Showing posts with label Sivananda Ashram. Show all posts
Showing posts with label Sivananda Ashram. Show all posts

Tuesday, April 23, 2013

சிவானந்த ஆசிரமம் (Sivananda Ashram) அனுபவம் பாகம் 6

அதன்பின், கரைக்கு வந்து மற்றவர்களுக்காக காத்திருந்தோம். ஒரு சிலர் வந்து, கரையில் ஆசனங்கள் செய்ய ஆரம்பித்தார்கள். நாங்கள் வந்த வண்டி ஓட்டுனர்கள்(இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள்) நேரமாவதாக சத்தம் போட்டும் ஆசரமத்தை சேர்ந்தவர்கள் கண்டுக்கொள்ளவில்லை.

சிறிது நேரம் கழித்து, சில வெளிநாட்டு பெண்கள் கரையில் உடை மாற்ற(அவர்களிடம் பொது இடத்தில் எப்படி உடை மாற்றுவதென்று கற்றுக்கொள்ளவேண்டும்), நானும், ஒரு சிலரும் வண்டிக்கு வந்து உடை மாற்றி கிளம்பினோம். வரும் வழியில், இராமேஸ்வரம் மேம்பாலத்தில் புகைப்படம் எடுக்க சிறிது நேரம் நிறுத்தினார்கள்.

காலையில் சாப்பிட்ட உணவகத்திற்கு பக்கத்திலிருந்த இன்னொரு உணவகத்தில் சாப்பிட்டோம். நான் சாப்பிட்டு முடித்ததும் வெளியே வந்து நாங்கள் வந்த வண்டி ஓட்டுனரிடம் பேசினேன். அவர்கள் travels தான், பல வருடங்களாக ஆசரமத்தின் சுற்றுலாவிற்கு(ஒவ்வொரு TTC batchக்கும் ஒரு trip மீனாட்சி அம்மன் கோவில், ஒரு trip இராமேஸ்வரம் கோவில்) வண்டி ஓட்டுவதாக சொன்னார். அவர்கள் முதலாளி பற்றியும் ரொம்ப பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தார்.

வண்டியில், சிலர் நடனம் ஆடினார்கள். என்னையும், ஏன் அமைதியாக/தனியாக இருக்கிறாய்? நீயும் வந்து ஆடு என்றார்கள். எனக்கு ஆட விருப்பமில்லை என்றேன். 10 மணிக்கோ 11 மணிக்கோ ஆசரமத்தை அடைந்தும், நான் சென்று தூங்கினேன்.

சனிக்கிழமை(Mar 16): காலையில் எழுந்து, என் உடைமைகளை எடுத்து வைத்துக்கொண்டேன். 10 மணிக்கு உணவு உண்டபின், நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு (ஒரு சிலர் நீயும் வந்து TTC பண்ணு என்றார்கள்),  சொல்லிவிட்டு, சமையல் செய்யும் கேரளத்தை சேர்ந்தவரிடம் இந்த 15 நாட்களும் உணவு நன்றாகயிருந்தது என்று அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன்.

பேருந்து நிலையம் வந்து எப்போதும் போல ஒரு மணி நேரம் காத்திருந்தேன். அப்போது, ஆசரமத்திருக்கு அடிக்கடி வருகை தந்து உடைகளை விற்பவரும் பேருந்து நிலையம் வந்தார். பேருந்தும் வந்தது. ஒரு வழியாக பெரியார் பேருந்து நிலையம் வந்து ஒரு சாப்பிட பழங்கள் வாங்கிக்கொண்டு KPN அலுவலகத்திற்கு வந்து பயணசீட்டின் தகவல்கள் அடங்கிய குறுந்தகவலை காட்ட காத்திருக்க சொன்னார்கள். மணி மதியம் 01:30 ஆனது. மறுபடியும் அவர்களிடம் கேட்டதற்கு பேருந்து நிலையம் செல்லுங்கள் என்றும், வண்டி எண்ணும் தந்தார்கள். இங்கயே அரை மணி நேரம் late. இவன் எப்படி இரவு 09:00 மணிக்கு பெங்களூருக்கு போவான் என்று நினைத்துக்கொண்டு வண்டி ஏறினேன். சுந்தரப்பாண்டியன் படத்தை போட்டார்கள். இப்படத்தில் வரும் பெண் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று. காதலிக்கும் போது திரைப்படத்தில் கூட வராத வசனங்களை பேசிவிட்டு, அடுத்த நாள் எங்க அம்மா சொன்னங்க, அப்பா அழுதாங்கன்னு சொல்லி GoodBye சொல்கிற நிஜ உலக பச்சோந்தி பெண்களுக்கு முற்றிலும் எதிரான கதாபாத்திரம்.

