Thursday, November 29, 2012

Tamil Historical Novels IV - தமிழ் வரலாற்று புதினங்கள் IV

These reviews may contain spoilers.

பத்தினிக்கோட்டம் : ஜெகசிற்பியன்
பல்லவர்களை பற்றியது. இதிலும் போரும் போர்த்தந்திரங்களும் குறைவு.


மகரயாழ் மங்கை : ஜெகசிற்பியன்
இரண்டாம் நரசிம்மவர்மன்னை (ராஜசிம்மன்) பற்றியது. பத்தினிக்கோட்டத்தின் தொடர்ச்சி. ஆனால் பத்தினிக்கோட்டத்தில் இறந்ததாக சொல்லப்பட்ட சாளுக்கிய தளபதி, சாளுக்கிய இளவரசனுக்கு உதவுகிறார்.


ஆலவாயழகன் : ஜெகசிற்பியன்
மாறவர்மன் சுந்தர பாண்டியனின் பிறப்பு இரகசியத்தைத் தவிர வேறொன்றும் சொல்லும்படியில்லை.


வேங்கையின் மைந்தன்  : அகிலன்


சோழ ராணி : ராஜகுரு
பாகம் I : பரவாயில்லை.
பாகம் II : பாதி பக்கங்கள் கதாநாயகன் பழைய அனுபவங்களை நினைத்து பார்ப்பதிலேயே போகிறது. நாயகன் பல நாடுகளை கைபற்றுவதை கடைசி நான்கு பக்கங்களில் சொல்லியிருக்கிறார்.



ரவிகுலதிலகன் : கல்கி ராஜேந்திரன்
இதில் காதலும் சரி, வீரமும் சரி அந்த அளவுக்கு இல்லை. ஒரே ஒரு கோட்டையை பிடிப்பது மட்டும்தான் - அதுவும் போரினாலும், தந்திரத்தினாலும் அல்ல, மிரட்டலால் மட்டுமே.


கரிகால் வளவன் :
கல்லூரியில் படிக்கும் ஒரு பாட புத்தகமா இருக்குமோ?



பல்லவன் தந்த அரியணை : கௌதம நீலாம்பரன்
நரசிம்மவர்ம பல்லவர், ஈழ இளவரசன் மானவர்மனை ஈழ அரியணையில் எப்படி அமர்த்துகிறார் என்பதை பற்றியது. கல்கியின் சிவகாமியின் சபதத்தின் தொடர்ச்சியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
ஒரு குடும்ப நாவல் மாதிரி இருக்கு.



Wednesday, November 28, 2012

Tamil Historical Novels III - தமிழ் வரலாற்று புதினங்கள் III

These reviews may contain spoilers.


உடையார் : பாலகுமாரன்
ஆறு பகுதிகள். தஞ்சை பெரிய கோவிலையும் அதை சிறப்பாக கட்டி முடித்த இராஜராஜ சோழனையும் பற்றியது. அவ்வளவு பெரிய கோவிலை எப்படி கட்டியிருப்பார்கள்? கட்டும் போது என்னென்ன இடற்பாடுகள் ஏற்பட்டிருக்கும்? அந்த பிரச்சினைகளை எப்படி சமாளித்திருப்பார்கள்? கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களும், கோவில் கட்ட, சிலை செதுக்க ஆட்களும் எப்படி கிடைத்திருப்பார்கள்? என்பதை பற்றியெல்லாம் தெளிவாக எழுதியுள்ளார்.

முதல் பாகத்தின் முடிவில் இராஜராஜ சோழனின் வாந்தியிலிருந்து ஒரு கல்லை எடுப்பார்கள். ஆனால் அதற்கு பின் அது பற்றி எதுவும் வராது. இந்தமாதிரி சில விஷயங்கள் விட்டுபோயிருக்கும். (சில வருடங்களுக்கு முன் படித்ததால் சரியாக ஞாபகமில்லை) மற்றபடி, இதுவும் எனக்கு பிடித்த நாவல்களில் ஒன்று.

இந்த நாவலை படித்த பிறகு பெரிய கோவிலை தரிசித்தே ஆகவேண்டும் என்ற என் எண்ணம் இன்னும் நிறைவேறவில்லை. இப்போதெல்லாம் எந்த கோவிலுக்கு போனாலும் அங்குள்ள தூண்களின் மீதும், செதுக்கப்பட்டுள்ள வடிவங்களின் மீதும் ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது.



கடிகை : பாலகுமாரன்
கேரள அந்தணர்கள்  எப்படி வீரபாண்டியனுக்கு சோழத்தை தாக்க உதவினார்கள், ஆதித்த கரிகாலனை கொன்றார்கள் என்பதை பற்றியது.

Tamil Historical Novels II - தமிழ் வரலாற்று புதினங்கள் II

These reviews may contain spoilers.


