிவிட்டார். ஆங்கில நாவல்களில் அந்த வார்த்தையை படிக்கும் போதெல்லாம் பற்றிக்கொண்டு எறியும். இப்போதெல்லாம் எந்த பிரச்னைக்காவது customer careக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அந்த வார்த்தை இல்லாமல் அனுப்புவதில்லை. என் தினசரி வாழ்வில் என்னை மீறி  பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

நல்லா,  நிம்மதியா தூங்கி இரண்டு வருடத்திற்கு மேல் ஆகிறது. சில நாட்கள், அலுவலகத்திலிருந்து பேருந்தில் வீட்டிற்கு வரும் பொழுது, நான் இறங்க வேண்டிய நிறுத்ததிற்கு, 3 அல்லது 4 நிறுத்தம் முன் தூக்கம் வரும். அந்த 3 அல்லது 4 நிமிட தூக்கம் ஒரு வித நிம்மதியை தரும். அந்த நிம்மதியான தூக்கத்தை யாராவது நிரந்தரமாக தந்தால் நான் சேர்த்து வைத்துள்ள பணம் முழுவதையும் தந்து விடுவேன்.

"தலைவழியும், வயிற்று வழியும் தனக்கு வந்தால் தான் தெரியும்" - இதில் தலைவழி, வயிற்று வழின்னு சொன்னது ஒரு உதாரணதிற்கு தான். ஏனெனில் தலைவழி, வயிற்று வழி மட்டுமில்லை ஒவ்வொரு வழியும் தனக்கு வந்தால் தான் தெரியும். வெளியில் இருந்து பார்க்கும் பொழுது சாதரணமாக தான் தெரியும். அனுபவிக்கும் போது தான் அதன் வலிமை புரியும்.
 

Thursday, August 1, 2013

Dexter - TV Series (Part 2)

Season 02
Dexter, கடலில் போட்டு வைத்த, கொலை செய்தவர்களின் உடல் பாகங்களை கொண்ட பிளாஸ்டிக் பைகள் போலீசுக்கு கிடைக்க, "Bay Harbor Butcher" என்று பெயரிட்டு கொலையாளியை தேட ஆரம்பிகிறது. தன் அண்ணனை கொலை செய்துவிட்டு, குழப்பத்திலிருக்கும் Dexterன் மறுப்பக்கத்தை ஏற்கனவே Dexterன் மேல் சந்தேகப்பட்ட ஒரு போலீஸ்காரர் தெரிந்துக்கொள்கிறார். போலீசிடமிருந்தும், தன்னை பற்றி தெரிந்துக்கொண்ட  போலீஸ்காரரிடமிருந்தும் Dexter எப்படி தப்பிக்கிறார் என்பது இந்த season.

Dexter தான் சேகரித்து வைத்த குற்றவாளிகளின் இரத்த துளிகளை இழக்கிறார்.

Season 03
Dexterக்கு ஒரு வக்கீலின் அறிமுகம் கிடைக்கிறது. அவரும் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிக்கும் போது தனக்கு ஏற்படும் கோபத்தையும், ஆதங்கத்தையும் சொல்ல Dexterம், அந்த வக்கீலும் அண்ணன் தம்பி மாதிரி ஒரு உறவு ஏற்படுகிறது. ஒரு சமயத்தில் Dexterன் மறுப்பக்கத்தை அந்த வக்கீல் தெரிந்துக்கொள்ள, இருவரும் சேர்ந்து கொலை செய்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் அந்த வக்கீல் சுயநலத்திற்க்காக கொலை செய்வதை தெரிந்துக்கொள்ளும் Dexter, அவரை எப்படி கொலை செய்கிறார் என்று இந்த seasonல் வருகிறது. தன் காதலி கற்பம் என்று தெரிந்துக்கொள்ளும் Dexter, அவரை  திருமணம் செய்துக்கொள்கிறார்.

Season 04
வேறொரு serial killerஆல் தன் தங்கை தாக்கப்பட, எப்பவும் போல போலீசுக்கு முன் கண்டு பிடிக்கிறார்.(Pretty Little Liars போல, இதிலும் போலீஸ் கொஞ்சம் டம்மி தான்) அந்த கொலையாளிக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளும் Dexter, அந்த கொலையாளியிடமிருந்து எப்படி குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு கொலையும் செய்வது என்று கற்றுக்கொள்ள அவனை கொலை செய்வதை தள்ளிப்போடுகிறான். 

அப்படி தள்ளிபோடுவது Dexterக்கு பிரச்சினையாக வர, ஒரு நல்ல நாளில் அவனையும் கொன்று விட்டு வீட்டுக்கு வரும் Dexterக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த அதிர்ச்சியோடு Season 04 முடிவடைகிறது. அந்த சஸ்பென்சை பொறுக்க முடியாமல் (பள்ளியில் படிக்கும் போது, மதிய உணவிற்கு வீட்டுக்கு வருவேன். அப்போது 0100க்கு ஏதோவொரு தொடர், ஏவிஎம் தயாரித்தது நினைக்கிறேன். வெள்ளிக்கிழமை தான் தெரியும் அந்த வாரம் அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை நடந்தது எல்லாமே கனவு என்று, அது போல இதிலும் அந்த அதிர்ச்சி கனவாக இருக்குமோ? என்று ஒரு சந்தேகம் வந்ததால்) Season 05 Episode 01ஐ பார்த்துவிட்டு 0200amக்கு தான் தூங்கினேன்.

Season 05
இன்னொரு விதமான கொலையாளியை போலீஸ் கண்டுபிடிக்கும் முன், அந்த கொலையாளியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உதவியால் அந்த கொலையாளியையும், அவன் கூட்டாளிகளையும் Dexter கொலை செய்கிறான். 

Dexter - TV Series (Part 1)

imdb link: http://www.imdb.com/title/tt0773262/ 
Rating: 9

என்னோடு பிரெஞ்சு மொழி பயிலும் நண்பர்கள் மூலம் அறிமுகமான இன்னொரு ஆங்கில தொடர். அவர்கள் serial killer கதையென்றதும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. நண்பர் ஒருவர் கொடுத்தார். சில நாட்களுக்கு முன் தான் ebayவில் 7 seasonகளின் விலை Rs.5000க்கும் மேல் என்று பார்த்ததும், உங்களால் எனக்கு Rs.5000 மிச்சம் என்றேன். சரி தொடருக்கு வருவோம்.

நான் பார்க்கும் ஆறாவது தொடர். இதற்கு முன் பார்த்த ஐந்து தொடரும் வேறுவேறு கதை களம் கொண்டவை. அது போலத்தான் இதுவும். இத்தொடரில் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் அண்ணன் தங்கை உறவு - "தங்கைக்கு ஏதாவதென்றால், கொலை கூட செய்ய தயங்காத அண்ணன், அண்ணனை விட்டு கொடுக்காத தங்கை".

த்ரில்லர், சஸ்பென்ஸ் தொடர் என்பதால் என்ன எழுதுவதென்று தெரியவில்லை. ஒரு வேலை நீங்கள் அத்தொடரை பார்க்கும் போது நான் அனுபவித்த அந்த உணர்வு கிடைக்காமல் போய்விடுமோ? என்ற எண்ணம்.

இதுவரை 4 season பார்த்துள்ளேன். Dexter சாதாரண வாழ்கை வாழ ஆசைபடுவது, சில குற்றவாளிகளை சட்டத்திலிருந்து  தப்பிக்க விட்டு கொலை செய்வது, தங்கை, காதலி, காதலியின் கொழந்தைகளின் மீதான ஈர்ப்பு, சில விசங்களை அணுகும் முறை என்று இத்தொடர் நன்றாகத்தான் உள்ளது. Debraக்கு(Dexterன் தங்கை) ஒவ்வொரு seasonனிலும் ஒவ்வொரு காதலன்.

Season 01
ஒரு கொலை சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஒரு குழந்தையை ஒரு போலீஸ்காரர் காப்பாற்றி, தன் குழந்தையாக தத்தெடுத்துக் கொள்கிறார். தன் அம்மாவின் கொலையை நேரில் பார்த்த அந்த குழந்தையோ, கொலையை ரசிக்க ஆரம்பித்து, யாரையாவது கொலை செய்ய துடிக்கிறான். அந்த மனநிலையை மாற்ற முடியாதென்பதால், அந்த போலீஸ்காரர் அதாவது அப்பா, தவறு செய்து சட்டத்திலிருந்து தப்பிக்கும் குற்றவாளிகளை ஆதாரங்கள் இல்லாமல் எப்படி  கொலை செய்து தப்பிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிறார். அவனும் பல பேரை கொலை செய்து அவர்கள் ரத்த துளியை தான் செய்யும் வேலைக்கான பரிசாக சேகரிக்கிறான். Miami போலீசில் அவன் தங்கையும்(போலீஸ்காரரின் பெண்), forensics பிரிவில் அவனும் வேலை செய்கிறார்கள்.

இந்நிலையில், மியாமியில் தொடர் கொலைகள் நடக்கிறது. ஒவ்வொரு கொலையிலும் Dexterக்கு(கதையின் நாயகன்) கிடைக்கும் துப்பு, Dexterவுடன் சம்பந்தப்பட்டு இருக்கிறது. அந்த கொலைகாரனுக்கு "Ice Truck Killer" என்று பெயரிட்டு மியாமி போலீஸ் ஒருபுறமும், Dexter மறுபுறமும் தேடுகிறார்கள். இடையிடையே Dexterன் வாழ்கையில் நடந்த விசயங்கள் flashbackஆக வருகிறது. கடைசியில் Dexter அந்த கொலைகாரனை பிடித்து, Dexterக்கும் அவனுக்கும் உள்ள உறவுவை பற்றி தெரிந்துக்கொள்கிறான்.

My Brother's Wedding

எழுதியவர்: Andaleeb Wajid. பெங்களுருவை சேர்ந்தவர்.

இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒரு குடும்பம். அவர்களுக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன். பெரியவள், காதலித்து திருமணம் செய்து கொண்டவள். அன்பான கணவன். பிள்ளை பெற்றால் அழகு போய்விடும் என்று பிள்ளை பெறுவதை தள்ளி போடுகிறாள். அவள், திருமணமானவள் என்பதால் வீட்டில் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். அவளும் அதிகாரம் செய்துக்கொண்டு அலைகிறாள். சில பெண்கள் அப்படிதான் திருமணமானதும் தனக்கு இரண்டு கொம்பு முளைத்து விட்டதாக நினைத்து அடாவடித்தனம் செய்கிறார்கள். பெரியவளுக்கும் சின்னவளுக்கும் ஏழாம் பொருத்தம். சிறுவயதிலிருந்தே பெரியவள், சின்னவளை மட்டம் தட்டுகிறாள்.