வரும் வழியில், ஒரு பெட்ரோல் நிலையத்திலிருந்த ஒரு உணவகத்தில் நிறுத்தினார்கள். Rs.30 கொடுத்து Horlicks குடித்தேன். சிறிது நேரம் "The First Rule" நாவல், சிறிது நேரம் பாட்டு என்று ஓசுரை கடந்ததும், நடத்துனரிடம் வண்டி Express iwayயில் போகுமா என்று விசாரித்தற்கு ஆமாம் என்றார். அதனால் E-Cityயில் இறங்கி BMTC bus பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். புதிய அனுபவங்களுடன் என் மதுரை முடிந்தது. மறுபடியும் வாய்ப்பு கிடைத்தால் சிவானந்த ஆசரம் செல்ல நினைத்துள்ளேன்.

Thursday, March 21, 2013

சிவானந்த ஆசிரமம் (Sivananda Ashram) அனுபவம் பாகம் 3


ஞாயிற்றுக்கிழமை(Mar 10) மகாசிவராத்திரி என்பதால் தொடர் பஜனை(காலை 06:00 மணியிலிருந்து மறுநாள் காலை வரைக்கும்) நடைபெறும் என்று சனிக்கிழமையே சொன்னார்கள். அதனால் ஞாயிற்றுக்கிழமை காலை "Silent Walk"க்கு போகாமல் நான் பஜனைக்கு போனேன். என்னோடு சேர்த்து 3 பேர். கிட்டத்தட்ட ஒன்றை மணிநேரம் அங்கு இருந்தேன். அதற்கு பின் கர்ம யோகா முடித்து மறுபடியும் ஒன்றை மணிநேரம் பஜனை செய்தேன்.

மாலையில் உணவுக்கு சென்றேன். எப்போதும் நான் தான் முதலில் செல்வேன். அவ்வளவு பசிக்கும். ஆனால் அன்றோ, ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், TTC(Teacher Training - Yoga) படிக்கும் ஒருவருக்கும் பிறந்தநாள். அதனால் மாலை உணவிற்கு முன், cake cut பண்ணி, அவர்களுக்கு பரிசு கொடுத்து, வாழ்த்துக்கள் படலம். குறைந்தபட்சம் பிறந்தநாள் கொண்டாடுபவர்களை சீக்கிரம் வர சொல்லியிருக்கலாம். அவர்கள் வரும்வரை பசியோடு,

"ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே"

சொல்லிக்கிட்டு உணவுக்காக காத்திருந்தோம். அதைவிட கொடுமை, பிறந்தநாள் கொண்டாடும் ஆசிரமத்தைச் சேர்ந்தவர் சமைத்த பாஸ்தவை(Pasta) மட்டுமே பரிமாறினார்கள். கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, Boutiqueவுக்கு சென்று சில snacks items வாங்கினேன். ஆசிரமத்தில் அவர்களே நடத்தும் பழச்சாறு, sandwiches விற்கும் கடை உள்ளது. அதற்கு செல்லலாம் என்றால், அன்று அதற்கு விடுமுறையாம்.