கடல் புறா : சாண்டில்யன்

கடாரத்தில் தமிழர்ளுக்கு பிரச்சினை என்றதும், கடற்படையமைத்து கடாரத்தை வெற்றிகொள்வார். ஈழத்தில் பிரச்சினை வரும்போதெல்லாம் அந்த சோழ அரசு மாதிரி ஒரு அரசு இல்லையேன்னு தோணும்.

யவன ராணி : சாண்டில்யன்



ராஜமுத்திரை : சாண்டில்யன்

ஜல மோகினி : சாண்டில்யன்

சேரன் செல்வி : சாண்டில்யன்


விஜயமகாதேவி : சாண்டில்யன்
சாண்டில்யனின் 51வது சரித்திர நாவல். இது சிங்கள மன்னனை பற்றியது. நம்மவர்கள் தான் யாரை வேண்டுமானாலும் புகழ்வார்களே! காம நெடி!
பாகம் I : சிங்கள இளவரசன் கலிங்க இளவரசியை திருமணம் செய்து, அவன் குலசொத்தான மகாரத்தினத்தோடு இலங்கைக்கு கப்பலில் புறபடுகிறான். 
பாகம் II : மகாரத்தினத்தை இலங்கைக்கு கொண்டுபோகும் கடற்பயணத்தில் கடற்கொள்ளையன் சு-சின்னிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை மிக மிக நீளமாக சொல்லியிருக்கிறார். 
பாகம் III : படையை திரட்டி சோழ படைத்தலைவனிடமிருந்து ஒரு கோட்டையை கைபற்றுவது, இரண்டு சிங்கள துரோகிகளை ஒடுக்குவதோடு முடிகிறது.

குலோத்துங்க சோழனை அறிமுகபடுத்தியது, மேற்கே போர்த்தொடுக்க மஹாவலி கங்கையும் சொல்கிறாள் என்று விஜயன் எண்ணுவது, அதிராஜேந்திரன் சுந்தரியிடம் கொடுத்த ஓலை இப்படி சில கேள்விகளை தவிர இந்த நாவல் ஓகே(OK) ரகம்தான்.

சித்தரஞ்சனி : சாண்டில்யன்


ராஜ பேரிகை : சாண்டில்யன்

பல்லவ பீடம் : சாண்டில்யன்

படித்ததில் பிடித்த வரிகள் (Quotes) - தமிழ்


"உடலில் அடியுண்ட வேங்கையும் உள்ளத்தில் அடியுண்ட மங்கையும் ஒன்று... இருவரையும் நெருங்குவது ஆபத்து"
- சாண்டில்யன், விஜயமகாதேவி #3


"ஏற்கனவே ராட்சசர்கள் இருந்த தீவுதான் இந்த இலங்கை"
- சாண்டில்யன், விஜயமகாதேவி #3
*** இன்னும் கூட அங்கு ராட்சசர்கள் தான் இருக்கிறார்கள் ***


“இருப்பவளைப் பிரிவது இறந்தவளைப் பிரிவதைவிட ஆயிரம் மடங்கு அதிக வேதனை”
- சாண்டில்யன், ஜல தீபம் #2


"அனாவசிய நம்பிக்கையைவிட அனாவசிய அவநம்பிக்கை ஆபத்தானது."
- உதயணன், பாண்டிய முரசு


"ரசிகத் தன்மையற்ற மூர்க்கர்கள் நிறைந்த உலகில் கலையை வளர்ப்பது கஷ்டம்தான். காதலையும்தான்."
- அனுஷா வெங்கடேஷ், காஞ்சி தாரகை.


"காதலித்த ஒரு பெண்ணைக் கைவிடுவது அநாகரிகம் என்று அவள் எண்ணினாள்."
- அனுஷா வெங்கடேஷ், காஞ்சி தாரகை.
*** காதலித்த ஒரு ஆணைக் கைவிடுவதும் அநாகரிகம்தான் ***


Tuesday, November 27, 2012

Devan's Work - தேவனின் நாவல்கள்


துப்பறியும் சாம்பு


சி.ஐ.டி சந்துரு
இரண்டு பாகம். ஒரு கார்ட்டூன் (Donald Duckனு நினைக்கிறேன்) எபிசொடுல ஒரு வாத்து வைத்திருக்கும் பையில் என்ன இருக்கிறதென்று மற்ற வாத்துக்கள் பார்க்க முயற்சிக்கும். ஆனா கிளைமாக்ஸ்ல தான் அதுல THE ENDனு கார்டு இருக்கிறது தெரியும். அது போல இந்த கதையும் ஒரு பையை சுற்றியே நடக்கிறது. நீண்ட நெடுந்தொடரை பார்த்த அனுபவத்தை தருகிறது.(சங்கர்னு ஒரு கதாபாத்திரம். அவரை நான்கு முறை கடத்துகிறார்கள்) முதல் பாகம் முடிந்ததும் எப்படா முடியுமுன்னு தோன்றியது.