மகனிற்கு திருமணம் செய்ய பெண் தேடுகிறார்கள். சின்னவள் திருமணமாகாதவள் என்பதால் அவளை அண்ணனின் கல்யாண விசயத்தில் கலந்தாலோசிப்பதில்லை. அவளோட உணர்வுகளை பகிர்ந்துகொள்ள சரியான துணை இல்லை. அதனால் வெறுத்துப்போய் blog எழுத ஆரம்பிக்கிறாள். Blogல் தன் பெயரையும், தன்னை சேர்ந்தவர்களின் பெயரையும் குறிப்பிடாமல் ஆங்கில எழுத்துக்களை (Alphabets), அதாவது Q, R, S, T என்று பயன்படுத்துகிறாள்.


புது துணி எடுப்பது, நிச்சயதார்த்தம், மணமகனின் பழைய காதல், சின்னவள் எழுதும் bolgனால் வரும் பிரச்சனைகள் என்று திருமணம் முடியும் வரை நடக்கும் எதிர்பாராத சம்பவங்களை பற்றிய கதை. நன்றாக உள்ளது. என் அக்காவிற்கு இந்த புத்தகத்தை கொடுத்துள்ளேன். அவரின் feedbackஐ கேட்க வேண்டும்.

அழியா நினைவுகள்... 1

இரண்டு வருடமாக வாழ்கையில் நடந்த/நடந்து கொண்டிருக்கும் விரும்பத்தகாத, அருவருப்பான சம்பவங்களிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக வெளியே வந்துக் கொண்டிருக்கிறேன். நன்றாக உறங்கி இரண்டு வருடமாகிறது. நிம்மதியான அந்த பழைய தூக்கம் திரும்ப கிடைக்கும் என்று தோன்றவில்லை. நடந்த சம்பவங்களும், அதற்கான காரணங்களும் எனக்கும், என்னை ஆட்டுவிக்கும் கடவுளுக்கும் மட்டும் தான் தெரியும். என் தவறா? இல்லை என் விதியா? தெரியவில்லை. வாழ்கையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எனக்கு புரிய வைத்து, என் மீது எனக்கு இருந்த நம்பிக்கையை குறைத்த சம்பவங்கள் அவை. சில உறவினர்களிடமிருந்து, சில நண்பர்களிடமிருந்து என்னை விலக வைத்தவை.

வெறுத்துப்போய், வயிற்றெரிச்சலில் இருப்பவனை குடித்து விட்டு கிண்டல் செய்தவரையும், "I 'm a practical man" என்பதற்கு அர்த்தம் தெரியாமல், அதற்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் நடந்துக்கொண்டவரையும் என் வாழ்நாளில் மறுபடியும் பார்க்கவே கூடாதென்றிருக்கிறேன்.

திருக்குறளில் 1330 குறள்கள் இருந்தாலும், பள்ளிப்பாடத்தில் இருக்கும் முக்கியமான ஒரு குரல்,
"தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு"
இதையெல்லாம் எதற்காக படிக்கிறோம் என்று தெரியாமல் படித்துவிட்டு "I m educated" என்று சொல்லிக்கொண்டு அலைபவர், ஏதாவது ஒரு இக்கட்டான சமயத்தில் செய்வதறியாமல் செய்த தவறுக்கு பெற்றோர்களை குற்றம் சொல்லி, அவர்கள் வளர்ப்பு சரியில்லை என்று சொல்லும் மூடர்கள்... என்ன சொல்வது?

தோற்றத்தையும், அசிங்கப்பட்டதையும் பகிர்ந்து கொள்பவனல்ல நான். அப்படியே பகிர்ந்தாலும் என்னை பார்த்து பரிதாப்படலாம் இல்லை என்னை கேவலமானவனாக நினைக்கலாம். அந்த இரண்டையுமே நான் விரும்பவில்லை.

சாதரணமாகவே என்னை பாதிக்கும் விசயங்களை எளிதில் மறக்கமாட்டேன். அதனால் நடந்தவற்றை மறக்க புத்தகங்கள், ஆசிரமம் என்று பலவற்றை நாடினேன். பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்யும் போது படிக்க tabletஐ வாங்கினேன். இந்த இரண்டு வருடங்களில் நான் படித்த புத்தகங்களின் எண்ணிக்கை 100க்கும் மேல். இச்சம்பவங்களாலும், வகுப்பெடுத்த ஆசிரியையை பிடிக்காததாலும் தடைப்பட்ட பிரெஞ்சு மொழி வகுப்பில் மறுபடியும் இணைந்தேன்.

எப்போதோ ஆரம்பித்த இந்த blogஐ update செய்ய ஆரம்பித்தேன். பிரெஞ்சு மொழி வகுப்பில் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். காலையில் அவர்களுடன் உணவருந்தும் நேரம், கல்லூரியில் படிக்கும் போது கூட செய்யாத group study, ஹிந்தியே தெரியாமல் ஹிந்தி படம் என்று என்னை கொஞ்சம் புதிதாக உணர்ந்தேன். ஒரு நாள் கூட வகுப்பை புறக்கணித்தில்லை. இன்னும் ஒரு வாரம் தான். வகுப்பு முடிய போகிறது. நான் அடுத்த level இணைந்தாலும் இவர்களுடன் பலவற்றை இழக்கப்போகிறேன்.

Friday, July 12, 2013

Lie to me - TV Series


imdb.com - http://www.imdb.com/title/tt1235099/?ref_=fn_al_tt_1

நான் பார்த்த ஐந்தாவது ஆங்கில தொடர். என் TL தான் இந்த தொடரை பற்றி சொன்னார். தரவிறக்கம் செய்யலாமென்று torrentல் தேடி, 200MB தரவிறக்கம் செய்திருந்தேன். அப்புறம் தான் என் கூட french படிக்கும் நண்பர் ஒருவர், இத்தொடரை வைத்திருப்பதாக சொல்லி, எனக்கு கொடுத்தார்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப, குற்றவாளிகளை முகத்தின் சின்ன சின்ன expressionஐ(தமிழில் என்ன?) (micro expression) வைத்து எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

இதுவும் CSI மாதிரி விறுவிறுப்பாக, சஸ்பென்சாக இருந்தாலும் CSIயில் இல்லாத நகைச்சுவை, humor இதில் அதிகம்.

அப்பாவுக்கும் மகளுக்குமான உறவு, தன் teenage பெண் ஆண்களோடு பழகுவதை தடுக்கவும் முடியாமல், ஏதாவது தவறு நடந்து விடுமோ? என்று பயப்படுவது, தன் பெண்ணை காக்க என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராகயிருப்பது நம்மவர்களின் பாசத்தை போல தான் அவர்களதும். என்ன, அவர்கள் மிகப்பெரிய ஊழலோ, கொலையோ செய்த தலைவனுக்கு வாழ்க சொல்லும் முட்டாள்கள் அல்ல.

ஒவ்வொரு குற்றவாளியும் ஒவ்வொரு expression செய்வதை உலகத்தின் பிரபலமான நபர்கள் தவறு செய்து மாட்டும் போது செய்த expressionனோடு ஒப்பிடுவது நன்றாக உள்ளது.

L'article - 2



Analyse sur l'écriture de Dan Brown

Il est Américain. Il né en 1964 à New Hampshire aux Etats-Unis. Il a 49 ans. Ses deux romans (Anges et Démons, Le Da Vinci Code) sont palpitant et les puzzles dans ces romans sont trés intéressants.

Je ne suis pas un auteur, juste un lecteur. Ce n'est pas une remarque sur ses livres. Juste une analyse de son style d'écriture.

Avez-vous regardé les films mass? Mass a comme genre l'action, la comédie, la romance, l'horreur. Ces films de mass ont un gabarit.
1. Il a cinq chansons. Premièrement une chanson de présentation pour le héros, finalement une chanson rapide. Nous appelons la chanson de Kuthu en tamoul et encore trois chansons.
2. Quatre batailles normales et une bataille apogée.
3. Il a la comédie et le sentiment.

Comme ça, il y a un gabarit dans ses histories aussi.
a. Il commence avec un meutre.
b. L'assassin travaille pour une organisation secrète.
c. Un homme puissant demande l'aide de notre héros.
d. Une joli jeune fille est associée avec notre héros.
e. Notre héros résoud les puzzles de la victime avec cette fille.
f. Puis, il trouve le cause de la meutre.

L'article - 1


I 'm doing A1 in French and writing some articles in French. I 'm just a beginner, so there may be (lots of) errors. Bare with me.

"IT industrie" was my second PPT presentation in my life. When I was studying .NET in NIIT, I did my first presentation on "Advantages of C++".


IT industrie ou l'entreprise ou l'informatique

Vue d'ensemble
- C'est une grande idustrie.
- Elle a commencé en 1974.
- En 1990, le governement a fondé les zone industrielles.
- Elle fournit des emplois à environ 3 millions et indirectement à 9 millions.
- En 1998, elle a contribué 1.2% à GDP de l'inde mais 7.5% en 2012.
- Après 2000, les films aussi utilisent beaucoup l'animation et l'infographie.
- Les cinq importantes sociétés sont TCS, Infy, Wipro, HCL et CTS.
- Les importantes villes sont Chennai, Bengaluru, Hyderbad, etc.,


Bengaluru
- Cette industrie a changé certains noms des villes. Il y a une rue qui s'appelle IT grande route à Chennai.
- Bengaluru est aussi appellé comme la Silicon Valley de l'inde.
- Les multinationales comme IBM, Compaq sont à Bengaluru.


Hyderabad
- C'est aussi appellé comme le Cyberabad.
- Les multinationales comme Microsoft, Facebook, Google sont à Hyderabad.


Les Problèmes
- Cette industrie a changé le style de vie et a une influence negatif sur notre culture.
- Aussi, elle a augmenté les prix.
- Les employés de IT ne peuvent pas passer le temps avec leurs famille.

Wednesday, May 8, 2013

எச்சரிக்கை(Warning): TATA Docomo Photon 3G


போன மாதம்(April) தொடக்கதில் TATA Docomo Photon 3G வாங்கினேன். 5GB வரை அதன் வேகம்(3G speed) நன்றாக இருந்தது. (உன்னுடன் வேலை செய்யும் ஒருவருக்கு TATA Docomo Photon 3Gஐ சிபாரிசு வேறு செய்தேன்) 5GB ஆனதும் வேகம்(3G speed) 128Kbps ஆனது. April, 26ம் திடீரென்று 3G speed கொஞ்ச நேரம் வந்தது. அப்ப தான் billing cycle  பற்றி சந்தேகம் வந்ததால் 28ம் தேதி customer careரை தொடர்பு கொண்டதற்கு ஒவ்வொரு மாதமும் 25ம் தேதி bill வரும் என்றார். சரியென்று விட்டுவிட்டேன்.

கடந்த திங்கட்கிழமை முதல் speed 0 - 5Kbps தான் வருகிறது. Wireless தானே signal problemஅ இருக்குமென்று நினைத்திருந்து, நேற்று இரவு customer careரை தொடர்பு கொண்டால், அந்த புண்ணியவான் நீங்கள் 5GB உபயோகபடுத்திவிட்டீர்கள் என்பதையே தேய்ந்து போன ரெகார்ட் மாதிரி, நான் என்ன கேட்டாலும் சொல்லியதால் தொடர்பை துண்டித்தேன்.

