Tuesday, August 20, 2013

Sidney Sheldon's Novels (Part 1)

The Doomsday Conspiracy
நான் படித்த முதல் Sidney Sheldonன் நாவல் மட்டுமல்ல, முதல் ஆங்கில நாவலும் கூட இதுதான். கல்லூரியில் படிக்கும் போது, சகமாணவன் ஒருவர் சொல்ல, இந்த நாவலை வாங்கிப் படித்தேன். அவருக்கு என் நன்றி. இந்த நாவலின் கதைக்கரு சுற்றுச்சுழல் பற்றியது என்று நினைக்கிறேன். படித்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் சரியாக ஞாபகமில்லை. இந்நாவல் இரண்டு பகுதி கொண்டது.

1. வேட்டையாடுதல் - ஒரு அதிகாரியிடம் ஒரு சுற்றுலா குழுவில் இடம் பெற்றிருந்தவர்களை கண்டு பிடிக்க சொல்வார்கள். அந்த குழுவில் இருந்தவர்கள், அச்சுற்றுலா மூலமாகதான் அறிமுகமானவர்கள். அதாவது அச்சுற்றுலாவிற்கு முன் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லாதவர்கள். அந்த அதிகாரி கிடைக்கும் ஒரு தகவலை வைத்து, அச்சுற்றுலா குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவரை கண்டுபிடித்து, அவர் மூலமாக மற்றொருவர், அந்த மற்றொருவர் மூலமாக இன்னொருவர் என்று அவர் கண்டுபிடிப்பது சுவாரசியமாக இருந்தது.

2. வேட்டையாடப்படுதல் - தான் கண்டுபிடித்த சுற்றுலா குழுவை சேர்ந்தவர்கள் என்ன ஆனார்கள்? என்று தெரிந்துக்கொள்ளும் அந்த அதிகாரி, தன்னையும் சிலர் துரத்துகிறார்கள் என்று புரிந்துக்கொள்கிறார். அச்சுற்றுலா குழுவை சேர்ந்தவர்கள் என்ன ஆனார்கள்?, ஏன் அந்த அதிகாரியை துரத்துகிறார்கள்? அவர் எப்படி தப்பித்தார்? என்பதெல்லாம் சுவாரசியமாக சொல்லப்பட்டுள்ளது.


The Naked Face
The Soulkeepers நாவல் படித்து முடித்தப்பின், எந்த புத்தகத்தை படிப்பது என்று ஒரு குழப்பம். தொடர்ந்து ஏதாவது ஒரு நாவல் படித்து கொண்டிருந்ததால் கொஞ்ச நாள் இடைவெளி விடலாமென்று நினைத்தேன். ஆனால் தினமும் பேருந்து பயணம், எதையாவதை படித்தேயாக வேண்டும் என்று என்னை தள்ளியதால், இந்த நாவலை ஆரம்பித்தேன்.

Sidney Sheldonன் முதல் நாவலாகயிருந்தாலும் சுவாரசியமாகவும், திரில்ங்காகவும் இருந்தது. ஒரு மனோதத்துவ மருத்தவரிடம் வரும் ஒரு நோயாளியும், அந்த மருத்துவரிடன் வேலை செய்யும் ஒரு பெண்ணும் கொலை செய்யப்பட, போலீஸ் மருத்துவரை சந்தேகப்பட, மருத்துவர், துப்பறியும் நிபுணரிடன் செல்கிறார். இதற்கு மேல் சொன்னால், அது spoiler ஆகிவிடும். நீங்கள் படிக்கும் போது அந்த சுவாரசியம் விட்டு போய்விடும்.

இந்நாவலின் இறுதி கட்டத்தை படிக்கும் போது, இரண்டு விசயங்கள் ஞாபகம் வந்தது. ஒன்று, முதல்வன் படத்தில் இறுதியில், அர்ஜுன் மணிவண்ணனிடம், "கடைசியில் என்னையும் அரசியல்வாதியாகிட்டாங்களே!" என்பார். இரண்டாவது John Grishamன் The Racketeer நாவலில் எனக்கு பிடித்த வரிகள், "I guess under the right circumstances, a man will do just about anything".

