வெள்ளிக்கிழமை (Mar 18) அதிகாலை 04:30க்கு எழுந்து, 05:00க்கு தயாராகயிருந்தேன். சிறிது நேரம் கழித்து கிளம்பினோம். அது இரண்டு இரண்டு பேரும், கடைசியில் ஐந்து பேரும் அமரும் வகையில் இருந்த வாகனம். தனியாள் என்பதாலும், சில பேர்(ஜோடிகள்) ஒன்றாக உட்கார ஆசைபடுவதை தடுக்க வேண்டாமென்றும் எப்பவும் போல கடைசியில், ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்தேன்.
என்பக்கத்தில் அமர்ந்த இந்தியரு(னு)ம்(வட-ன்னு நினைக்கிறேன்), அவர் கூட அமர்ந்த வெளிநாட்டு பெண் ஒருவரும், நான் ஏன் அங்கு உட்கார்ந்தேன் என்று என்னை சங்கடப்பட்ட வைத்தார்கள். சிறிது நேரம் "The First Rule" படித்து விட்டு தூங்கினேன். ஒரு ஓட்டலில் காலை உணவிற்காக நிறுத்தினார்கள். பக்கத்திலிருந்த ATMல் இராமேஸ்வரம் சுற்றுலாவிற்கான பணம் Rs.1400ஐ ஆசிரமத்தை சேர்ந்தவர்களுக்கு தர எடுத்துக்கொண்டேன்.
எல்லாரும் AC அறையில் அமர்ந்ததால் நானும் சென்று அமர்ந்தேன். உணவு வந்தவுடன் நான் சாப்பிட ஆரம்பித்தேன். இரண்டு வாய் சாப்பிட்டதும் அவர்கள் சாப்பிடும்முன் செய்யும் பஜனையை செய்தார்கள். அப்போதுதான் எனக்கு அவர்களின் ஆசிரம வழக்கம் ஞாபகம் வந்தது. ஆஹா! எப்போதும் வழக்கத்தை விடமாட்டார்கள் போலிருக்குன்னு சந்தோசப்பட்டேன். (பகலில், கடலில் அந்த சந்தோசத்தை கரைத்தார்கள்.)
பயணம் தொடர்ந்தது. இராமேஸ்வரத்தை அடைந்தோம். வாகனத்திலேயே மாற்று உடை அணிந்து கொண்டு, என் பக்கத்துக்கு bed ஆஸ்திரேலியாகாரரின் கையை பிடித்துக்கொண்டு கடலில் 3 முறை மூழ்கியெழுந்தேன். கோவிலினுள், சன்னிதானத்தை சுற்றி 22 கிணற்றிலிருந்து நீரை சிறிய வாளியில் எடுத்து நம்மீது ஊற்றுவார்கள். 3 கிணறுகளை மூடிவிட்டதால் 19 கிணறு, ஆனால் கடைசியில் ஊற்றும் நீரில் அந்த 3 கிணற்றிலிருந்த நீரும் கலந்துயிருக்கும் என்றார்கள். முடிந்தால் கிணற்று நீரை சுவைத்து பார்க்க சொன்னார்கள். ஒவ்வொரு கிணற்று நீரின் சுவையும் மாறுபடுமாம்.
ஒரே நாளில் 19 முறை குளித்த மாதிரியான அனுபவம். மாற்று உடை அணிந்துக்கொண்டு சன்னிதானதினுள் நுழைந்தோம். வெளிநாட்டினரை ஒரு காவலாளி தடுத்தார். அவர்கள் திருநீர் அணிந்து செல்வார்கள் என்றும், சிவானந்த ஆசிரமத்திலிருந்து குழுவாக வந்திருக்கோம் என்றும் சொல்ல அந்த காவலாளி வழிவிட்டார். தரிசனம் முடிந்ததும். சன்னிதானத்தை சுற்றும் பாதையில் அமர்ந்து சிறிது நேரம் பஜனை செய்து விட்டு கிளம்பினோம். கோவிலில் சர்க்கரை பொங்கல் பிரசாதம் தந்தார்கள். நன்றாக இருந்தது.