இன்று, நான் TATA Docomo Photon 3G வாங்கிய show roomக்கு, சென்று விசாரித்ததில் 15GB வரை தான் 128Kbps வரும் அதன் பின் 8Kbpsக்கு குறைந்து விடும், நீங்கள் 17GB பயன்படுத்தியுள்ளீர்கள் என்றார். ஏங்க இதை முன்னமே சொல்லியிருந்தால் நான் வாங்கியே இருக்க மாட்டேன் என்றதற்கு நீங்கள் கையொப்பமிட்ட படிவத்தில் அதெல்லாம் போட்டிருக்கு என்றனர். சரி அது விடுங்கள், bill generate ஆனது Apr, 25. அன்றிலிருந்து இன்று வரை 13 நாட்கள். கடந்த 3 நாட்களாக speed 5Kbpsக்கு குறைவாக வந்ததால் நான் பயன்படுத்தவேயில்லை. இந்த 3 நாட்களை கழித்தால் 10 நாட்கள். சனிக்கிழமை நான் ஊருக்கு சென்றிருந்தேன். Roaming என்பதால் அன்றும் பயன்படுத்தவில்லை. ஆக மொத்தம் 9 நாட்கள். அதில் 3 நாட்கள் 3G speedக்கு 5GB என்று வைத்துக்கொண்டால் மீதி 6 நாட்கள். இந்த 6 நாட்களில் 128Kbps speedல் 10GBயும், 8Kpbs speedல் 2GBயும் பயன்படுத்தியுள்ளேன் என்பது நம்பும்படியாக உள்ளதா? என்றால் அதற்கு பதிலில்லை. Day wise usage detailsஅ கேட்டால் customer careரை தொடர்பு கொள்ளுங்கள் என்றனர்.

இண்டர்நெட் பயன்படுத்துவோருக்கு தெரியும் 6 நாட்களில் 128Kbps speedல் 10GBயும், 8Kpbs speedல் 2GBயும் சாத்தியமில்லாத ஒன்றென்று. 8Kpbs speedல் ஒரு பக்கம் கூட load ஆகாது என்றால் 2GB எப்படி?

நண்பர்களே, வாங்கும் போது எச்சரிக்கையுடன் இருங்கள்.

Wednesday, April 24, 2013

Pretty Little Liars - TV Series


imdb.comல் rating 7.9 (http://www.imdb.com/title/tt1578873/?ref_=fn_al_tt_1)

CSI, The Rome, Game of Thronesக்கு பிறகு நான் பார்க்கும் நான்காவது ஆங்கில தொடர். ஏகப்பட்ட நாவல்களை திரைப்படமாகவோ அல்லது தொடராகவோ அவர்களால் மட்டும் எப்படி இயக்க முடிகிறதோ?

Sara Shepard எழுதிய Pretty Little Liars seriesஐ தான் நீண்ட நெடுந்தொடரா எடுத்திருக்கிறார்கள். அந்த கதையை படிக்கும் போதே அதை serialஅ எடுத்திருக்காங்கன்னு தெரிந்ததும், torrentல் டவுன்லோடு பண்ண தேடிக்கொண்டிருந்தேன். சரியான torrent கிடைக்கவில்லை. பத்து நாட்களுக்கு முன்னாடி தான் கிடைத்தது. Season 1ஐ நானும், என் அக்காவை season 2 டவுன்லோடு செய்ய சொல்லியுள்ளேன்.

Season 1ல் பத்து episode பார்த்துள்ளேன். கதையை ஏற்கனவே படித்துவிட்டதால் முதலில் சற்று குழப்பமாகயிருந்தது. தெலுங்கு படத்தை தமிழில் எடுப்பார்களே அது போல அப்படியே எடுக்காமல் பல மாற்றங்களை செய்துள்ளார்கள். சில கதாபாத்திரங்களை புதிதாகவும், கதையில் வரும் சில கதாபாத்திரங்களை நீக்கியும் உள்ளார்கள். Emilyக்கு தங்கையில்லை, கதையில் நால்வரும் ஒரு கட்டத்தில் தான் இணைவார்கள் ஆனால் இதில் முதலிலிருந்தே இணைந்த்திருப்பார்கள். இந்த மாதிரி ஏகப்பட்ட மாற்றங்கள்.

Hannaஐ flashbackல் குண்டாக காட்ட, ஒரு படத்தில் விவேக் உடம்பில் அங்கங்கு பலூன் கட்டிக்கொள்வதை போல் செய்துள்ளார்கள். பார்க்க காமெடியாக இருந்தது.

ஒரே கதையை இரண்டு விதமாக பார்க்கிற புதிய அனுபவம். மிகவும் விறுவிறுப்பாகவும், திரில்லிங்காகவும் உள்ளது. இதுவரை மூன்று seasonகள் வந்துள்ளது. நான்காவது season June மாதத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

Oct 15, 2013
Season 4, Episode 12 வரை பார்த்துள்ளேன். இந்த தொடரை பற்றி பல விஷயங்கள் மறந்த மாதிரி இருக்கிறது. ஜவ்வாக ஏன் இப்படி இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இன்னும் பல முடிச்சுகள் உள்ளது. ஆனால் இந்த episodeஐ பார்த்தப்பின், நான்காவது பாகத்தோடு படிப்பதை நிறுத்திய இந்நாவலை மறுபடி தொடரலாமா? என்ற எண்ணம்.

"கண்டேன் சீதையை" படத்தில் தீபா வெங்கட், ஒரு தொலைக்காட்சி தொடரை பற்றி சொல்லி, தான் 8 வருடமாக (சரியாக ஞாபகமில்லை) அத்தொடரை பார்த்து வருவதாக சொல்வார். நம்ம ஆளுங்க தான் அப்படி என்று நினைத்திருந்தேன். ஆனால் வெளிநாட்டினர் கூட எந்த அளவுக்கு தொடர்களை பார்க்கிறார்கள் என்பதை PLL பற்றி youtubeல் பார்த்த பிறகு தான் தெரிந்துக்கொண்டேன்.

ஏராளமான பேர் "A" யாராகயிருக்குமென்றும், அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார்கள். அதாவது, அவர்கள் ஒவ்வொரு episodeயும் பிரித்து மேய்ந்துள்ளார்கள். ஒரு காட்சியில் Ezra (Ariaவின் முன்னாள் காதலர், ஆசிரியர்) தன் வகுப்பில் பலகையில் எழுதிய பாடங்களில் சில வார்த்தைகளை வட்டமிட்டு, அதை ஒரு குழுவாக(hint) சொல்லியுள்ளார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு உன்னிப்பாக கவனித்துள்ளார்கள் என்று எண்ணிப்பாருங்கள். நான் அந்த அளவுக்கு உன்னிப்பாக கவனித்ததில்லை. அதனால் தான் என்னவோ எனக்கு கொஞ்சம் சலிப்பாக தோன்றியதோ?


Season 4, Episode 12 முடிவில் இன்னொரு "A"வை காட்டுவார்கள். நான் கூட, அந்த கதாபாத்திரம் "A"வாகயிருக்குமோ? என்று நினைத்திருந்தேன். ஏனெனில் அந்த கதாபாத்திரத்தை ஒரு flashbackல் பார்த்த மாதிரி ஞாபகம். youtubeல் ஒரு வருடத்திற்கு முன்னமே அவர் "A"வாகயிருப்பதற்கான காரணங்களை சொல்லியுள்ளார்கள்.

இத்தொடரில், இந்நாவலில் எனக்கு பிடிக்காத ஒன்று - ஒரு விஷயம் "A"ஆல் செய்யப்பட்டது என்பார்கள், ஆனால் எப்படி செய்யப்பட்டது என்று சொல்லமாட்டார்கள். ஒருத்தர் நம்மை எங்கு சென்றாலும், நாம் என்ன செய்தாலும் கண்காணிக்கிறார் என்றால் நாம் கொஞ்சமாவது எச்சரிக்கையாக இருப்போம் இல்லையா ஆனால் இதில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் அப்படி இருப்பதில்லை. எதையாவதை செய்து "A"வுக்கு இன்னொரு வழி தருவது போல் தான் இருக்கிறது.

Tuesday, April 23, 2013

சிவானந்த ஆசிரமம் (Sivananda Ashram) அனுபவம் பாகம் 6

அதன்பின், கரைக்கு வந்து மற்றவர்களுக்காக காத்திருந்தோம். ஒரு சிலர் வந்து, கரையில் ஆசனங்கள் செய்ய ஆரம்பித்தார்கள். நாங்கள் வந்த வண்டி ஓட்டுனர்கள்(இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள்) நேரமாவதாக சத்தம் போட்டும் ஆசரமத்தை சேர்ந்தவர்கள் கண்டுக்கொள்ளவில்லை.

சிறிது நேரம் கழித்து, சில வெளிநாட்டு பெண்கள் கரையில் உடை மாற்ற(அவர்களிடம் பொது இடத்தில் எப்படி உடை மாற்றுவதென்று கற்றுக்கொள்ளவேண்டும்), நானும், ஒரு சிலரும் வண்டிக்கு வந்து உடை மாற்றி கிளம்பினோம். வரும் வழியில், இராமேஸ்வரம் மேம்பாலத்தில் புகைப்படம் எடுக்க சிறிது நேரம் நிறுத்தினார்கள்.

காலையில் சாப்பிட்ட உணவகத்திற்கு பக்கத்திலிருந்த இன்னொரு உணவகத்தில் சாப்பிட்டோம். நான் சாப்பிட்டு முடித்ததும் வெளியே வந்து நாங்கள் வந்த வண்டி ஓட்டுனரிடம் பேசினேன். அவர்கள் travels தான், பல வருடங்களாக ஆசரமத்தின் சுற்றுலாவிற்கு(ஒவ்வொரு TTC batchக்கும் ஒரு trip மீனாட்சி அம்மன் கோவில், ஒரு trip இராமேஸ்வரம் கோவில்) வண்டி ஓட்டுவதாக சொன்னார். அவர்கள் முதலாளி பற்றியும் ரொம்ப பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தார்.

வண்டியில், சிலர் நடனம் ஆடினார்கள். என்னையும், ஏன் அமைதியாக/தனியாக இருக்கிறாய்? நீயும் வந்து ஆடு என்றார்கள். எனக்கு ஆட விருப்பமில்லை என்றேன். 10 மணிக்கோ 11 மணிக்கோ ஆசரமத்தை அடைந்தும், நான் சென்று தூங்கினேன்.

சனிக்கிழமை(Mar 16): காலையில் எழுந்து, என் உடைமைகளை எடுத்து வைத்துக்கொண்டேன். 10 மணிக்கு உணவு உண்டபின், நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு (ஒரு சிலர் நீயும் வந்து TTC பண்ணு என்றார்கள்),  சொல்லிவிட்டு, சமையல் செய்யும் கேரளத்தை சேர்ந்தவரிடம் இந்த 15 நாட்களும் உணவு நன்றாகயிருந்தது என்று அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன்.

பேருந்து நிலையம் வந்து எப்போதும் போல ஒரு மணி நேரம் காத்திருந்தேன். அப்போது, ஆசரமத்திருக்கு அடிக்கடி வருகை தந்து உடைகளை விற்பவரும் பேருந்து நிலையம் வந்தார். பேருந்தும் வந்தது. ஒரு வழியாக பெரியார் பேருந்து நிலையம் வந்து ஒரு சாப்பிட பழங்கள் வாங்கிக்கொண்டு KPN அலுவலகத்திற்கு வந்து பயணசீட்டின் தகவல்கள் அடங்கிய குறுந்தகவலை காட்ட காத்திருக்க சொன்னார்கள். மணி மதியம் 01:30 ஆனது. மறுபடியும் அவர்களிடம் கேட்டதற்கு பேருந்து நிலையம் செல்லுங்கள் என்றும், வண்டி எண்ணும் தந்தார்கள். இங்கயே அரை மணி நேரம் late. இவன் எப்படி இரவு 09:00 மணிக்கு பெங்களூருக்கு போவான் என்று நினைத்துக்கொண்டு வண்டி ஏறினேன். சுந்தரப்பாண்டியன் படத்தை போட்டார்கள். இப்படத்தில் வரும் பெண் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று. காதலிக்கும் போது திரைப்படத்தில் கூட வராத வசனங்களை பேசிவிட்டு, அடுத்த நாள் எங்க அம்மா சொன்னங்க, அப்பா அழுதாங்கன்னு சொல்லி GoodBye சொல்கிற நிஜ உலக பச்சோந்தி பெண்களுக்கு முற்றிலும் எதிரான கதாபாத்திரம்.

வரும் வழியில், ஒரு பெட்ரோல் நிலையத்திலிருந்த ஒரு உணவகத்தில் நிறுத்தினார்கள். Rs.30 கொடுத்து Horlicks குடித்தேன். சிறிது நேரம் "The First Rule" நாவல், சிறிது நேரம் பாட்டு என்று ஓசுரை கடந்ததும், நடத்துனரிடம் வண்டி Express iwayயில் போகுமா என்று விசாரித்தற்கு ஆமாம் என்றார். அதனால் E-Cityயில் இறங்கி BMTC bus பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். புதிய அனுபவங்களுடன் என் மதுரை முடிந்தது. மறுபடியும் வாய்ப்பு கிடைத்தால் சிவானந்த ஆசரம் செல்ல நினைத்துள்ளேன்.

Monday, April 8, 2013

National Savings Certificate (NSC)

பெங்களுருவில், Johnson மார்க்கெட் பேருந்து நிறுத்ததிலிருந்து Richmond Road போகும் வழியில் 2வது தெருவில் கொஞ்ச தொலைவு போனால் ஒரு தபால் நிலையம் உள்ளது. மார்ச் மாதம், 27ம் தேதி அங்கு NSC(National Savings Certificate) வாங்க போனேன்.

அதற்கு முந்தின வாரமே, NSC பற்றி அதே தபால் நிலையத்தில் விசாரித்திருந்தேன். அப்போதே அந்த பெண் ஊழியர், NSC வாங்குவதற்கான படிவத்தில் சாட்சி கையொப்பம் மற்றும் முகவரி தேவையென்பதால் படிவத்தை என்னிடம் கொடுத்தார். (என்னோட வேலை மிச்சமானது. இல்லையெனில் கையொப்பம் வாங்க ஒரு தடவை நான் என் அலுவலகம் வந்து செல்ல வேண்டியிருந்திருக்கும்)

என்னிடம் தமிழ்நாடு address proofதானிருந்தது. அதனால் தபால் நிலையத்திலிருந்த ஆண் ஊழியர் (அங்கு இரண்டு பேர் தான் இருந்தார்கள் - எனக்கு தகவல் தந்த அந்த பெண் ஊழியர் மற்றும் இவர். இவர் அந்த பெண் ஊழியருக்கு மேலதிகாரியாக இருப்பாருன்னு நினைக்கிறேன்) என் அலுவலக அடையாள அட்டையின் xerox copyயையும் கேட்டார்.

பக்கத்திலிருந்த xerox கடையில் xerox எடுத்துக்கொண்டு வந்து, 21,000க்கு வாங்கினேன். ஒரு 1000 ரூபாய், இரு 10,000 ரூபாய் certificatesஐ மெதுவாக நிரப்பிக் கொண்டிருந்தபோது ஒரு வக்கீல் வந்து ஏன் அவருடைய தபால் ஒன்று திரும்பிவந்ததென்று விசாரிக்க, அந்த ஊழியர் நிரப்புவதை நிறுத்திவிட்டு அந்த தபாலை ஆராய்ந்து விட்டு, வேறொரு தபால் நிலையத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டார். கோபம்தான் வந்தது. சண்டை போட்டு ஒன்னும் ஆகப்போவதில்லை. கொஞ்ச நேரம் காத்திருந்தேன்.

அப்புறம் காலாவதியாகும் தேதியில் வாங்கின தேதியை நிரப்பினார். காலாவதியான பின் எவ்வளவு பணம் தரவேண்டும் (interest நடுவில் மாற்றிவிட்டால்) என்பதை நிரப்பவில்லை. 1000 ரூபாய் certificateல் 6 வருடம் என்றும் 10,000 ரூபாய் certificateல் 5 வருடம் என்றும் அச்சடித்திருக்கிறார்கள். காலாவதியான பின் போனால் தான் தெரியும்.

சக ஊழியர், ஹைதராபாதில் வாங்கின NSC Certificateஐ இங்கு மாற்றமுடியுமா என்று விசாரிக்க சொல்லியிருந்தார். NSC Certificateஐ நீங்கள் வாங்கிய தபால் நிலையத்தில் தான் மாற்றமுடியும் அல்லது NSC Certificateஐ வேறொரு தபால் நிலையத்தில் மாற்ற வேண்டுமெனில், அந்த தபால் நிலையத்திற்கு transfer செய்திருக்க வேண்டும்.

Documents required to buy NSC:
1. Address proof copy (Local is better)
2. 3 Passport size photo
3. Witness signature and address in the application form

Friday, March 22, 2013

சிவானந்த ஆசிரமம் (Sivananda Ashram) அனுபவம் பாகம் 5

வெள்ளிக்கிழமை (Mar 18) அதிகாலை 04:30க்கு எழுந்து, 05:00க்கு தயாராகயிருந்தேன். சிறிது நேரம் கழித்து கிளம்பினோம். அது இரண்டு இரண்டு பேரும், கடைசியில் ஐந்து பேரும் அமரும் வகையில் இருந்த வாகனம். தனியாள் என்பதாலும், சில பேர்(ஜோடிகள்) ஒன்றாக உட்கார ஆசைபடுவதை தடுக்க வேண்டாமென்றும் எப்பவும் போல கடைசியில், ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்தேன்.

என்பக்கத்தில் அமர்ந்த இந்தியரு(னு)ம்(வட-ன்னு நினைக்கிறேன்), அவர் கூட அமர்ந்த வெளிநாட்டு பெண் ஒருவரும், நான் ஏன் அங்கு உட்கார்ந்தேன் என்று என்னை சங்கடப்பட்ட வைத்தார்கள். சிறிது நேரம் "The First Rule" படித்து விட்டு தூங்கினேன். ஒரு ஓட்டலில் காலை உணவிற்காக நிறுத்தினார்கள். பக்கத்திலிருந்த ATMல் இராமேஸ்வரம் சுற்றுலாவிற்கான பணம் Rs.1400ஐ ஆசிரமத்தை சேர்ந்தவர்களுக்கு தர எடுத்துக்கொண்டேன்.

எல்லாரும் AC அறையில் அமர்ந்ததால் நானும் சென்று அமர்ந்தேன். உணவு வந்தவுடன் நான் சாப்பிட ஆரம்பித்தேன். இரண்டு வாய் சாப்பிட்டதும் அவர்கள் சாப்பிடும்முன் செய்யும் பஜனையை செய்தார்கள். அப்போதுதான் எனக்கு அவர்களின் ஆசிரம வழக்கம் ஞாபகம் வந்தது. ஆஹா! எப்போதும் வழக்கத்தை விடமாட்டார்கள் போலிருக்குன்னு சந்தோசப்பட்டேன். (பகலில், கடலில் அந்த சந்தோசத்தை கரைத்தார்கள்.)

பயணம் தொடர்ந்தது. இராமேஸ்வரத்தை அடைந்தோம். வாகனத்திலேயே மாற்று உடை அணிந்து கொண்டு, என் பக்கத்துக்கு bed ஆஸ்திரேலியாகாரரின் கையை பிடித்துக்கொண்டு கடலில் 3 முறை மூழ்கியெழுந்தேன். கோவிலினுள், சன்னிதானத்தை சுற்றி 22 கிணற்றிலிருந்து நீரை சிறிய வாளியில் எடுத்து நம்மீது ஊற்றுவார்கள். 3 கிணறுகளை மூடிவிட்டதால் 19 கிணறு, ஆனால் கடைசியில் ஊற்றும் நீரில் அந்த 3 கிணற்றிலிருந்த நீரும் கலந்துயிருக்கும் என்றார்கள். முடிந்தால் கிணற்று நீரை சுவைத்து பார்க்க சொன்னார்கள். ஒவ்வொரு கிணற்று நீரின் சுவையும் மாறுபடுமாம்.

ஒரே நாளில் 19 முறை குளித்த மாதிரியான அனுபவம்.  மாற்று உடை அணிந்துக்கொண்டு சன்னிதானதினுள் நுழைந்தோம். வெளிநாட்டினரை ஒரு காவலாளி தடுத்தார். அவர்கள் திருநீர் அணிந்து செல்வார்கள் என்றும், சிவானந்த ஆசிரமத்திலிருந்து குழுவாக வந்திருக்கோம் என்றும் சொல்ல அந்த காவலாளி வழிவிட்டார். தரிசனம் முடிந்ததும். சன்னிதானத்தை சுற்றும் பாதையில் அமர்ந்து சிறிது நேரம் பஜனை செய்து விட்டு கிளம்பினோம். கோவிலில் சர்க்கரை பொங்கல் பிரசாதம் தந்தார்கள். நன்றாக இருந்தது.

மதிய உணவு ஏற்பாடு செய்ய இரண்டு பேர் முயற்சி செய்தார்கள். காலமும் கடந்ததால் இளநீர் அருந்திவிட்டு தனுஷ்கோடி கடலுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தார்கள். ஆசிரமத்தில் தான் இரண்டு வேலை உணவு, இங்கையுமா? என்று நினைத்துகொண்டேன்.