Monday, August 12, 2013

Dexter - TV Series (Part 3)

Dexterஆக நடிக்கும் Michael C.Hallக்கும், தங்கை Debraவாக நடிக்கும் Jennifer Carpenterக்கும் இத்தொடரில் நடிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு கல்யாணம் செய்துக்கொண்டு ஓரிரு வருடத்தில் பிரிந்திருக்கிறார்கள். அண்ணன் தங்கையாக நடித்தவர்களா? என்று நினைக்கும் போது தான் விஜய் tvல் உன்னை போல் ஒருவன் சிறப்பு நிகழ்ச்சியில் கமல் சூர்யாவிடம், ஒரு விதத்தில் நீ ஸ்ருதிக்கு சித்தப்பா முறை என்று சொன்ன ஓரிரு வாரங்களில் ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவிற்கு ஜோடி ஸ்ருதி என்று அறிவித்தது நினைவுக்கு வந்தது.

Season 06
Dexter, ஒருவரை குற்றவாளியாக சந்தேகப்பட, அவரோ நல்லவராகயிருக்க இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். போலீஸ் துறையினுள் நடக்கும், அரசியலினால் Batista எதிர்பார்க்கும் Lieutenant பதவி Dexterன் தங்கை Debraவுக்கு கிடைக்கிறது. Batistaவும் அதை சகஜமாக எடுத்துகொண்டு Debraவுக்கு கீழ் பணிபுரிகிறார். Debra தன்னுடைய ஐந்தாவது boy friend Detective Quinn கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று கேட்டதற்கு, Quinnஐ பிரிகிறாள்.

இந்த seasonல் அந்நியன் படத்தை போல, Book of Resolutionஐ பின் பற்றி ஒரு கல்லூரி ஆசிரியரும், அவருக்கு உறுதுணையாக அவர் மாணவனும் கொலைகளை செய்கிறார்கள். போலிசும் "The DoomsDay Killers"ன்னு பேரை வைத்து தேட, எப்பவும் போல போலீசிடம் கொலையாளிகளை பற்றிய ஒரு தடயத்தை மறைத்து Dexter கொலையாளிகளை கண்டுபிடிக்கிறான்.

இதற்கிடையில், Dexterன் புதிய நண்பர் கொலை செய்யப்படுவதால் Dexterன் கவனம் நண்பரின் கொலை மேல் திரும்புகிறது. அதற்குள், DDK இன்னும் சில கொலைகளை செய்கிறார்கள். Dexter தன் நண்பனை கொலை செய்தவனை கொன்று விட்டு, DDKயை கொலை செய்வதை Dexterக்கு மிகவும் வேண்டப்பட்டவர் பார்த்துவிடுவதோடு இந்த season முடிவடைகிறது.

Season 07
Dexter, DDKஐ கொல்வதை பார்த்தவருக்கு தன்னை பற்றி சொல்கிறான். அவர் இதற்கு மேல் நீ யாரையும் கொல்லக்கூடாது, நான் உன்னை 24 மணி நேரமும் கண்காணிப்பேன் என்று சொல்ல Dexterம் வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறான்.

இதுவரை Dexterஆல் கொல்லப்பட்டவர்களை யாரும் தேடுவதில்லை. ஆனால் இந்த, seasonன் முதல் episodeல் போலீஸ்காரரை கொல்லும் மாபியா கூட்டத்தை சேர்ந்த ஒருவனை Dexter கொல்ல, அவனது கூட்டாளி Dexterஐ கொல்ல துரத்துகிறான்.

DDKஐ கொல்லுமிடத்தில் Dexter தவறவிடும் ஒரு தடயத்தை வைத்து, Deputy Chief Matthewsஐ மிரட்டி Captain பதவிக்கு வரும் María LaGuerta அந்த கொலையாளியை அதாவது Dexterஐ தேடுகிறார்.

Dexter பயன்படுத்தும் netwrangle என்கிற தேடுபொறியை (search engine) நான் googleல் தேடும்போது தான் தெரிந்தது அது போல் ஒன்று இல்லை என்றும், இந்த தொடரில் பயன்படுத்தும் ஒன்று என்று.

Thursday, August 8, 2013

அழியா நினைவுகள்... 2

பிரெஞ்சு மொழி வகுப்பில் 15 - 20 நிமிடங்கள் இடைவெளி இருக்கும். நாங்கள் எதிரிலிருக்கின்ற ஒரு உணவகத்தில் காலை உணவருந்துவோம். நேற்று அந்த உணவகத்தில், என் சகதோழி ஒரு நாள் கூட விடுப்பில்லாமல் வகுப்பிற்கு வருகிறாயே நீ என்ன ஜென்மமோ என்றார். ஆனால் அவருக்கு தெரியாது நான் ஏன் தவறாமல் வகுப்பிற்கு வருகிறேன் என்று. வகுப்பிலிருக்கும் அந்த இரண்டு மணி நேரம் எனக்கு சுகத்தை தருகிறதோ இல்லையோ ஆனால் வீடு தரும் வெறுப்பை, அந்த ஒரு வித உணர்வை தருவதில்லை.

