Showing posts with label TV Series. Show all posts
Showing posts with label TV Series. Show all posts

Thursday, September 19, 2013

Criminal Minds - TV series


imdb rating 8 - http://www.imdb.com/title/tt0452046/

CSI மாதிரி இன்னொரு தொடர். FBIயின் BAU (Behavioral Analysis Unit) என்கிற ஒரு குழுவின் உதவியால், உள்ளூர் போலீஸ் குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்று ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது ரொம்ப இக்கட்டான சூழ்நிலையை தவிர, இவர்களாக எந்த குற்றத்தையும் விசாரிக்க மாட்டார்கள். உள்ளூர் போலீஸ் இவர்களின் உதவியை நாடினால் விமானத்தில் வந்து குற்றவாளிகளை கண்டு பிடித்து கொடுத்து, மறுபடியும் விமானத்தில் திரும்பி விடுவார்கள்.

விமானம் புறப்படும் போதும், இறங்கும் போதும், அந்த எபிசோடிற்கு சம்பந்தப்பட்ட, அந்த எபிசோடில் முக்கிய பங்காற்றும் ஒருவர் ஏதாவது ஒரு தத்துவத்தை சொல்வார். இவர்களுக்கான தனிப்பட்ட அந்த விமானத்தில் தொலைபேசியில் பேசுவார்கள், ஏன் webcamல் chat கூட செய்வார்கள்.

குழுவில் 7 பேர். 4 ஆண்கள், 3 பெண்கள். ஒவ்வொரு எபிசோடில் ஒவ்வொருவர் முக்கிய பங்காற்றுவார். ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு குற்ற சம்பவத்தை பற்றியது. ஒரு சில நேரங்களில் ஒரு குற்ற சம்பவம் இரண்டு எபிசோடாக வரும்.

எந்த விதமான தகவலாகட்டும் அவர்களின் கணிப்பொறியிலிருந்து எடுக்கிறார்கள். பெற்றோர்களினால் தனித்து விடப்பட்ட குழந்தைகள், பெற்றோர் இறந்து விட்டதால் வேறொருவரிடம் வளரும் குழந்தைகள், போரினால் மனநலம் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள்,   சிறு வயதில் தான் அனுபவித்த கொடுமைகளினால் எப்படி பட்ட serial killerகளாகவும் மாறி விடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். அவர்களின் சமுதாயம், அந்த வாழ்க்கை முறை தான் அவர்களை அப்படி மாற்றுகிறது என்று நினைக்கிறேன்.

Dexterல் Debraவின் இரண்டு boyfriends இதில் serial killerகளாகவும், Lie to meல் Lightmanன் மகளாக வருபவர் கொலை செய்யப்படுபவராகவும் வருகிறார்கள். Dexterன் அப்பா கூட வருகிறார்.

ஒரு குடும்பமாக வேலை செய்கிறார்கள், வாழ்கிறார்கள். ஒருவருக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உயிர் கூட தர தயாராகயிருக்கிறார்கள்.

Jennifer Jareau (JJ), எந்த குற்றத்தை அவர்களின் குழு ஆராயவேண்டும் என்று தேர்வு செய்து, அதை பற்றி தன் குழுவிற்கு விளக்கமளிப்பார். கொஞ்ச நாள் அந்த கதாபாத்திரம் காணாமல் போக, Penelope Garcia (இவர் அந்த குழுவின் Hacker) செய்து வருகிறார். குறிப்பாக ஏன் இதை சொல்கிறேனென்றால் JJ ஒரு குற்றத்தை விளக்கும் போது, குரலில், முகத்திலிருக்கும் ஒரு கவலை இந்த பெண்ணிடம் சுத்தமாகயில்லை. வசூல் ராஜா MBBS, பிரகாஷ் ராஜ் கதாபாத்திரம் தான் ஞாபகம் வந்தது.

ஒன்பதாவது Season போய் கொண்டிருக்கிறது.

