Tuesday, August 20, 2013

Sidney Sheldon's Novels (Part 1)

The Doomsday Conspiracy
நான் படித்த முதல் Sidney Sheldonன் நாவல் மட்டுமல்ல, முதல் ஆங்கில நாவலும் கூட இதுதான். கல்லூரியில் படிக்கும் போது, சகமாணவன் ஒருவர் சொல்ல, இந்த நாவலை வாங்கிப் படித்தேன். அவருக்கு என் நன்றி. இந்த நாவலின் கதைக்கரு சுற்றுச்சுழல் பற்றியது என்று நினைக்கிறேன். படித்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் சரியாக ஞாபகமில்லை. இந்நாவல் இரண்டு பகுதி கொண்டது.

1. வேட்டையாடுதல் - ஒரு அதிகாரியிடம் ஒரு சுற்றுலா குழுவில் இடம் பெற்றிருந்தவர்களை கண்டு பிடிக்க சொல்வார்கள். அந்த குழுவில் இருந்தவர்கள், அச்சுற்றுலா மூலமாகதான் அறிமுகமானவர்கள். அதாவது அச்சுற்றுலாவிற்கு முன் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லாதவர்கள். அந்த அதிகாரி கிடைக்கும் ஒரு தகவலை வைத்து, அச்சுற்றுலா குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவரை கண்டுபிடித்து, அவர் மூலமாக மற்றொருவர், அந்த மற்றொருவர் மூலமாக இன்னொருவர் என்று அவர் கண்டுபிடிப்பது சுவாரசியமாக இருந்தது.

2. வேட்டையாடப்படுதல் - தான் கண்டுபிடித்த சுற்றுலா குழுவை சேர்ந்தவர்கள் என்ன ஆனார்கள்? என்று தெரிந்துக்கொள்ளும் அந்த அதிகாரி, தன்னையும் சிலர் துரத்துகிறார்கள் என்று புரிந்துக்கொள்கிறார். அச்சுற்றுலா குழுவை சேர்ந்தவர்கள் என்ன ஆனார்கள்?, ஏன் அந்த அதிகாரியை துரத்துகிறார்கள்? அவர் எப்படி தப்பித்தார்? என்பதெல்லாம் சுவாரசியமாக சொல்லப்பட்டுள்ளது.


The Naked Face
The Soulkeepers நாவல் படித்து முடித்தப்பின், எந்த புத்தகத்தை படிப்பது என்று ஒரு குழப்பம். தொடர்ந்து ஏதாவது ஒரு நாவல் படித்து கொண்டிருந்ததால் கொஞ்ச நாள் இடைவெளி விடலாமென்று நினைத்தேன். ஆனால் தினமும் பேருந்து பயணம், எதையாவதை படித்தேயாக வேண்டும் என்று என்னை தள்ளியதால், இந்த நாவலை ஆரம்பித்தேன்.

Sidney Sheldonன் முதல் நாவலாகயிருந்தாலும் சுவாரசியமாகவும், திரில்ங்காகவும் இருந்தது. ஒரு மனோதத்துவ மருத்தவரிடம் வரும் ஒரு நோயாளியும், அந்த மருத்துவரிடன் வேலை செய்யும் ஒரு பெண்ணும் கொலை செய்யப்பட, போலீஸ் மருத்துவரை சந்தேகப்பட, மருத்துவர், துப்பறியும் நிபுணரிடன் செல்கிறார். இதற்கு மேல் சொன்னால், அது spoiler ஆகிவிடும். நீங்கள் படிக்கும் போது அந்த சுவாரசியம் விட்டு போய்விடும்.

இந்நாவலின் இறுதி கட்டத்தை படிக்கும் போது, இரண்டு விசயங்கள் ஞாபகம் வந்தது. ஒன்று, முதல்வன் படத்தில் இறுதியில், அர்ஜுன் மணிவண்ணனிடம், "கடைசியில் என்னையும் அரசியல்வாதியாகிட்டாங்களே!" என்பார். இரண்டாவது John Grishamன் The Racketeer நாவலில் எனக்கு பிடித்த வரிகள், "I guess under the right circumstances, a man will do just about anything".

No comments: