போன மாதம்(April) தொடக்கதில் TATA Docomo Photon 3G வாங்கினேன். 5GB வரை அதன் வேகம்(3G speed) நன்றாக இருந்தது. (உன்னுடன் வேலை செய்யும் ஒருவருக்கு TATA Docomo Photon 3Gஐ சிபாரிசு வேறு செய்தேன்) 5GB ஆனதும் வேகம்(3G speed) 128Kbps ஆனது. April, 26ம் திடீரென்று 3G speed கொஞ்ச நேரம் வந்தது. அப்ப தான் billing cycle பற்றி சந்தேகம் வந்ததால் 28ம் தேதி customer careரை தொடர்பு கொண்டதற்கு ஒவ்வொரு மாதமும் 25ம் தேதி bill வரும் என்றார். சரியென்று விட்டுவிட்டேன்.
கடந்த திங்கட்கிழமை முதல் speed 0 - 5Kbps தான் வருகிறது. Wireless தானே signal problemஅ இருக்குமென்று நினைத்திருந்து, நேற்று இரவு customer careரை தொடர்பு கொண்டால், அந்த புண்ணியவான் நீங்கள் 5GB உபயோகபடுத்திவிட்டீர்கள் என்பதையே தேய்ந்து போன ரெகார்ட் மாதிரி, நான் என்ன கேட்டாலும் சொல்லியதால் தொடர்பை துண்டித்தேன்.
இன்று, நான் TATA Docomo Photon 3G வாங்கிய show roomக்கு, சென்று விசாரித்ததில் 15GB வரை தான் 128Kbps வரும் அதன் பின் 8Kbpsக்கு குறைந்து விடும், நீங்கள் 17GB பயன்படுத்தியுள்ளீர்கள் என்றார். ஏங்க இதை முன்னமே சொல்லியிருந்தால் நான் வாங்கியே இருக்க மாட்டேன் என்றதற்கு நீங்கள் கையொப்பமிட்ட படிவத்தில் அதெல்லாம் போட்டிருக்கு என்றனர். சரி அது விடுங்கள், bill generate ஆனது Apr, 25. அன்றிலிருந்து இன்று வரை 13 நாட்கள். கடந்த 3 நாட்களாக speed 5Kbpsக்கு குறைவாக வந்ததால் நான் பயன்படுத்தவேயில்லை. இந்த 3 நாட்களை கழித்தால் 10 நாட்கள். சனிக்கிழமை நான் ஊருக்கு சென்றிருந்தேன். Roaming என்பதால் அன்றும் பயன்படுத்தவில்லை. ஆக மொத்தம் 9 நாட்கள். அதில் 3 நாட்கள் 3G speedக்கு 5GB என்று வைத்துக்கொண்டால் மீதி 6 நாட்கள். இந்த 6 நாட்களில் 128Kbps speedல் 10GBயும், 8Kpbs speedல் 2GBயும் பயன்படுத்தியுள்ளேன் என்பது நம்பும்படியாக உள்ளதா? என்றால் அதற்கு பதிலில்லை. Day wise usage detailsஅ கேட்டால் customer careரை தொடர்பு கொள்ளுங்கள் என்றனர்.
இண்டர்நெட் பயன்படுத்துவோருக்கு தெரியும் 6 நாட்களில் 128Kbps speedல் 10GBயும், 8Kpbs speedல் 2GBயும் சாத்தியமில்லாத ஒன்றென்று. 8Kpbs speedல் ஒரு பக்கம் கூட load ஆகாது என்றால் 2GB எப்படி?
நண்பர்களே, வாங்கும் போது எச்சரிக்கையுடன் இருங்கள்.
No comments:
Post a Comment