மாலையில் செய்யபோகும் மகாசிவராத்திரி பூஜை/பஜனையில், அப்பப்ப பிரசாதம்ன்னு சர்கரைபொங்கல், வெண்பொங்கல், புளிச்சாதம் எல்லாம் தருவார்கள் என்று அப்புறம் தான் தெரிந்தது.

அதன் பின், ஆசிரமத்திலுள்ள அம்மன் கோவிலில் பூஜை செய்து கேசரி கொடுத்தார்கள். இரவு 08:00 மணிக்கு காலையிலிருந்து மந்திரம் சொல்வது நிறுத்தப்பட்டு, பஜனையை ஆரம்பித்தார்கள். பூசாரி, சிறிய விநாயகர், சிவலிங்கம், நடராஜர் வெண்கல சிலைகளுக்கு அபிஷேகம் செய்ய தயார் செய்தார். நாங்களும், ஒவ்வொருத்தராக அபிஷேகம் செய்தோம். பல வெளிநாட்டினரும் அபிஷேகம்/பஜனையில் கலந்து கொண்டார்கள்.

என் பக்கத்து bedஐச் சேர்ந்த ஆஸ்திரேலியாகாரர் காதில் பூ கூட வைத்துகொண்டார். அப்படியே மணி விடியற்காலை 03:30 ஆனது. இருந்தவர்களில் முக்கால்வாசி பேர் தூங்க போய்விட்டார்கள். எனக்கும் கண்ணு கட்டியது. இருந்தாலும் அடுத்த அபிஷேகம், அதாவது கடைசி அபிஷேகம் 04:00 மணிக்கு என்பதால் தூங்காமலிருக்க முயற்சிசெய்தேன். ஆனாலும் 03:50க்கு நித்திரைதேவி ஆட்கொண்டாள். அங்கயே படுத்துவிட்டேன்.

04:30 மணிக்கு நானாக எழுந்தேனா அல்லது யாராவது எழுப்பினார்களா என்று தெரியாது. கடைசி அபிஷேகம் முடிந்து பூஜை செய்துகொண்டிருந்தார்கள். நானும் போய் ஆண்டவனை வணங்கிவிட்டு புளிசாத பிரசாதத்தை சாப்பிட்டு விட்டு, Temp Domeவுக்கு வந்து படுத்தேன். மகாசிவராத்திரி கொண்டாடியதால் மதியம் 02:00 மணி வரை விடுமுறை என்றார்கள்.

அப்புறம் ஒரு நாள், என் எதிர் bedஐ சேர்ந்த ஜெர்மன்காரர், "உன்னிடம் மின்னஞ்சல்(email) பார்க்க வழியிருந்தால், எனக்கு கொஞ்ச நேரம் கொடு, நான் அதற்கான பணம் கூட தருகிறேன்" என்றார். ஆசிரமத்தில் மின்னஞ்சல் பார்க்க வழியில்லை. வெளிநாட்டுகாரர்கள், உள்ளூர் sim வாங்குவதும் கஷ்டம்.(அதையும் மீறி ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் எந்த documentsயும் தராமல் sim வாங்கியுள்ளார்) நான் எப்போது ஒரு S/W Engg என்று சொன்னேனோ அப்பவே நீங்க கேட்டுயிருக்கலாம். பணம் எல்லாம் வேண்டாம். நான், என் Tabல் monthly pack activate பண்ணியுள்ளேன். நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று என் Tabஐ தந்தேன். அவ்வளவு தான், அவர் பயன்படுத்துவதை பார்த்து இன்னும் மூவர்(ஒருத்தர் இந்தியன்) கேட்டார்கள். தந்தேன்.