நாளையோடு இந்த வகுப்பும் முடிவடைகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த இரண்டு மணி நேரத்தை சமாளிக்க ஏதாவது வழி கண்டுபிடிக்க வேண்டும். அடுத்து A2 சேரலாம் என்றால், வரும் திங்கட்கிழமையே A2ஐ தொடங்குகிறார்கள். A1ன் தேர்வு முடிவு தெரியாமல் A2 சேர முடியாது.

கல்லூரியில் படிக்கும் போது, கடைசியில் பெஞ்சில் தான் உட்காருவேன். என் பக்கத்தில் உட்காரும் சக மாணவன் கெட்ட வார்த்தை ஒன்றை சாதாரணமாக பயன்படுத்துவார். ஆனால் அவர் மட்டுமில்லை, வேறு யாருமே என்னிடம் தவறாக பேசியதில்லை போன வருடம் வரை.

இத்தனை வருடத்திற்கும் சேர்த்து வைத்து Practical Man பேசிவிட்டார். ஆங்கில நாவல்களில் அந்த வார்த்தையை படிக்கும் போதெல்லாம் பற்றிக்கொண்டு எறியும். இப்போதெல்லாம் எந்த பிரச்னைக்காவது customer careக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அந்த வார்த்தை இல்லாமல் அனுப்புவதில்லை. என் தினசரி வாழ்வில் என்னை மீறி  பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

நல்லா,  நிம்மதியா தூங்கி இரண்டு வருடத்திற்கு மேல் ஆகிறது. சில நாட்கள், அலுவலகத்திலிருந்து பேருந்தில் வீட்டிற்கு வரும் பொழுது, நான் இறங்க வேண்டிய நிறுத்ததிற்கு, 3 அல்லது 4 நிறுத்தம் முன் தூக்கம் வரும். அந்த 3 அல்லது 4 நிமிட தூக்கம் ஒரு வித நிம்மதியை தரும். அந்த நிம்மதியான தூக்கத்தை யாராவது நிரந்தரமாக தந்தால் நான் சேர்த்து வைத்துள்ள பணம் முழுவதையும் தந்து விடுவேன்.

"தலைவழியும், வயிற்று வழியும் தனக்கு வந்தால் தான் தெரியும்" - இதில் தலைவழி, வயிற்று வழின்னு சொன்னது ஒரு உதாரணதிற்கு தான். ஏனெனில் தலைவழி, வயிற்று வழி மட்டுமில்லை ஒவ்வொரு வழியும் தனக்கு வந்தால் தான் தெரியும். வெளியில் இருந்து பார்க்கும் பொழுது சாதரணமாக தான் தெரியும். அனுபவிக்கும் போது தான் அதன் வலிமை புரியும்.
 

Thursday, August 1, 2013

Dexter - TV Series (Part 2)

Season 02
Dexter, கடலில் போட்டு வைத்த, கொலை செய்தவர்களின் உடல் பாகங்களை கொண்ட பிளாஸ்டிக் பைகள் போலீசுக்கு கிடைக்க, "Bay Harbor Butcher" என்று பெயரிட்டு கொலையாளியை தேட ஆரம்பிகிறது. தன் அண்ணனை கொலை செய்துவிட்டு, குழப்பத்திலிருக்கும் Dexterன் மறுப்பக்கத்தை ஏற்கனவே Dexterன் மேல் சந்தேகப்பட்ட ஒரு போலீஸ்காரர் தெரிந்துக்கொள்கிறார். போலீசிடமிருந்தும், தன்னை பற்றி தெரிந்துக்கொண்ட  போலீஸ்காரரிடமிருந்தும் Dexter எப்படி தப்பிக்கிறார் என்பது இந்த season.

Dexter தான் சேகரித்து வைத்த குற்றவாளிகளின் இரத்த துளிகளை இழக்கிறார்.