Thursday, August 1, 2013

Dexter - TV Series (Part 1)

imdb link: http://www.imdb.com/title/tt0773262/ 
Rating: 9

என்னோடு பிரெஞ்சு மொழி பயிலும் நண்பர்கள் மூலம் அறிமுகமான இன்னொரு ஆங்கில தொடர். அவர்கள் serial killer கதையென்றதும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. நண்பர் ஒருவர் கொடுத்தார். சில நாட்களுக்கு முன் தான் ebayவில் 7 seasonகளின் விலை Rs.5000க்கும் மேல் என்று பார்த்ததும், உங்களால் எனக்கு Rs.5000 மிச்சம் என்றேன். சரி தொடருக்கு வருவோம்.

நான் பார்க்கும் ஆறாவது தொடர். இதற்கு முன் பார்த்த ஐந்து தொடரும் வேறுவேறு கதை களம் கொண்டவை. அது போலத்தான் இதுவும். இத்தொடரில் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் அண்ணன் தங்கை உறவு - "தங்கைக்கு ஏதாவதென்றால், கொலை கூட செய்ய தயங்காத அண்ணன், அண்ணனை விட்டு கொடுக்காத தங்கை".

த்ரில்லர், சஸ்பென்ஸ் தொடர் என்பதால் என்ன எழுதுவதென்று தெரியவில்லை. ஒரு வேலை நீங்கள் அத்தொடரை பார்க்கும் போது நான் அனுபவித்த அந்த உணர்வு கிடைக்காமல் போய்விடுமோ? என்ற எண்ணம்.

இதுவரை 4 season பார்த்துள்ளேன். Dexter சாதாரண வாழ்கை வாழ ஆசைபடுவது, சில குற்றவாளிகளை சட்டத்திலிருந்து  தப்பிக்க விட்டு கொலை செய்வது, தங்கை, காதலி, காதலியின் கொழந்தைகளின் மீதான ஈர்ப்பு, சில விசங்களை அணுகும் முறை என்று இத்தொடர் நன்றாகத்தான் உள்ளது. Debraக்கு(Dexterன் தங்கை) ஒவ்வொரு seasonனிலும் ஒவ்வொரு காதலன்.

Season 01
ஒரு கொலை சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஒரு குழந்தையை ஒரு போலீஸ்காரர் காப்பாற்றி, தன் குழந்தையாக தத்தெடுத்துக் கொள்கிறார். தன் அம்மாவின் கொலையை நேரில் பார்த்த அந்த குழந்தையோ, கொலையை ரசிக்க ஆரம்பித்து, யாரையாவது கொலை செய்ய துடிக்கிறான். அந்த மனநிலையை மாற்ற முடியாதென்பதால், அந்த போலீஸ்காரர் அதாவது அப்பா, தவறு செய்து சட்டத்திலிருந்து தப்பிக்கும் குற்றவாளிகளை ஆதாரங்கள் இல்லாமல் எப்படி  கொலை செய்து தப்பிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிறார். அவனும் பல பேரை கொலை செய்து அவர்கள் ரத்த துளியை தான் செய்யும் வேலைக்கான பரிசாக சேகரிக்கிறான். Miami போலீசில் அவன் தங்கையும்(போலீஸ்காரரின் பெண்), forensics பிரிவில் அவனும் வேலை செய்கிறார்கள்.

இந்நிலையில், மியாமியில் தொடர் கொலைகள் நடக்கிறது. ஒவ்வொரு கொலையிலும் Dexterக்கு(கதையின் நாயகன்) கிடைக்கும் துப்பு, Dexterவுடன் சம்பந்தப்பட்டு இருக்கிறது. அந்த கொலைகாரனுக்கு "Ice Truck Killer" என்று பெயரிட்டு மியாமி போலீஸ் ஒருபுறமும், Dexter மறுபுறமும் தேடுகிறார்கள். இடையிடையே Dexterன் வாழ்கையில் நடந்த விசயங்கள் flashbackஆக வருகிறது. கடைசியில் Dexter அந்த கொலைகாரனை பிடித்து, Dexterக்கும் அவனுக்கும் உள்ள உறவுவை பற்றி தெரிந்துக்கொள்கிறான்.