Tuesday, March 19, 2013

சிவானந்த ஆசிரமம் (Sivananda Ashram) அனுபவம் பாகம் 2

வெள்ளிக்கிழமை(Mar 01), காலை 08:00 மணிக்கு ஆசன வகுப்புக்கு சென்றால், அது அனுபவமுள்ளவர்கள் வகுப்பு மாதிரி இருந்தது. திரும்பி வந்துவிட்டேன். Beginnersக்குன்னு தனியா வகுப்பு இருக்காதோ என்னவோன்னு நினைத்து ஆசிரமத்தைவிட்டு கிளம்பிவிடலாமா என்று யோசித்தேன். Yoga trainer (அவர் தமிழ்) ஒருவரை விசாரித்தேன். வெள்ளிக்கிழமை விடுமுறை என்றும், மதுரைக்கு செல்ல நினைப்பவர்கள்(ஆசிரமம் 20-25KM தொலைவில் உள்ளது) சென்று வரலாம் என்றும், வகுப்புக்கு செல்வது இன்று கட்டாயம் இல்லையென்றும், சிக்கிமிலிருந்து(Sikkim) ஒரு குழு(ஆசிரியருக்கு - Teacher Training படிப்பவர்கள்) வரயிருப்பதால் beginners வகுப்புகள் நாளையிலிருந்து தொடங்கும் என்றும், உணவு ஒரு நாளைக்கு இரு முறை தான் என்றும் சொன்னார்.

அப்புறம், கொஞ்ச நேரம் தூக்கம், கொஞ்ச நேரம் நாவலுன்னு போச்சு.  மாலை உணவிற்கு பின், என் எதிர் கட்டிலிலிருந்த ஜெர்மன்(German) நாட்டைச் சேர்ந்த ஒருவர்(யாருடைய பெயரையும் பயன்படுத்த விரும்பவில்லை) உனக்கு என்ன உடம்பு சரியில்லையா, நீ domeலியே இருக்கியேன்னு கேட்டார். நான் beginner, வகுப்புகள் நாளையிலிருந்து தான் ஆரம்பிக்கிறது என்று சொன்னேன். அவரும் beginner என்று சொன்னார்.

இரவு சிக்கிம் குழு வந்தது. நான் கொஞ்ச நேரம் படித்துவிட்டு, தூங்கினேன்.

சனிக்கிழமை(Mar 02) வகுப்புகள் ஆரம்பித்தது. காலை 08:00 ஆசன வகுப்பை ஜப்பானைச்(Japan) சேர்ந்த பெண் ஒருவரும், மாலை 04:00 ஆசன வகுப்பை தமிழ் நாட்டைச் சேர்ந்தவரும் (எனக்கு பல தகவல்களை கொடுத்தவர்) எடுத்தார்கள். கர்மயோகாவுக்கு ஏன் வரவில்லை(எங்கு போகணுமுன்னு தெரியாததால் நான் போகவில்லை) என்று கேட்டு, receptionனுக்கு பக்கத்தில் காலை 10:45க்கு வரச்சொன்னார்கள்.

ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை காலையில் அமைதியான நடைபயணம் (Silent Walk), சனிக்கிழமை மாலை satsangல் talent show, திங்கட்கிழமை மாலை satsangல் study hourன்னு அப்படியே, ஒரு வாரம் போனது. மதுரையில் பார்க்கவேண்டிய இடங்களை google பண்ணி, அடுத்த வெள்ளிக்கிழமைக்கு திட்டம் போட்டேன்.

வெள்ளிக்கிழமை(Mar 08) காலையிலேயே கிளம்பினேன். பேருந்திற்காக ஒரு மணி நேரம் காத்திருந்து, பெரியார் பேருந்து நிலையம் வந்து, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழி கேட்டு கோவிலை அடைந்தேன்.