தனுஷ்கோடிக்கு ஒரு வேனிலும், ஒரு ஜீப்பிலும் பயணமானோம். வண்டிகள் செல்லும் வகையில் பாதையில்லததால் சிலநேரங்களில் கடலோரத்திலும், சிலநேரங்களில் கடலிலும் பயணம் செய்தோம். வேனில் மாற்று உடை அணிந்து கொண்டு, கடலில் இறங்கினேன். கடல் நீர் வெதுவெதுப்பாக இருந்தது. 50 - 100 அடிவரை நெஞ்சு வரை தான் நீர் இருந்தது. அந்த ஜோடி (பயணம் தொடங்கும்போது என் பக்கத்தில் உட்கார்ந்த) தனிய சென்றது. அந்த வெளிநாட்டு பெண், அந்த இந்தியரு(னு)க்கு நீச்சல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். வேறொரு இந்தியர்(ன்) வேறொரு இந்தியரு(ன் - ஆண்பால், பெண்பால் என்ன?)க்கு நீச்சல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

கடலில் வெளிநாட்டை சேர்ந்தவர்களும், இந்தியர்கள் சிலரும் ஆசனங்கள் செய்துக்கொண்டும், அதைப்பற்றி பேசிக்கொண்டும் இருந்தால், ஆசிரமத்தை சேர்தவர்கள்(அதாவது அங்கு வேலைசெய்கிறவர்கள்) ஒருத்தர் தோளில் ஒருத்தரை வைத்துக்கொண்டு, ஒருவர் தோளில் உட்கார்ந்திருப்பவர் இன்னொருவர் தோளில் உட்கார்ந்திருப்பவரை தள்ளும் விளையாட்டை ஆடிகொண்டிருந்தார்கள். மக்கள் அதிகம் இல்லாதால் ஆசிரமத்தின் பேர் தப்பித்தது.

15 - 16 வயசுகளில் ஏற்படும் ஒரு வித உணர்ச்சியை இந்தியர்கள் திருமணமாகும் வரை அடக்கி வைப்பது கடினம் தான். இதுவே அவர்கள் கல்லூரிகள் மூலமாகவோ அல்லது தனியாகவோ வந்திருந்தால் நான் கவனித்து கூட இருக்கமாட்டேன். ஆனால் ஆசிரமம் என்ற பெயரில் வந்ததுதான் என்னை உறுத்தியது. ஒருசில வெளிநாட்டு பெண்களே பிகினி(bikini) அணியாமல் கடலில் இறங்கினார்கள். அப்படியிருக்கும் போது நாம் இப்படி நடப்பதால் தான் என்னவோ வெளிநாட்டினர் இந்தியர்களை அளைபவர்களாக நினைக்கிறார்கள்.

என் பக்கத்து bed ஆஸ்திரேலியாகாரர் நீச்சல் செய்வது பற்றி சில தகவல்களை சொன்னார்.  அவரும்(15 ஆண்டுகளாக யோகா செய்துக்கொண்டிருக்கிறாராம்) அவர் தோழியும்(GF) கடலில் தலைக்கீழாக சில நொடிகளிருந்தார்கள். விதவிதமாக நீச்சலுமடித்தார்கள். இவர்கள் பற்றியும், இவர்களின் இந்திய பயணத்தை பற்றியும் தெரிந்துக்கொள்ள twoloosebeans.com பார்க்கவும்.

சிவானந்த ஆசிரமம் (Sivananda Ashram) அனுபவம் பாகம் 4


புதன்கிழமை(Mar 13) ராமேஸ்வரம் சுற்றுலா பற்றி சொன்னார்கள். TTC, Vocation programme பண்றவங்க பெயர் கொடுக்கசொனங்க. எனக்கு கொஞ்சம் குழப்பமாயிருந்தது. ஏனெனில், இதுவரை ராமேஸ்வரம் சென்றதில்லை, நான் வெள்ளிகிழமை இரவு பெங்களுருவுக்கு திரும்ப பேருந்து பதிவு செய்திருந்ததால் வெள்ளிகிழமை அழகர் கோவிலுக்கு சென்று வரயிருந்தேன்.

வியாழக்கிழமை(Mar 14): பதிவு செய்திருந்த டிக்கெட்டை cancel செய்துவிட்டு, பகல் 01:30 மணி போல அழகர் கோவிலுக்கு சென்றேன். அங்கிருந்து பக்கம்தான்.

அழகர் கோவில்: ஆசிரமத்திலிருந்து அழகர் கோவிலுக்கு பேருந்து இல்லாததால்(எனக்கு தெரியாததால்) சத்திரப்பட்டிக்கு சென்று, அங்கிருந்து share autoவில் 02:00 மணிக்கெல்லாம் கோவிலுக்கு வந்துவிட்டேன். நுழைவாசலின், பக்கத்தில் முருகன் கோவிலுக்கு செல்லும் வழின்னு இருந்ததால, நெய் தீபம் விற்க்கும் அக்காவிடம் அது பற்றி கேட்டேன். பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலுக்கு நடந்து செல்லும் வழியென்றும், அழகர் கோவிலுக்கு வெளியே அரசு சிற்றூந்துகள் முருகன் கோவிலுக்கு செல்லுமென்றும் சொன்னார். அழகர் கோவில், மூலஸ்தானம் மாலை 04:30க்கு தான் திறப்பார்கள் என்பதால் முருகன் கோவிலுக்கு சென்றேன். அதை பற்றி கடைசியில்.

அழகர் கோவிலில், சிறப்பு நுழைவு டிக்கெட் Rs.10. விநாயகருக்கு நாமம் போட்டுயிருந்தார்கள். எந்த சிவன் கோவிலிலும் பெருமாளுக்கு, திருனீர் இட்டு பார்த்ததில்லை. தரிசனம் முடித்துவிட்டு, அந்த அக்காவுக்கு நன்றி சொல்லிவிட்டு, வெளியே வந்து ரொம்ப நேரம் பேருந்துவுக்காக காத்திருந்தேன்.

ஒரு ஷேர் ஆட்டோ வந்தது. என்னை முன்னாடி அவர் பக்கத்தில் உட்கார சொன்னார். சத்திரப்படிக்கு செல்லும் வழியில் போலீஸ்கார்கள் சோதனை போட்டுகொண்டிருந்தார்கள். முன்னாடி உட்கார்ந்திருந்தது தவறு என்று அந்த ஷேர் ஆட்டோவை மடக்க, ஓட்டுனருக்கு பணம் தந்து விட்டு, அடுத்த நிறுத்தத்தில் பேருந்து பிடித்து 06:15 ஆசிரமத்தை அடைந்து சாப்பிட்டு விட்டு, satsangக்கு போனேன். satsang முடிந்ததும் ராமேஸ்வரம் சுற்றுலா போகிறவர்களை விடியற்காலை 05:00 மணிக்கெல்லாம்  தயாராகயிருக்க சொன்னார்கள்.

பக்கத்துக்கு bed ஆஸ்திரேலியாகாரருக்கு BSNL GPRS activate பண்ண உதவிசெய்து விட்டு படுத்தேன்.

பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்: இங்கு, சிறப்பு நுழைவு கட்டணம் Rs.5. தரிசிக்க வந்த மக்களை விட குரங்குகள் மூன்று மடங்கு அதிகமாகயிருந்தன.  நல்லபடியாக தரிசனம் செய்துவிட்டு, பிரசாதம் வாங்கி சாப்பிட்டு விட்டு(இங்கு பஞ்சாமிர்தம் விற்பதில்லை) அழகர் கோவிலுக்கு திரும்பினேன்.
சிற்றூந்தில் முருகன் கோவிலுக்கு போயிட்டு வர Rs.20 (10+10) ஆனது.

Thursday, March 21, 2013

சிவானந்த ஆசிரமம் (Sivananda Ashram) அனுபவம் பாகம் 3


ஞாயிற்றுக்கிழமை(Mar 10) மகாசிவராத்திரி என்பதால் தொடர் பஜனை(காலை 06:00 மணியிலிருந்து மறுநாள் காலை வரைக்கும்) நடைபெறும் என்று சனிக்கிழமையே சொன்னார்கள். அதனால் ஞாயிற்றுக்கிழமை காலை "Silent Walk"க்கு போகாமல் நான் பஜனைக்கு போனேன். என்னோடு சேர்த்து 3 பேர். கிட்டத்தட்ட ஒன்றை மணிநேரம் அங்கு இருந்தேன். அதற்கு பின் கர்ம யோகா முடித்து மறுபடியும் ஒன்றை மணிநேரம் பஜனை செய்தேன்.

மாலையில் உணவுக்கு சென்றேன். எப்போதும் நான் தான் முதலில் செல்வேன். அவ்வளவு பசிக்கும். ஆனால் அன்றோ, ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், TTC(Teacher Training - Yoga) படிக்கும் ஒருவருக்கும் பிறந்தநாள். அதனால் மாலை உணவிற்கு முன், cake cut பண்ணி, அவர்களுக்கு பரிசு கொடுத்து, வாழ்த்துக்கள் படலம். குறைந்தபட்சம் பிறந்தநாள் கொண்டாடுபவர்களை சீக்கிரம் வர சொல்லியிருக்கலாம். அவர்கள் வரும்வரை பசியோடு,

"ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே"

சொல்லிக்கிட்டு உணவுக்காக காத்திருந்தோம். அதைவிட கொடுமை, பிறந்தநாள் கொண்டாடும் ஆசிரமத்தைச் சேர்ந்தவர் சமைத்த பாஸ்தவை(Pasta) மட்டுமே பரிமாறினார்கள். கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, Boutiqueவுக்கு சென்று சில snacks items வாங்கினேன். ஆசிரமத்தில் அவர்களே நடத்தும் பழச்சாறு, sandwiches விற்கும் கடை உள்ளது. அதற்கு செல்லலாம் என்றால், அன்று அதற்கு விடுமுறையாம்.

மாலையில் செய்யபோகும் மகாசிவராத்திரி பூஜை/பஜனையில், அப்பப்ப பிரசாதம்ன்னு சர்கரைபொங்கல், வெண்பொங்கல், புளிச்சாதம் எல்லாம் தருவார்கள் என்று அப்புறம் தான் தெரிந்தது.

அதன் பின், ஆசிரமத்திலுள்ள அம்மன் கோவிலில் பூஜை செய்து கேசரி கொடுத்தார்கள். இரவு 08:00 மணிக்கு காலையிலிருந்து மந்திரம் சொல்வது நிறுத்தப்பட்டு, பஜனையை ஆரம்பித்தார்கள். பூசாரி, சிறிய விநாயகர், சிவலிங்கம், நடராஜர் வெண்கல சிலைகளுக்கு அபிஷேகம் செய்ய தயார் செய்தார். நாங்களும், ஒவ்வொருத்தராக அபிஷேகம் செய்தோம். பல வெளிநாட்டினரும் அபிஷேகம்/பஜனையில் கலந்து கொண்டார்கள்.

என் பக்கத்து bedஐச் சேர்ந்த ஆஸ்திரேலியாகாரர் காதில் பூ கூட வைத்துகொண்டார். அப்படியே மணி விடியற்காலை 03:30 ஆனது. இருந்தவர்களில் முக்கால்வாசி பேர் தூங்க போய்விட்டார்கள். எனக்கும் கண்ணு கட்டியது. இருந்தாலும் அடுத்த அபிஷேகம், அதாவது கடைசி அபிஷேகம் 04:00 மணிக்கு என்பதால் தூங்காமலிருக்க முயற்சிசெய்தேன். ஆனாலும் 03:50க்கு நித்திரைதேவி ஆட்கொண்டாள். அங்கயே படுத்துவிட்டேன்.