கோமதியின் காதலன்
நகைசுவையான ஆள்மாறாட்ட கதை. அதுவும் (Enid Blyton-ன் The Adventure Series-ல் வரும் கிகி(Kiki) கிளி மாதிரியே) சம்பந்தமில்லாமல் எதையாவது சொல்லும் அந்த குட்டிபையன் பாலு கதாபாத்திரம் நன்றாக உள்ளது. ஏகப்பட்ட விசயங்கள் "உள்ளதை அள்ளித்தா" படத்தோடு ஒன்றிப்போகிறது.


ஜஸ்டிஸ் ஜெகநாதன்
கோர்ட்டில் ஒரு கொலை கேஸ் எப்படி விசாரிக்கப்படுகிறதுன்னு இந்த கதை மூலமாக சொல்லியிருக்கிறார்.


ராஜத்தின் மனோரதம்
"வீட்டை கட்டிப்பார்! கல்யாணம் செய்துப்பார்!" -ன்னு ஒரு பழமொழி. ஒரு வீடு கட்டுவதென்பது எவ்வளவு கடினமான வேலை என்பதை சொல்லியுள்ளார். ஒரு வீடு கட்டும்போது பலர் தங்கள் அனுபவங்களையும், எண்ணங்களையும் சொல்லி குழப்புவது, கட்டி முடிப்பதற்குள்ளாக படும் அவஸ்தைகள் பற்றி ஒரு கதையாக எழுதியுள்ளார்.

"உடையார்" நாவல் படித்து முடித்ததும் எப்படி கோவில்களின் மேல் ஒரு மரியாதை வந்ததோ அதேபோல் இந்த நாவலை படிக்கும் போதே எங்கள் வீட்டின் மேலும் ஒரு மரியாதை வந்தது. எங்கள் வீட்டை கட்ட, அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாருன்னு இப்ப நினைத்துப் பார்க்கிறேன்.

Tamil Historical Novels I - தமிழ் வரலாற்று புதினங்கள் I



சில நாவல்களை வாங்கியிருந்தாலும், பல நாவல்களை http://thamizhthenee.blogspot.com,  http://enewstamil.blogspot.in இன்னும் சில தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துதான் படித்தேன். நாவல் ஆசிரியர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும், வலைதள உரிமையாளர்களுக்கும், up load செய்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

முதலில் கல்கியின் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் படித்தது தவறோ என்னவோ? எந்த நாவல் படித்தாலும் இந்த இரண்டு நாவல்களோடு ஒப்பிடுவதை தவிர்க்க முடியவில்லை. மற்ற நாவல்களை படிக்கும் போதுதான் இந்த இரண்டு நாவல்களின் சிறப்பு புரிகிறது. சில நாவல்களை வரலாற்று புதினங்கள்ன்னு சொல்லிட்டு, பழைய பெயரில் சில இடங்களை மட்டும் சொல்லியிருக்கிறார்கள். 

இதுவரை நான் படித்த வரலாற்று புதினங்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல்கள் - கல்கியின் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், சாண்டில்யனின் கடல் புறா, யவன ராணி. சாண்டில்யனின் நாவல்கள் கொஞ்சம் வெஸ்டேர்ன்(western) டைப்பா(type) இருக்கும். அதாவது காமம் கொஞ்சம் இருக்கும். ஆனால் கல்கியின் நாவல்களில் அது சுத்தமா இருக்காது.

நாவல்களில் வர்ணனை சிறப்பாகயிருந்தால் தான் அந்த கதையோடு நாம் பயணம் செய்வது போலிருக்கும். அதாவது, ஒரு கதாபாத்திரம் ஒரு வீதியில் பயணம் செய்வதாகவோ அல்லது மாளிகையினுள் செல்லும்போதோ, அவன் அந்த வீதியில் சென்றான், அந்த மாளிகையினுள் நுழைந்தான் என்பதைவிட முதலில் அந்த வீதி எப்படியிருந்தது, மரம் செடி இருந்ததா? அல்லது வேறு மனிதர்கள் அந்த வீதியாக சென்றுகொண்டிருந்தர்களா போன்றவை அந்த வீதியை நம் கண்முன் கொண்டு வரும். கல்கியும், சாண்டில்யனும் இதில் சிறந்தவர்கள். ஆனால் ஒரு சில நாவல்களில் இந்த மாதிரியான வர்ணனை குறைவு. அந்த மாதிரி நாவல்களை படிக்கும் போது எதோ அவசரத்தில் எழுதினார்களோ என்று தோன்றும்.

பல நாவல்களில் கதாநாயகனுக்கு துணையாக சகலகலா வல்லவனாக வேற்று நாட்டவன் இருக்கிறான்.

These reviews may contain spoilers.

படித்து பல வருடங்களாகிவிட்டதால் சில நாவல்களை பற்றி இப்போது எழுத முடியவில்லை.



பொன்னியின் செல்வன் : கல்கி

சிவகாமியின் சபதம் : கல்கி

பார்த்திபன் கனவு : கல்கி