மதிய உணவு ஏற்பாடு செய்ய இரண்டு பேர் முயற்சி செய்தார்கள். காலமும் கடந்ததால் இளநீர் அருந்திவிட்டு தனுஷ்கோடி கடலுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தார்கள். ஆசிரமத்தில் தான் இரண்டு வேலை உணவு, இங்கையுமா? என்று நினைத்துகொண்டேன்.
தனுஷ்கோடிக்கு ஒரு வேனிலும், ஒரு ஜீப்பிலும் பயணமானோம். வண்டிகள் செல்லும் வகையில் பாதையில்லததால் சிலநேரங்களில் கடலோரத்திலும், சிலநேரங்களில் கடலிலும் பயணம் செய்தோம். வேனில் மாற்று உடை அணிந்து கொண்டு, கடலில் இறங்கினேன். கடல் நீர் வெதுவெதுப்பாக இருந்தது. 50 - 100 அடிவரை நெஞ்சு வரை தான் நீர் இருந்தது. அந்த ஜோடி (பயணம் தொடங்கும்போது என் பக்கத்தில் உட்கார்ந்த) தனிய சென்றது. அந்த வெளிநாட்டு பெண், அந்த இந்தியரு(னு)க்கு நீச்சல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். வேறொரு இந்தியர்(ன்) வேறொரு இந்தியரு(ன் - ஆண்பால், பெண்பால் என்ன?)க்கு நீச்சல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
கடலில் வெளிநாட்டை சேர்ந்தவர்களும், இந்தியர்கள் சிலரும் ஆசனங்கள் செய்துக்கொண்டும், அதைப்பற்றி பேசிக்கொண்டும் இருந்தால், ஆசிரமத்தை சேர்தவர்கள்(அதாவது அங்கு வேலைசெய்கிறவர்கள்) ஒருத்தர் தோளில் ஒருத்தரை வைத்துக்கொண்டு, ஒருவர் தோளில் உட்கார்ந்திருப்பவர் இன்னொருவர் தோளில் உட்கார்ந்திருப்பவரை தள்ளும் விளையாட்டை ஆடிகொண்டிருந்தார்கள். மக்கள் அதிகம் இல்லாதால் ஆசிரமத்தின் பேர் தப்பித்தது.
15 - 16 வயசுகளில் ஏற்படும் ஒரு வித உணர்ச்சியை இந்தியர்கள் திருமணமாகும் வரை அடக்கி வைப்பது கடினம் தான். இதுவே அவர்கள் கல்லூரிகள் மூலமாகவோ அல்லது தனியாகவோ வந்திருந்தால் நான் கவனித்து கூட இருக்கமாட்டேன். ஆனால் ஆசிரமம் என்ற பெயரில் வந்ததுதான் என்னை உறுத்தியது. ஒருசில வெளிநாட்டு பெண்களே பிகினி(bikini) அணியாமல் கடலில் இறங்கினார்கள். அப்படியிருக்கும் போது நாம் இப்படி நடப்பதால் தான் என்னவோ வெளிநாட்டினர் இந்தியர்களை அளைபவர்களாக நினைக்கிறார்கள்.
என் பக்கத்து bed ஆஸ்திரேலியாகாரர் நீச்சல் செய்வது பற்றி சில தகவல்களை சொன்னார். அவரும்(15 ஆண்டுகளாக யோகா செய்துக்கொண்டிருக்கிறாராம்) அவர் தோழியும்(GF) கடலில் தலைக்கீழாக சில நொடிகளிருந்தார்கள். விதவிதமாக நீச்சலுமடித்தார்கள். இவர்கள் பற்றியும், இவர்களின் இந்திய பயணத்தை பற்றியும் தெரிந்துக்கொள்ள twoloosebeans.com பார்க்கவும்.