04:30 மணிக்கு நானாக எழுந்தேனா அல்லது யாராவது எழுப்பினார்களா என்று தெரியாது. கடைசி அபிஷேகம் முடிந்து பூஜை செய்துகொண்டிருந்தார்கள். நானும் போய் ஆண்டவனை வணங்கிவிட்டு புளிசாத பிரசாதத்தை சாப்பிட்டு விட்டு, Temp Domeவுக்கு வந்து படுத்தேன். மகாசிவராத்திரி கொண்டாடியதால் மதியம் 02:00 மணி வரை விடுமுறை என்றார்கள்.

அப்புறம் ஒரு நாள், என் எதிர் bedஐ சேர்ந்த ஜெர்மன்காரர், "உன்னிடம் மின்னஞ்சல்(email) பார்க்க வழியிருந்தால், எனக்கு கொஞ்ச நேரம் கொடு, நான் அதற்கான பணம் கூட தருகிறேன்" என்றார். ஆசிரமத்தில் மின்னஞ்சல் பார்க்க வழியில்லை. வெளிநாட்டுகாரர்கள், உள்ளூர் sim வாங்குவதும் கஷ்டம்.(அதையும் மீறி ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் எந்த documentsயும் தராமல் sim வாங்கியுள்ளார்) நான் எப்போது ஒரு S/W Engg என்று சொன்னேனோ அப்பவே நீங்க கேட்டுயிருக்கலாம். பணம் எல்லாம் வேண்டாம். நான், என் Tabல் monthly pack activate பண்ணியுள்ளேன். நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று என் Tabஐ தந்தேன். அவ்வளவு தான், அவர் பயன்படுத்துவதை பார்த்து இன்னும் மூவர்(ஒருத்தர் இந்தியன்) கேட்டார்கள். தந்தேன்.

Tuesday, March 19, 2013

சிவானந்த ஆசிரமம் (Sivananda Ashram) அனுபவம் பாகம் 2

வெள்ளிக்கிழமை(Mar 01), காலை 08:00 மணிக்கு ஆசன வகுப்புக்கு சென்றால், அது அனுபவமுள்ளவர்கள் வகுப்பு மாதிரி இருந்தது. திரும்பி வந்துவிட்டேன். Beginnersக்குன்னு தனியா வகுப்பு இருக்காதோ என்னவோன்னு நினைத்து ஆசிரமத்தைவிட்டு கிளம்பிவிடலாமா என்று யோசித்தேன். Yoga trainer (அவர் தமிழ்) ஒருவரை விசாரித்தேன். வெள்ளிக்கிழமை விடுமுறை என்றும், மதுரைக்கு செல்ல நினைப்பவர்கள்(ஆசிரமம் 20-25KM தொலைவில் உள்ளது) சென்று வரலாம் என்றும், வகுப்புக்கு செல்வது இன்று கட்டாயம் இல்லையென்றும், சிக்கிமிலிருந்து(Sikkim) ஒரு குழு(ஆசிரியருக்கு - Teacher Training படிப்பவர்கள்) வரயிருப்பதால் beginners வகுப்புகள் நாளையிலிருந்து தொடங்கும் என்றும், உணவு ஒரு நாளைக்கு இரு முறை தான் என்றும் சொன்னார்.

அப்புறம், கொஞ்ச நேரம் தூக்கம், கொஞ்ச நேரம் நாவலுன்னு போச்சு.  மாலை உணவிற்கு பின், என் எதிர் கட்டிலிலிருந்த ஜெர்மன்(German) நாட்டைச் சேர்ந்த ஒருவர்(யாருடைய பெயரையும் பயன்படுத்த விரும்பவில்லை) உனக்கு என்ன உடம்பு சரியில்லையா, நீ domeலியே இருக்கியேன்னு கேட்டார். நான் beginner, வகுப்புகள் நாளையிலிருந்து தான் ஆரம்பிக்கிறது என்று சொன்னேன். அவரும் beginner என்று சொன்னார்.

இரவு சிக்கிம் குழு வந்தது. நான் கொஞ்ச நேரம் படித்துவிட்டு, தூங்கினேன்.

சனிக்கிழமை(Mar 02) வகுப்புகள் ஆரம்பித்தது. காலை 08:00 ஆசன வகுப்பை ஜப்பானைச்(Japan) சேர்ந்த பெண் ஒருவரும், மாலை 04:00 ஆசன வகுப்பை தமிழ் நாட்டைச் சேர்ந்தவரும் (எனக்கு பல தகவல்களை கொடுத்தவர்) எடுத்தார்கள். கர்மயோகாவுக்கு ஏன் வரவில்லை(எங்கு போகணுமுன்னு தெரியாததால் நான் போகவில்லை) என்று கேட்டு, receptionனுக்கு பக்கத்தில் காலை 10:45க்கு வரச்சொன்னார்கள்.

ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை காலையில் அமைதியான நடைபயணம் (Silent Walk), சனிக்கிழமை மாலை satsangல் talent show, திங்கட்கிழமை மாலை satsangல் study hourன்னு அப்படியே, ஒரு வாரம் போனது. மதுரையில் பார்க்கவேண்டிய இடங்களை google பண்ணி, அடுத்த வெள்ளிக்கிழமைக்கு திட்டம் போட்டேன்.

வெள்ளிக்கிழமை(Mar 08) காலையிலேயே கிளம்பினேன். பேருந்திற்காக ஒரு மணி நேரம் காத்திருந்து, பெரியார் பேருந்து நிலையம் வந்து, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழி கேட்டு கோவிலை அடைந்தேன்.

மீனாட்சி அம்மன் கோவில்: காலணி பாதுகாப்பு இலவசம், bagக்கு 3 ரூபாய் வாங்கினார்கள். சிறப்பு நுழைவு டிக்கெட்(Rs.100 - அம்மன் சந்நிதானதிற்க்கும், சிவன் சந்நிதானதிற்க்கும் ஒரே டிக்கெட்) வாங்கி, ஊரில் கோவிலில் தரிசனம் செய்வதுபோல் பக்கத்திலிருந்து தரிசனம் செய்தேன். யாரும் கிளம்பென்று தள்ளவில்லை. 100 கால் மண்டபம், 1000 கால் மண்டபம்(கட்டணம் Rs.5) பார்த்தேன்.   மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகணுங்கிற நீண்ட நாள் ஆசை, நிறைவேறிய திருப்தியோடு மறுபடியும் பெரியார் பேருந்து நிலையத்திற்கு எதிரிலிருந்த இன்னொரு பேருந்து நிலையத்திற்கு சென்று, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்ல விசாரித்தேன்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்: கோவிலினுள் நுழையும் போது ஸ்கேன் செய்தார்கள். Swiss type knifeஆல் beep sound வந்தது. அந்த போலீஸ்காரர் அது என்ன என்று விசாரித்து, கொஞ்ச நேரம் என்னோட வேலை, ஊர், மதுரை விஜயம், சிவானந்த ஆசிரமம் பற்றியெல்லாம் பேசினார். அப்புறம் உன் bagஐ வேண்டுமானால் வைத்துவிட்டு நிம்மதியாக தரிசனம் செய்துவிட்டு வா என்றார். (என்னை சந்தேகபட்டார் என்று நினைத்துகொள்ளாதீர்கள், கொஞ்ச நேரம் பேசினதால friendlyஅ தான் சொன்னார்) சிறப்பு தரிசனம் டிக்கெட் விலை Rs.50. வேலுக்கு பாலபிஷேகம் செய்து, அந்த பாலை அடுத்த நொடியே பூசாரிகள் விற்றுக்கொண்டிருந்தார்கள். தரிசனம் முடிந்து வரும்போது போலீஸ்காரருக்கும் சேர்த்து முறுக்கு வாங்கி கொண்டு வந்தேன்.(சென்னையில் போலீஸ்காரர்கள் அதிகாலையில் ஏதாவது மந்திரிக்காக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் நிற்பதை பார்த்து அவர்கள் மேல் வந்த கரிசனம் தான் காரணம்) ரொம்ப சந்தோசபட்டார். அப்புறம், எனக்கும் ஆசிரமத்திலுள்ளவர்களுக்கும் சேர்த்து பஞ்சாமிர்தம் வாங்கிக்கொண்டு திரும்பினேன்.

மதியம் ஒரு மணிக்கெல்லாம் மறுபடியும் பேருந்து நிலையம் வந்துவிட்டேன். மதிய உணவு முடித்து விட்டு, என்னசெய்வது என்று தெரியவில்லை. ஆசிரமம் செல்லவும் மனமில்லை. அதனால் இரயில் நிலையம் பக்கத்தில் இருந்த திரையரங்கத்தில் "ஒன்பதுல குரு" படத்திற்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு, படம் 02:45க்கு தான் என்பதால் "ஆனந்த விகடன்" படித்துக்கொண்டு காத்திருந்தேன்.

ஒன்பதுல குரு: செம மொக்கை படம். அரைமணி நேரத்திற்குள் கிளம்பிவிடலாமா என்று தோன்றியது. கிளம்பினாலும் எங்கு செல்வது, வெயில் வேறு. சரி, எவ்வளவோ மொக்கை படம் பார்த்தாச்சு, இதையும் பார்போம்ன்னு பார்த்தேன். இரண்டாவது பாகம் வேற வருமாம். அடக் கடவுளே!

படம் முடிந்து, பெரியார் பேருந்து நிலையம் சென்று ஆசிரமம் வழியாக செல்லும் பேருந்திற்காக காத்திருக்கும் போது, ஸ்பெயினிலிருந்து(Spain) வந்த ஒரு பெண்ணும்(Beginners classல, ரொம்ப குண்டாகயிருந்தாலும் யோகா செய்யும்   அவரை கவனித்திருக்கிறேன்) பேருந்து பற்றி விசாரித்து கொண்டிருந்தார். 23Pயில் ஏறும்போது அந்த பெண்ணிடமும் சொன்னேன். அந்த பேருந்து ஒரு அக்காவின் பரிந்துரையால் ஆசிரமம் செல்லும் பாதைக்கு திரும்பும்முன் எங்களை இறக்கி விட்டு சென்றது.

ஆசிரமம் வந்தபோது மணி இரவு 08:00ன்னு நினைக்கிறேன்.

சிவானந்த ஆசிரமம் (Sivananda Ashram) அனுபவம் பாகம் 1

மதுரையிலுள்ள சிவானந்த ஆசிரமத்திற்கு, யோகா வகுப்பிற்காக(நான் சென்றதற்கான உண்மையான காரணம் இதுவல்ல) சென்றிருந்தேன். அந்த 16 நாட்களின் அனுபவங்களை பதிவுபண்ண முயற்சித்திருக்கிறேன்.