மீனாட்சி அம்மன் கோவில்: காலணி பாதுகாப்பு இலவசம், bagக்கு 3 ரூபாய் வாங்கினார்கள். சிறப்பு நுழைவு டிக்கெட்(Rs.100 - அம்மன் சந்நிதானதிற்க்கும், சிவன் சந்நிதானதிற்க்கும் ஒரே டிக்கெட்) வாங்கி, ஊரில் கோவிலில் தரிசனம் செய்வதுபோல் பக்கத்திலிருந்து தரிசனம் செய்தேன். யாரும் கிளம்பென்று தள்ளவில்லை. 100 கால் மண்டபம், 1000 கால் மண்டபம்(கட்டணம் Rs.5) பார்த்தேன்.   மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகணுங்கிற நீண்ட நாள் ஆசை, நிறைவேறிய திருப்தியோடு மறுபடியும் பெரியார் பேருந்து நிலையத்திற்கு எதிரிலிருந்த இன்னொரு பேருந்து நிலையத்திற்கு சென்று, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்ல விசாரித்தேன்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்: கோவிலினுள் நுழையும் போது ஸ்கேன் செய்தார்கள். Swiss type knifeஆல் beep sound வந்தது. அந்த போலீஸ்காரர் அது என்ன என்று விசாரித்து, கொஞ்ச நேரம் என்னோட வேலை, ஊர், மதுரை விஜயம், சிவானந்த ஆசிரமம் பற்றியெல்லாம் பேசினார். அப்புறம் உன் bagஐ வேண்டுமானால் வைத்துவிட்டு நிம்மதியாக தரிசனம் செய்துவிட்டு வா என்றார். (என்னை சந்தேகபட்டார் என்று நினைத்துகொள்ளாதீர்கள், கொஞ்ச நேரம் பேசினதால friendlyஅ தான் சொன்னார்) சிறப்பு தரிசனம் டிக்கெட் விலை Rs.50. வேலுக்கு பாலபிஷேகம் செய்து, அந்த பாலை அடுத்த நொடியே பூசாரிகள் விற்றுக்கொண்டிருந்தார்கள். தரிசனம் முடிந்து வரும்போது போலீஸ்காரருக்கும் சேர்த்து முறுக்கு வாங்கி கொண்டு வந்தேன்.(சென்னையில் போலீஸ்காரர்கள் அதிகாலையில் ஏதாவது மந்திரிக்காக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் நிற்பதை பார்த்து அவர்கள் மேல் வந்த கரிசனம் தான் காரணம்) ரொம்ப சந்தோசபட்டார். அப்புறம், எனக்கும் ஆசிரமத்திலுள்ளவர்களுக்கும் சேர்த்து பஞ்சாமிர்தம் வாங்கிக்கொண்டு திரும்பினேன்.

மதியம் ஒரு மணிக்கெல்லாம் மறுபடியும் பேருந்து நிலையம் வந்துவிட்டேன். மதிய உணவு முடித்து விட்டு, என்னசெய்வது என்று தெரியவில்லை. ஆசிரமம் செல்லவும் மனமில்லை. அதனால் இரயில் நிலையம் பக்கத்தில் இருந்த திரையரங்கத்தில் "ஒன்பதுல குரு" படத்திற்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு, படம் 02:45க்கு தான் என்பதால் "ஆனந்த விகடன்" படித்துக்கொண்டு காத்திருந்தேன்.

ஒன்பதுல குரு: செம மொக்கை படம். அரைமணி நேரத்திற்குள் கிளம்பிவிடலாமா என்று தோன்றியது. கிளம்பினாலும் எங்கு செல்வது, வெயில் வேறு. சரி, எவ்வளவோ மொக்கை படம் பார்த்தாச்சு, இதையும் பார்போம்ன்னு பார்த்தேன். இரண்டாவது பாகம் வேற வருமாம். அடக் கடவுளே!