Season 03
Dexterக்கு ஒரு வக்கீலின் அறிமுகம் கிடைக்கிறது. அவரும் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிக்கும் போது தனக்கு ஏற்படும் கோபத்தையும், ஆதங்கத்தையும் சொல்ல Dexterம், அந்த வக்கீலும் அண்ணன் தம்பி மாதிரி ஒரு உறவு ஏற்படுகிறது. ஒரு சமயத்தில் Dexterன் மறுப்பக்கத்தை அந்த வக்கீல் தெரிந்துக்கொள்ள, இருவரும் சேர்ந்து கொலை செய்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் அந்த வக்கீல் சுயநலத்திற்க்காக கொலை செய்வதை தெரிந்துக்கொள்ளும் Dexter, அவரை எப்படி கொலை செய்கிறார் என்று இந்த seasonல் வருகிறது. தன் காதலி கற்பம் என்று தெரிந்துக்கொள்ளும் Dexter, அவரை  திருமணம் செய்துக்கொள்கிறார்.

Season 04
வேறொரு serial killerஆல் தன் தங்கை தாக்கப்பட, எப்பவும் போல போலீசுக்கு முன் கண்டு பிடிக்கிறார்.(Pretty Little Liars போல, இதிலும் போலீஸ் கொஞ்சம் டம்மி தான்) அந்த கொலையாளிக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளும் Dexter, அந்த கொலையாளியிடமிருந்து எப்படி குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு கொலையும் செய்வது என்று கற்றுக்கொள்ள அவனை கொலை செய்வதை தள்ளிப்போடுகிறான். 

அப்படி தள்ளிபோடுவது Dexterக்கு பிரச்சினையாக வர, ஒரு நல்ல நாளில் அவனையும் கொன்று விட்டு வீட்டுக்கு வரும் Dexterக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த அதிர்ச்சியோடு Season 04 முடிவடைகிறது. அந்த சஸ்பென்சை பொறுக்க முடியாமல் (பள்ளியில் படிக்கும் போது, மதிய உணவிற்கு வீட்டுக்கு வருவேன். அப்போது 0100க்கு ஏதோவொரு தொடர், ஏவிஎம் தயாரித்தது நினைக்கிறேன். வெள்ளிக்கிழமை தான் தெரியும் அந்த வாரம் அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை நடந்தது எல்லாமே கனவு என்று, அது போல இதிலும் அந்த அதிர்ச்சி கனவாக இருக்குமோ? என்று ஒரு சந்தேகம் வந்ததால்) Season 05 Episode 01ஐ பார்த்துவிட்டு 0200amக்கு தான் தூங்கினேன்.

Season 05
இன்னொரு விதமான கொலையாளியை போலீஸ் கண்டுபிடிக்கும் முன், அந்த கொலையாளியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உதவியால் அந்த கொலையாளியையும், அவன் கூட்டாளிகளையும் Dexter கொலை செய்கிறான். 

Dexter - TV Series (Part 1)

imdb link: http://www.imdb.com/title/tt0773262/ 
Rating: 9

என்னோடு பிரெஞ்சு மொழி பயிலும் நண்பர்கள் மூலம் அறிமுகமான இன்னொரு ஆங்கில தொடர். அவர்கள் serial killer கதையென்றதும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. நண்பர் ஒருவர் கொடுத்தார். சில நாட்களுக்கு முன் தான் ebayவில் 7 seasonகளின் விலை Rs.5000க்கும் மேல் என்று பார்த்ததும், உங்களால் எனக்கு Rs.5000 மிச்சம் என்றேன். சரி தொடருக்கு வருவோம்.

நான் பார்க்கும் ஆறாவது தொடர். இதற்கு முன் பார்த்த ஐந்து தொடரும் வேறுவேறு கதை களம் கொண்டவை. அது போலத்தான் இதுவும். இத்தொடரில் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் அண்ணன் தங்கை உறவு - "தங்கைக்கு ஏதாவதென்றால், கொலை கூட செய்ய தயங்காத அண்ணன், அண்ணனை விட்டு கொடுக்காத தங்கை".

த்ரில்லர், சஸ்பென்ஸ் தொடர் என்பதால் என்ன எழுதுவதென்று தெரியவில்லை. ஒரு வேலை நீங்கள் அத்தொடரை பார்க்கும் போது நான் அனுபவித்த அந்த உணர்வு கிடைக்காமல் போய்விடுமோ? என்ற எண்ணம்.