KSRTCயின்(TNSTC - வலைதளமா அது, 5 பைசாவுக்கு பிரயோஜனமில்லை. KSRTCல அவங்க முதலமைச்சர் புகைப்படம் இருக்கா?), non AC sleeper(Rs.542)ல் வியாழக்கிழமை(Feb, 27) இரவு 09:45க்கு மதுரைக்கு பயணமானேன். மறுநாள் காலை 07:30 மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இறங்கி, உள்ளூர் பேருந்துகள் நிற்கும் இடத்தை தேடும் போது கட்டண கழிப்பறை கண்ணில்பட்டது. நடத்துபவரிடம் சென்று எவ்வளவு என்றேன். அவர் பதில் சொல்லும்முன் அவரிடம் பேசிக்கொண்டிருந்தவர் 3 ரூபாய் என்றார். சண்டை போட மனமில்லாமல், முறைத்து விட்டு வெளியே வந்தேன்.

அங்கிருந்த ஒரு அலுவலகத்தில் இருந்தவரிடம் சிவானந்த ஆசிரமம் முகவரி சொல்லி கேட்டதற்கு, தெரியாதுன்னு சொல்லிவிட்டு, வேறொரு பயணியிடம் விசாரித்தார். அவர் நத்தம் போகிற பேருந்தில் போகசொன்னார். நத்தம் போகும் பேருந்துகள் நிற்கும் தடம்எண் சென்றபோது, நத்தம் பேருந்து ஒன்று கிளம்பியது. அதன் நடத்துனரிடம் பாவனவிளக்கு, சிவானந்த ஆசிரமம் சொன்னதற்கு, அவர் தனக்கு தெரியாதுன்னு கிளம்பினார். அதன்பின், அடுத்த நத்தம் பேருந்தின் நடத்துனரிடம் விசாரித்தத்தில் சத்திரப்பட்டியில் இறங்கி,  உள்ளூர் பேருந்து மூலம் பாவனவிளக்கு போகச்சொன்னார்(ஏனெனில் நத்தம் பேருந்து அந்த நிறுத்தத்தில் நிற்காது). சத்திரப்பட்டியில் இறங்கி, சிவானந்த ஆசிரமம் வலைத்தளத்தில் சொல்லியிருந்த 23P, 23Z பேருந்துகளுக்காக காத்திருந்தேன். ஒன்றரை மணி நேரம் கழித்து 23P வந்தது. ஆசிரமத்திற்கு எதிரிலேயே என்னை இறக்கிவிட்டு சென்றது. (பாவனவிளக்கு நிறுத்ததிலிருந்து ஆசிரமத்திற்கு சிறிது தூரம் நடந்து செல்லவேண்டும்)

ஆசிரமத்திற்குள் நுழைந்ததும், சாப்பிடச்சொன்னார்கள். இல்லை நான் குளிக்க வேண்டும் என்று சொன்னதற்கு, தற்காலிகமாக என் luggageஐ temporary domeல் வைக்க சொல்லி, அதன் பக்கத்திலிருந்த பொது கழிப்பறை/குளியலறையை பயன்படுத்திக்க சொன்னார்கள். Reception காலை 10:30க்கு திறப்பார்கள் என்றும், வேண்டுமென்றால் permanent domeக்கு மாற்றிக்கொள்ளலாம் என்றும் சொன்னார்கள்.

குளித்துவிட்டு, receptionக்கு சென்று Yoga vocation 15 நாட்களுக்கான courseக்கு பதிவு செய்யவேண்டும் என்றேன். பிடிக்காமலோ, வேறு காரணத்தினாலோ 15 நாட்களுக்குமுன் செல்ல வேண்டுமென்றால் கட்டிய பணம் திருப்பி தரமாட்டாது, அதனால் 3 நாட்களுக்கு பதிவு செய்துக்கொள்ளுங்கள். பிடித்திருந்தால் நீடித்துக்கொள்ளலாம் என்றார்கள். நான் வந்துள்ள மனநிலையில் என்ன நடந்தாலும் 15 நாட்களுக்குமுன் செல்லமாட்டேன் என்று நினைத்துக்கொண்டு 3 நாட்களுக்கு பதிவு செய்துக்கொண்டேன்.

Boutiqueக்காக(அவர்களின் கடை, எல்லா பொருட்களுக்கும் 2 ரூபாய் அதிகம்) ஒரு அட்டை கொடுத்தார்கள். Temp domeக்கு வெளியே உள்ள தகவல் பலகையில் ஆசிரமத்தின் அட்டவணை உள்ளதென்றும், அதன்படி வகுப்பிற்கு செல்லுங்கள் என்று சொல்லி, கொசு வலை, தலையணை உரை, 2 bedsheets, கொடுத்தார்கள். Permanent domeஐ விட Temp dome பரவாயில்லை என்று தோன்றியதால் Temp domeக்கு சென்றேன்.


அவர்கள் சொல்லாதது, இல்லை நான் கேட்க தவறியது:
1. Beginners course பற்றி
2. சாப்பாடு பற்றி
3. கர்ம யோகா பற்றி
4. காலை satsangல தான் அன்றைய தினத்திற்கான, வகுப்புகள் நடக்கும் இடம் பற்றி சொல்வார்கள்.

Beginners course 1ம் தேதி தான் தொடங்கும் என்பதால் படுத்து தூங்கினேன். மதியம் ஒரு மணிக்கோ, ஒன்றரை மணிக்கோ எழுந்தேன். அதிகமான பசி. யாரிடம், என்ன கேட்பதுன்னு தெரியவில்லை. அப்படியே மறுபடியும் படுத்தேன். கொஞ்ச நேரம் தூக்கம், கொஞ்ச நேரம் "The First Rule" நாவல் படிப்புன்னு மாலை 06:00 மணியானது. மணி அடித்தார்கள். காலையில் நான் வந்தபோது என்னிடம் பேசியவர், இது உணவருந்தும் நேரம், போய் சாப்பிடுங்கள் என்றார். உணவறைக்கு(Dinning Hall) சென்றேன். காரம், உப்பு, வெங்காயம் இல்லாத கேரளா style உணவு, மூலிகை தண்ணீர். எல்லாரும் limitஆக சாப்பிடுகிறமாதிரி இருந்ததால், கொஞ்சமாகத்தான் சாப்பிட்டேன்(2 நாட்கள் கழித்து தான் நான் எப்படி சாப்பிடுவேனோ அப்படி சாப்பிட ஆரம்பித்தேன்). உணவு நன்றாக இருந்தது. அதன்பின், Temp dome வந்து, Tabல் mail check பண்ணிட்டு, "Whose Body" கொஞ்ச நேரம் படித்துவிட்டு தூங்கினேன்.

Monday, March 18, 2013

Pretty Little Liars - Novel

எழுதியவர்: Sara Shepard

நீண்ட நெடுந்தொடராக(TV Serial) எடுக்கப்பட்டுள்ளது.
imdb.com : http://www.imdb.com/title/tt1578873/?ref_=sr_1
goodreads.com : http://www.goodreads.com/series/44031-pretty-little-liars

ஐந்து உயிர்த்தோழிகளின் கதை. முதலில் அந்த ஐந்து பேரை பற்றி பார்போம்.

Ali: Queen of seventh grade. மற்றவர்களை எல்லையில்லாமல் tease பண்றவள். தன் தோழிகளின் இரகசியங்களை அறிந்தவள். தேவைப்படும்போது அந்த இரகசியங்களை வைத்து தன் தோழிகளை மிரட்டவும் செய்வாள். ஆனால் தன் இரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதவள்.

Aria: அப்பா, தன் மாணவியை dating செய்கிறாரென்றால்(இந்த விஷயம் Aliக்கும் Ariaக்கும் மட்டும் தான் தெரியும்), இவள் தன் teacherஐ bfக்கு தெரியாமல் dating பண்றவள்.

Emily: Lesbian, swimmer. இவள் Aliஐ kiss பண்ணினது, அவளுக்கு love letter தந்தது வேறுயாருக்கும் தெரியாது. ஒரு விஷயம் முடியுமா, முடியாதா என்பதை வேறொரு விஷயத்தின் முடிவை வைத்து முடிவு செய்பவள். நான் கூட சிறு வயதில், cricket match பார்த்துகொண்டிருக்கும் போது, இந்த overல் இந்திய வீரர்கள் 4 அல்லது 6 அடித்தால், அந்த matchஐ இந்தியா வெற்றி பெற்றுவிடுமுன்னு நினைத்திருக்கிறேன்.

Hanna: திருமணதிற்கு முன் உடலுறவு வேண்டாமுன்னு சொல்கிற bfஐ உடலுறவுக்கு கட்டாய படுத்தக்குடியவள்.

Spencer: அக்காவோட bfஐ correct பண்றதே இவள் முதல் வேலை. அக்காவோட முதல் bfஐ kiss பண்ணினது Ariaக்கு மட்டும் தான் தெரியும். படிப்புல கெட்டி.

இந்த மாதிரி கதைகளை படித்து தான் நம்ம ஊரு directorகள் serialsஅ direct பண்றாங்களோ என்னவோ? சரி, கதைக்கு வருவோம்.

பாகம் 1 - Pretty Little Liars: Seventh grade முடிந்தவுடன், Ali காணாமல் போய்விடுகிறாள். 4 தோழிகளும் பிரிந்துவிடுகிறார்கள். 4 பேருக்குமே, அவரவர்களுக்கும் Aliக்கும் மட்டும் தெரிந்த இரகசியங்கள், அவர்கள் பண்ணிய, பண்ற தில்லுமுல்லுகள்(பொய் சொன்னது, ஏமாற்றியது) குறுந்தகவலாக(text message அல்லது sms) "A"ன்னு பேர் போட்டு வருகிறது. அந்த குறுந்தகவல்கள் Aliயிடமிருந்து வருகிறதா, இல்லை வேறுயாரிடமிருந்தாவது வருகிறதா என்று தெரியாமல் குழப்பமடைகிறார்கள்.

பாகம் 2 - Flawless: Aliயின் இறந்த உடல் கிடைக்கிறது. அதனால் 4 பேரும் வேறொருத்தர் தான் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டு இவர்களை மிரட்டுகிறார்கள் என்று பயப்பட ஆரம்பிகிறார்கள். 4 பேரும் Aliயின் சடங்கின் போது சந்தித்தாலும் "A"வைப் பற்றி யாரும் பேசுவதில்லை.