படம் முடிந்து, பெரியார் பேருந்து நிலையம் சென்று ஆசிரமம் வழியாக செல்லும் பேருந்திற்காக காத்திருக்கும் போது, ஸ்பெயினிலிருந்து(Spain) வந்த ஒரு பெண்ணும்(Beginners classல, ரொம்ப குண்டாகயிருந்தாலும் யோகா செய்யும்   அவரை கவனித்திருக்கிறேன்) பேருந்து பற்றி விசாரித்து கொண்டிருந்தார். 23Pயில் ஏறும்போது அந்த பெண்ணிடமும் சொன்னேன். அந்த பேருந்து ஒரு அக்காவின் பரிந்துரையால் ஆசிரமம் செல்லும் பாதைக்கு திரும்பும்முன் எங்களை இறக்கி விட்டு சென்றது.

ஆசிரமம் வந்தபோது மணி இரவு 08:00ன்னு நினைக்கிறேன்.

சிவானந்த ஆசிரமம் (Sivananda Ashram) அனுபவம் பாகம் 1

மதுரையிலுள்ள சிவானந்த ஆசிரமத்திற்கு, யோகா வகுப்பிற்காக(நான் சென்றதற்கான உண்மையான காரணம் இதுவல்ல) சென்றிருந்தேன். அந்த 16 நாட்களின் அனுபவங்களை பதிவுபண்ண முயற்சித்திருக்கிறேன்.

KSRTCயின்(TNSTC - வலைதளமா அது, 5 பைசாவுக்கு பிரயோஜனமில்லை. KSRTCல அவங்க முதலமைச்சர் புகைப்படம் இருக்கா?), non AC sleeper(Rs.542)ல் வியாழக்கிழமை(Feb, 27) இரவு 09:45க்கு மதுரைக்கு பயணமானேன். மறுநாள் காலை 07:30 மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இறங்கி, உள்ளூர் பேருந்துகள் நிற்கும் இடத்தை தேடும் போது கட்டண கழிப்பறை கண்ணில்பட்டது. நடத்துபவரிடம் சென்று எவ்வளவு என்றேன். அவர் பதில் சொல்லும்முன் அவரிடம் பேசிக்கொண்டிருந்தவர் 3 ரூபாய் என்றார். சண்டை போட மனமில்லாமல், முறைத்து விட்டு வெளியே வந்தேன்.

அங்கிருந்த ஒரு அலுவலகத்தில் இருந்தவரிடம் சிவானந்த ஆசிரமம் முகவரி சொல்லி கேட்டதற்கு, தெரியாதுன்னு சொல்லிவிட்டு, வேறொரு பயணியிடம் விசாரித்தார். அவர் நத்தம் போகிற பேருந்தில் போகசொன்னார். நத்தம் போகும் பேருந்துகள் நிற்கும் தடம்எண் சென்றபோது, நத்தம் பேருந்து ஒன்று கிளம்பியது. அதன் நடத்துனரிடம் பாவனவிளக்கு, சிவானந்த ஆசிரமம் சொன்னதற்கு, அவர் தனக்கு தெரியாதுன்னு கிளம்பினார். அதன்பின், அடுத்த நத்தம் பேருந்தின் நடத்துனரிடம் விசாரித்தத்தில் சத்திரப்பட்டியில் இறங்கி,  உள்ளூர் பேருந்து மூலம் பாவனவிளக்கு போகச்சொன்னார்(ஏனெனில் நத்தம் பேருந்து அந்த நிறுத்தத்தில் நிற்காது). சத்திரப்பட்டியில் இறங்கி, சிவானந்த ஆசிரமம் வலைத்தளத்தில் சொல்லியிருந்த 23P, 23Z பேருந்துகளுக்காக காத்திருந்தேன். ஒன்றரை மணி நேரம் கழித்து 23P வந்தது. ஆசிரமத்திற்கு எதிரிலேயே என்னை இறக்கிவிட்டு சென்றது. (பாவனவிளக்கு நிறுத்ததிலிருந்து ஆசிரமத்திற்கு சிறிது தூரம் நடந்து செல்லவேண்டும்)

ஆசிரமத்திற்குள் நுழைந்ததும், சாப்பிடச்சொன்னார்கள். இல்லை நான் குளிக்க வேண்டும் என்று சொன்னதற்கு, தற்காலிகமாக என் luggageஐ temporary domeல் வைக்க சொல்லி, அதன் பக்கத்திலிருந்த பொது கழிப்பறை/குளியலறையை பயன்படுத்திக்க சொன்னார்கள். Reception காலை 10:30க்கு திறப்பார்கள் என்றும், வேண்டுமென்றால் permanent domeக்கு மாற்றிக்கொள்ளலாம் என்றும் சொன்னார்கள்.