இதுவரை 4 season பார்த்துள்ளேன். Dexter சாதாரண வாழ்கை வாழ ஆசைபடுவது, சில குற்றவாளிகளை சட்டத்திலிருந்து  தப்பிக்க விட்டு கொலை செய்வது, தங்கை, காதலி, காதலியின் கொழந்தைகளின் மீதான ஈர்ப்பு, சில விசங்களை அணுகும் முறை என்று இத்தொடர் நன்றாகத்தான் உள்ளது. Debraக்கு(Dexterன் தங்கை) ஒவ்வொரு seasonனிலும் ஒவ்வொரு காதலன்.

Season 01
ஒரு கொலை சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஒரு குழந்தையை ஒரு போலீஸ்காரர் காப்பாற்றி, தன் குழந்தையாக தத்தெடுத்துக் கொள்கிறார். தன் அம்மாவின் கொலையை நேரில் பார்த்த அந்த குழந்தையோ, கொலையை ரசிக்க ஆரம்பித்து, யாரையாவது கொலை செய்ய துடிக்கிறான். அந்த மனநிலையை மாற்ற முடியாதென்பதால், அந்த போலீஸ்காரர் அதாவது அப்பா, தவறு செய்து சட்டத்திலிருந்து தப்பிக்கும் குற்றவாளிகளை ஆதாரங்கள் இல்லாமல் எப்படி  கொலை செய்து தப்பிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிறார். அவனும் பல பேரை கொலை செய்து அவர்கள் ரத்த துளியை தான் செய்யும் வேலைக்கான பரிசாக சேகரிக்கிறான். Miami போலீசில் அவன் தங்கையும்(போலீஸ்காரரின் பெண்), forensics பிரிவில் அவனும் வேலை செய்கிறார்கள்.

இந்நிலையில், மியாமியில் தொடர் கொலைகள் நடக்கிறது. ஒவ்வொரு கொலையிலும் Dexterக்கு(கதையின் நாயகன்) கிடைக்கும் துப்பு, Dexterவுடன் சம்பந்தப்பட்டு இருக்கிறது. அந்த கொலைகாரனுக்கு "Ice Truck Killer" என்று பெயரிட்டு மியாமி போலீஸ் ஒருபுறமும், Dexter மறுபுறமும் தேடுகிறார்கள். இடையிடையே Dexterன் வாழ்கையில் நடந்த விசயங்கள் flashbackஆக வருகிறது. கடைசியில் Dexter அந்த கொலைகாரனை பிடித்து, Dexterக்கும் அவனுக்கும் உள்ள உறவுவை பற்றி தெரிந்துக்கொள்கிறான்.

My Brother's Wedding

எழுதியவர்: Andaleeb Wajid. பெங்களுருவை சேர்ந்தவர்.

இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒரு குடும்பம். அவர்களுக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன். பெரியவள், காதலித்து திருமணம் செய்து கொண்டவள். அன்பான கணவன். பிள்ளை பெற்றால் அழகு போய்விடும் என்று பிள்ளை பெறுவதை தள்ளி போடுகிறாள். அவள், திருமணமானவள் என்பதால் வீட்டில் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். அவளும் அதிகாரம் செய்துக்கொண்டு அலைகிறாள். சில பெண்கள் அப்படிதான் திருமணமானதும் தனக்கு இரண்டு கொம்பு முளைத்து விட்டதாக நினைத்து அடாவடித்தனம் செய்கிறார்கள். பெரியவளுக்கும் சின்னவளுக்கும் ஏழாம் பொருத்தம். சிறுவயதிலிருந்தே பெரியவள், சின்னவளை மட்டம் தட்டுகிறாள்.

மகனிற்கு திருமணம் செய்ய பெண் தேடுகிறார்கள். சின்னவள் திருமணமாகாதவள் என்பதால் அவளை அண்ணனின் கல்யாண விசயத்தில் கலந்தாலோசிப்பதில்லை. அவளோட உணர்வுகளை பகிர்ந்துகொள்ள சரியான துணை இல்லை. அதனால் வெறுத்துப்போய் blog எழுத ஆரம்பிக்கிறாள். Blogல் தன் பெயரையும், தன்னை சேர்ந்தவர்களின் பெயரையும் குறிப்பிடாமல் ஆங்கில எழுத்துக்களை (Alphabets), அதாவது Q, R, S, T என்று பயன்படுத்துகிறாள்.