பாகம் 3 - Perfect: Hanna, Tobyயென்கிற பையனுக்கு "A"விடமிருந்து வரும் குறுந்தகவல்களைப் பற்றி சொல்கிறாள். அதன்பின், தோழிகளும் தங்களுக்குள் "A"வைப் பற்றி கலந்து ஆலோசிக்கிறார்கள். Hanna அவளின் உயிர்த்தோழி(Ali மறைந்து, தோழிகள் பிரிந்தபின்) Monaவின் partyயில் அவமானப்படுத்தப்பட்டு, Tobyயால் காப்பாற்றப்படுகிறாள். அப்பொழுது அவளுக்கு ஒரு குறுந்தகவல் வருகிறது. எல்லா குறுந்தகவல்களும் Unknown Numberன்னு வரும் போது, Hannaவுக்கு வரும் இந்த குறுந்தகவல் மட்டும் அனுப்புகிறவரின் எண்ணோடு வருகிறது. அதைவைத்து Hanna, "A" யாருன்னு கண்டுபிடித்து விடுகிறாள். மற்ற 3 பேருக்கும் சொல்ல, அவர்கள் எப்போதும் சந்திக்கும் இடத்திற்கு வர சொல்கிறாள். அங்கு வரும் மற்ற மூவரின் கண்முன்னே ஒரு கார் Hannaவின் மீது மோதுகிறது.

பாகம் 4 - Unbelievable: Hanna குணமடைந்தாலும், விபத்துக்கு முன் நடந்த சில நிகழ்வுகளை அதாவது partyயில் அவமானபடுத்தப்பட்டதையும், "A" யாருன்னு கண்டுபிடித்ததையும் மறந்துவிடுகிறாள். Monaவுக்கும் Unknown குறுந்தகவல்கள் வர, அவளும் இவர்களுடன்(Aria, Emily, Hanna, Spencer) சேர்ந்து கொள்கிறாள். ஒரு சமயத்தில், Hannaவுக்கு மறந்த விஷயங்கள் ஞாபகம் வர, தன்னுடன் இருக்கும் Ariaவுக்கும், Emilyவுக்கும் சொல்கிறாள். அதே சமயத்தில் "A" Spencerஐ கொலை செய்ய முயல்கிறார். போலீஸ் உதவியுடன் Spencerஐ காப்பாற்றி, "A" மூலமாக Aliஐ கொலை செய்தது யாருன்னு அறிகிறார்கள்.

நான்காவது பாகம் வரை "A"வையும், Aliஐ கொலை செய்தவரையும் கண்டுபிக்க முடியதாபடி கதை நகருகிறது. ஆனால் நான்காம் பாகத்தின் "About" sectionல் "A" யாரென்றும், Aliஐ கொலை செய்தது யாரென்றும் சொல்லிவிடுவதால் நான்காம் பாகத்தின் சுவாரசியம் கொஞ்சம் குறைந்து விடுகிறது.

***** Spoilers Start
Ali இறந்தபின், அவளுக்கு மட்டும் தெரிந்த விஷயங்கள் வேறோருத்தரும்  தெரிந்து கொள்ளமுடியுமானால் ஏதாவது டைரி இருக்குமுன்னு நினைத்தேன்.

இரண்டு பேர் திட்டமிட்டு செய்யும் ஒரு விஷயம், மற்றவர்கள் அவரவர்களுக்கு தெரிந்தவற்றை வைத்து எப்படி பார்ப்பார்கள்(நினைப்பார்கள்) என்ற விதத்தில் கதை சொல்லப்பட்டுள்ளது.
***** End

மொத்தம் 15 பாகங்கள் உள்ளது.

Saturday, February 23, 2013

சுஜாதா (பகுதி 2) - Sujatha (Part 2)

சிவந்த கைகள்
MBA போலி சான்றிதழினால் வேலைக்கு சேர்ந்து, அங்கு நடக்கும் எதிர்பாராத சம்பவங்களினால் அந்த கம்பெனியின் டைரக்டராக முயற்சிக்கிறான். இந்த கதை எனக்கு வட்டாரம் திரைப்படத்தை ஞாபகபடுத்தியது.

நிலா நிழல்
காலேஜ் படிக்கும்போது கூட படித்த ஒருவன், நான் ஒரு சனி, ஞாயிறுக்கு ஊருக்கு போயிட்டு வரும்போது முடிந்தால் இந்த நாவலை வாங்கிவர சொல்லியிருந்தான். நானும் சென்னை இரயில் நிலையம் ஹிக்கிம் போதம்ஸில் கேட்டேன், ஆனால் கிடைக்கவில்லை. ஒன்பது இல்லை பத்து வருடம் கழித்து இப்போதுதான் இந்த நாவலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நாவல் படிக்கும் முன்புதான் "கொலையுதிர் காலம்", "கொலை அரங்கம்" படித்திருந்தேன். அதனால் "நிலா நிழல்" பெயரிலிருந்து கொஞ்சம் சஸ்பென்ஸ், த்ரில்லிங்க இருக்குமுன்னு எதிர்பார்த்தேன். ஆனால் இது ஒரு குடும்ப நாவல். கண்டிப்பான அப்பா, படிப்பை விட கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரும் மகன் பற்றியது.

வசந்த்! வசந்த்!
சஸ்பென்ஸ் இருக்கு. ஆனால் த்ரில்லிங்காயில்லை.

மறுபடியும் கணேஷ்
மனைவியை சந்தேகப்பட்டு கொலைசெய்யும் கணவனை 'கணேஷ்-வசந்த்' பிடிக்கும் கதை.

நில்லுங்கள் ராஜாவே 
'கணேஷ்-வசந்த்' நாவல். காலேஜ் படிக்கும்போது, இதே கதைக்கருவில் ராஜேஷ் குமாரின் ஒரு நாவல் படித்ததாக ஞாபகம். அந்த நாவலில் தியானத்தின்(சரியாக ஞாபகமில்லை) மூலமாக கதாநாயகனின் மனதில் அவன் மனைவியை பற்றி தவறான எண்ணத்தை விதைத்து, அதனால் அவன் அவளை கொலை செய்ய முயல்வான்.

விபரீத கோட்பாடு 
'கணேஷ்-வசந்த்' நாவல். குறிப்பிட்ட தேதியில் பிறந்த பெண்ணை மணம் செய்துகொண்டால் நாட்டை ஆளக்கூடிய பையன் பிறப்பான்னு ஒருத்தனும் அவன் சித்தப்பாவும் செய்யும் தில்லுமுல்லுகளை 'கணேஷ்-வசந்த்' கண்டு பிடிக்கும் கதை.

24 ரூபாய் தீவு
வில்லன் யாருன்னு ஈசியா கண்டுபிடிக்கமுடியுது. அந்த சஸ்பென்ஸ் உடைஞ்சாலும், கணேஷ்-வசந்த் என்ட்ரி ஆனதும் கொஞ்சம் த்ரில்லிங்க இருந்தது. ஆனால் கணேஷ்-வசந்த் வருவது விசுவை(கதாநாயகன்) பெயில் எடுக்கமட்டும்தான்.




சுஜாதா (பகுதி 1) - Sujatha (Part 1)

சுஜாதா ரங்கராஜன் (Sujatha Rangarajan)
தமிழ் கதைகள், நாவல்கள் படிக்கும் அத்தனை பேருக்கும் தெரிந்த, பிடித்த கதாசிரியர். நட்ட நடு, நடு சென்டருன்னு ரொம்ப பயன்படுத்திருகிறார். அவரோட பழக்கம் அப்படியா இல்லை சாதாரண மக்கள் பேசும் போது அதிகமாக பயன்படுத்திருகிறார்களுன்னு அவரும் பயன்படுத்தினரான்னு தெரியவில்லை. வலைத்தளம்: www.writersujatha.com

ஆ...!
நான் படித்த சுஜாதாவின் முதல் நாவல். கதை சரியாய் ஞாபகமில்லை. ஆவி, அமானுஷ்ய விஷயங்கள் பற்றியதுன்னு நினைக்கிறேன்.

என் இனிய இயந்திரா
நான் படித்த சுஜாதாவின் இரண்டாவது நாவல். அவரோட கற்பனை வியக்கவைக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் இருந்த சுவாரசியம், இடையிலேயே குறைந்து இறுதியில் இல்லாமல் போனது.

கொலையுதிர் காலம்
'கணேஷ்-வசந்த்' நாவல். ரொம்ப த்ரில்லிங்க இருந்தது. ஜீன்ஸ் படத்துல, ஒரு பாடலில் ஐஸ்வர்யாராயை ப்ரொஜெக்ட் பண்ணி இரண்டு பேராக காட்டுவதை போல இதில் பேயை காட்டுவார்கள். கடைசி வரைக்கும் அவர்கள் எடுத்த photos ah develop பண்ணி பார்க்கவேயில்லை.

ஓடாதே
கதாநாயகனையும் அவன் மனைவியையும் தேனிலவு கொண்டாடவிடாமல் பலர்  ஏன் துரத்தினார்கள், திடீர் என்று ஏன் நிறுத்தினார்கள் என்று கணேஷ்-வசந்த் கடைசிக் கட்டத்தில் வந்து தெளிவாக்குவார்கள்.

கொலை அரங்கம்
'கணேஷ்-வசந்த்' நாவல். ரொம்ப த்ரில்லிங்க இருந்தது. இந்த நாவல்களையெல்லாம் அந்த காலங்களில் படித்திருக்க வேண்டும். இப்ப படிக்கும் போது யாரு வில்லன்னு எளிதாக கணிக்கமுடியுது.

நைலான் கயிறு
சுஜாதாவின் முதல் நாவல்.

நில் கவனி தாக்கு
இந்த நாவல் ஒரு அணு விஞ்ஞானி கடத்தப்படும் திடுக்கிடும் டில்லி சம்பவத்திலிருந்து துவங்கி தேசம் கடந்து சென்று ஆச்சரியத்தில் முடிகிறது. A Wednesday படம் மாதிரி, இது ஓரிரு நாட்களில் நடக்கும் கதை.

Monday, February 18, 2013

Software Engineer


இன்று காலையில், ஓட்டலில் சாப்பிடும் போது 30 - 35 வயது உடையவரின் T-shirt caption, Cut Copyன்னு இருந்ததால் கொஞ்சம் கூர்ந்து கவனித்தேன்.

அந்த caption "Cut + Copy + Paste = Software Engineer". Caption சரிதான். ஆனால் நீங்க நினைக்கிறமாதிரி அது அவ்வளவு சுலபமான வேலையில்லை.

சின்ன கதை ஒன்று. கப்பல் ஒன்றை Engineerகள் சரி செய்ய முடியாமல், கப்பல் சர்வீஸில் 20 வருடத்திற்கு மேல் அனுபவமுள்ள, ஆனால் படிக்காத ஒருத்தரை அழைப்பார்கள். அவர் கப்பலை சுற்றி பார்த்துவிட்டு ஒரு இடத்தில் தன் சுத்தியால் தட்டி சரி செய்துவிடுவார். அவர் கேட்ட கூலிக்கு, ஒரு இடத்தில் தட்டியதருக்கு இவ்வளவா? என்று கேட்பார்கள். கூலி தட்டினதருக்கு இல்லை, எங்க தட்டனமுன்னு கண்டுபிடிச்சதருக்குன்னு சொல்லுவார்.

அப்படிதாங்க எங்க வேலையும். சாதரணமா சொல்லலாம் Cut, Copy, Pasteன்னு. ஆனால் எங்கே Cut பண்ணனும், எதை Copy பண்ணனும், எப்படி Paste பண்ணனுங்கிறதுலதான் இருக்கு.