குளித்துவிட்டு, receptionக்கு சென்று Yoga vocation 15 நாட்களுக்கான courseக்கு பதிவு செய்யவேண்டும் என்றேன். பிடிக்காமலோ, வேறு காரணத்தினாலோ 15 நாட்களுக்குமுன் செல்ல வேண்டுமென்றால் கட்டிய பணம் திருப்பி தரமாட்டாது, அதனால் 3 நாட்களுக்கு பதிவு செய்துக்கொள்ளுங்கள். பிடித்திருந்தால் நீடித்துக்கொள்ளலாம் என்றார்கள். நான் வந்துள்ள மனநிலையில் என்ன நடந்தாலும் 15 நாட்களுக்குமுன் செல்லமாட்டேன் என்று நினைத்துக்கொண்டு 3 நாட்களுக்கு பதிவு செய்துக்கொண்டேன்.

Boutiqueக்காக(அவர்களின் கடை, எல்லா பொருட்களுக்கும் 2 ரூபாய் அதிகம்) ஒரு அட்டை கொடுத்தார்கள். Temp domeக்கு வெளியே உள்ள தகவல் பலகையில் ஆசிரமத்தின் அட்டவணை உள்ளதென்றும், அதன்படி வகுப்பிற்கு செல்லுங்கள் என்று சொல்லி, கொசு வலை, தலையணை உரை, 2 bedsheets, கொடுத்தார்கள். Permanent domeஐ விட Temp dome பரவாயில்லை என்று தோன்றியதால் Temp domeக்கு சென்றேன்.


அவர்கள் சொல்லாதது, இல்லை நான் கேட்க தவறியது:
1. Beginners course பற்றி
2. சாப்பாடு பற்றி
3. கர்ம யோகா பற்றி
4. காலை satsangல தான் அன்றைய தினத்திற்கான, வகுப்புகள் நடக்கும் இடம் பற்றி சொல்வார்கள்.

Beginners course 1ம் தேதி தான் தொடங்கும் என்பதால் படுத்து தூங்கினேன். மதியம் ஒரு மணிக்கோ, ஒன்றரை மணிக்கோ எழுந்தேன். அதிகமான பசி. யாரிடம், என்ன கேட்பதுன்னு தெரியவில்லை. அப்படியே மறுபடியும் படுத்தேன். கொஞ்ச நேரம் தூக்கம், கொஞ்ச நேரம் "The First Rule" நாவல் படிப்புன்னு மாலை 06:00 மணியானது. மணி அடித்தார்கள். காலையில் நான் வந்தபோது என்னிடம் பேசியவர், இது உணவருந்தும் நேரம், போய் சாப்பிடுங்கள் என்றார். உணவறைக்கு(Dinning Hall) சென்றேன். காரம், உப்பு, வெங்காயம் இல்லாத கேரளா style உணவு, மூலிகை தண்ணீர். எல்லாரும் limitஆக சாப்பிடுகிறமாதிரி இருந்ததால், கொஞ்சமாகத்தான் சாப்பிட்டேன்(2 நாட்கள் கழித்து தான் நான் எப்படி சாப்பிடுவேனோ அப்படி சாப்பிட ஆரம்பித்தேன்). உணவு நன்றாக இருந்தது. அதன்பின், Temp dome வந்து, Tabல் mail check பண்ணிட்டு, "Whose Body" கொஞ்ச நேரம் படித்துவிட்டு தூங்கினேன்.