புது துணி எடுப்பது, நிச்சயதார்த்தம், மணமகனின் பழைய காதல், சின்னவள் எழுதும் bolgனால் வரும் பிரச்சனைகள் என்று திருமணம் முடியும் வரை நடக்கும் எதிர்பாராத சம்பவங்களை பற்றிய கதை. நன்றாக உள்ளது. என் அக்காவிற்கு இந்த புத்தகத்தை கொடுத்துள்ளேன். அவரின் feedbackஐ கேட்க வேண்டும்.

அழியா நினைவுகள்... 1

இரண்டு வருடமாக வாழ்கையில் நடந்த/நடந்து கொண்டிருக்கும் விரும்பத்தகாத, அருவருப்பான சம்பவங்களிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக வெளியே வந்துக் கொண்டிருக்கிறேன். நன்றாக உறங்கி இரண்டு வருடமாகிறது. நிம்மதியான அந்த பழைய தூக்கம் திரும்ப கிடைக்கும் என்று தோன்றவில்லை. நடந்த சம்பவங்களும், அதற்கான காரணங்களும் எனக்கும், என்னை ஆட்டுவிக்கும் கடவுளுக்கும் மட்டும் தான் தெரியும். என் தவறா? இல்லை என் விதியா? தெரியவில்லை. வாழ்கையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எனக்கு புரிய வைத்து, என் மீது எனக்கு இருந்த நம்பிக்கையை குறைத்த சம்பவங்கள் அவை. சில உறவினர்களிடமிருந்து, சில நண்பர்களிடமிருந்து என்னை விலக வைத்தவை.

வெறுத்துப்போய், வயிற்றெரிச்சலில் இருப்பவனை குடித்து விட்டு கிண்டல் செய்தவரையும், "I 'm a practical man" என்பதற்கு அர்த்தம் தெரியாமல், அதற்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் நடந்துக்கொண்டவரையும் என் வாழ்நாளில் மறுபடியும் பார்க்கவே கூடாதென்றிருக்கிறேன்.

திருக்குறளில் 1330 குறள்கள் இருந்தாலும், பள்ளிப்பாடத்தில் இருக்கும் முக்கியமான ஒரு குரல்,
"தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு"
இதையெல்லாம் எதற்காக படிக்கிறோம் என்று தெரியாமல் படித்துவிட்டு "I m educated" என்று சொல்லிக்கொண்டு அலைபவர், ஏதாவது ஒரு இக்கட்டான சமயத்தில் செய்வதறியாமல் செய்த தவறுக்கு பெற்றோர்களை குற்றம் சொல்லி, அவர்கள் வளர்ப்பு சரியில்லை என்று சொல்லும் மூடர்கள்... என்ன சொல்வது?

தோற்றத்தையும், அசிங்கப்பட்டதையும் பகிர்ந்து கொள்பவனல்ல நான். அப்படியே பகிர்ந்தாலும் என்னை பார்த்து பரிதாப்படலாம் இல்லை என்னை கேவலமானவனாக நினைக்கலாம். அந்த இரண்டையுமே நான் விரும்பவில்லை.

சாதரணமாகவே என்னை பாதிக்கும் விசயங்களை எளிதில் மறக்கமாட்டேன். அதனால் நடந்தவற்றை மறக்க புத்தகங்கள், ஆசிரமம் என்று பலவற்றை நாடினேன். பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்யும் போது படிக்க tabletஐ வாங்கினேன். இந்த இரண்டு வருடங்களில் நான் படித்த புத்தகங்களின் எண்ணிக்கை 100க்கும் மேல். இச்சம்பவங்களாலும், வகுப்பெடுத்த ஆசிரியையை பிடிக்காததாலும் தடைப்பட்ட பிரெஞ்சு மொழி வகுப்பில் மறுபடியும் இணைந்தேன்.

எப்போதோ ஆரம்பித்த இந்த blogஐ update செய்ய ஆரம்பித்தேன். பிரெஞ்சு மொழி வகுப்பில் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். காலையில் அவர்களுடன் உணவருந்தும் நேரம், கல்லூரியில் படிக்கும் போது கூட செய்யாத group study, ஹிந்தியே தெரியாமல் ஹிந்தி படம் என்று என்னை கொஞ்சம் புதிதாக உணர்ந்தேன். ஒரு நாள் கூட வகுப்பை புறக்கணித்தில்லை. இன்னும் ஒரு வாரம் தான். வகுப்பு முடிய போகிறது. நான் அடுத்த level இணைந்தாலும் இவர்களுடன் பலவற்றை இழக்கப்போகிறேன்.