இன்று காலையில், ஓட்டலில் சாப்பிடும் போது 30 - 35 வயது
உடையவரின் T-shirt caption, Cut Copyன்னு இருந்ததால் கொஞ்சம்
கூர்ந்து கவனித்தேன்.
அந்த caption "Cut + Copy + Paste =
Software Engineer". Caption சரிதான்.
ஆனால் நீங்க நினைக்கிறமாதிரி அது அவ்வளவு
சுலபமான வேலையில்லை.
சின்ன கதை ஒன்று. கப்பல்
ஒன்றை Engineerகள் சரி
செய்ய முடியாமல், கப்பல் சர்வீஸில் 20
வருடத்திற்கு மேல் அனுபவமுள்ள, ஆனால்
படிக்காத ஒருத்தரை அழைப்பார்கள். அவர் கப்பலை சுற்றி
பார்த்துவிட்டு ஒரு இடத்தில் தன்
சுத்தியால் தட்டி சரி செய்துவிடுவார்.
அவர் கேட்ட கூலிக்கு, ஒரு
இடத்தில் தட்டியதருக்கு இவ்வளவா? என்று கேட்பார்கள். கூலி
தட்டினதருக்கு இல்லை, எங்க தட்டனமுன்னு கண்டுபிடிச்சதருக்குன்னு சொல்லுவார்.
அப்படிதாங்க எங்க வேலையும். சாதரணமா
சொல்லலாம் Cut, Copy, Pasteன்னு. ஆனால் எங்கே
Cut பண்ணனும், எதை Copy பண்ணனும்,
எப்படி Paste பண்ணனுங்கிறதுலதான் இருக்கு.