புதன்கிழமை(Mar 13) ராமேஸ்வரம் சுற்றுலா பற்றி சொன்னார்கள். TTC, Vocation programme பண்றவங்க பெயர் கொடுக்கசொனங்க. எனக்கு கொஞ்சம் குழப்பமாயிருந்தது. ஏனெனில், இதுவரை ராமேஸ்வரம் சென்றதில்லை, நான் வெள்ளிகிழமை இரவு பெங்களுருவுக்கு திரும்ப பேருந்து பதிவு செய்திருந்ததால் வெள்ளிகிழமை அழகர் கோவிலுக்கு சென்று வரயிருந்தேன்.
வியாழக்கிழமை(Mar 14): பதிவு செய்திருந்த டிக்கெட்டை cancel செய்துவிட்டு, பகல் 01:30 மணி போல அழகர் கோவிலுக்கு சென்றேன். அங்கிருந்து பக்கம்தான்.
அழகர் கோவில்: ஆசிரமத்திலிருந்து அழகர் கோவிலுக்கு பேருந்து இல்லாததால்(எனக்கு தெரியாததால்) சத்திரப்பட்டிக்கு சென்று, அங்கிருந்து share autoவில் 02:00 மணிக்கெல்லாம் கோவிலுக்கு வந்துவிட்டேன். நுழைவாசலின், பக்கத்தில் முருகன் கோவிலுக்கு செல்லும் வழின்னு இருந்ததால, நெய் தீபம் விற்க்கும் அக்காவிடம் அது பற்றி கேட்டேன். பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலுக்கு நடந்து செல்லும் வழியென்றும், அழகர் கோவிலுக்கு வெளியே அரசு சிற்றூந்துகள் முருகன் கோவிலுக்கு செல்லுமென்றும் சொன்னார். அழகர் கோவில், மூலஸ்தானம் மாலை 04:30க்கு தான் திறப்பார்கள் என்பதால் முருகன் கோவிலுக்கு சென்றேன். அதை பற்றி கடைசியில்.
அழகர் கோவிலில், சிறப்பு நுழைவு டிக்கெட் Rs.10. விநாயகருக்கு நாமம் போட்டுயிருந்தார்கள். எந்த சிவன் கோவிலிலும் பெருமாளுக்கு, திருனீர் இட்டு பார்த்ததில்லை. தரிசனம் முடித்துவிட்டு, அந்த அக்காவுக்கு நன்றி சொல்லிவிட்டு, வெளியே வந்து ரொம்ப நேரம் பேருந்துவுக்காக காத்திருந்தேன்.
ஒரு ஷேர் ஆட்டோ வந்தது. என்னை முன்னாடி அவர் பக்கத்தில் உட்கார சொன்னார். சத்திரப்படிக்கு செல்லும் வழியில் போலீஸ்கார்கள் சோதனை போட்டுகொண்டிருந்தார்கள். முன்னாடி உட்கார்ந்திருந்தது தவறு என்று அந்த ஷேர் ஆட்டோவை மடக்க, ஓட்டுனருக்கு பணம் தந்து விட்டு, அடுத்த நிறுத்தத்தில் பேருந்து பிடித்து 06:15 ஆசிரமத்தை அடைந்து சாப்பிட்டு விட்டு, satsangக்கு போனேன். satsang முடிந்ததும் ராமேஸ்வரம் சுற்றுலா போகிறவர்களை விடியற்காலை 05:00 மணிக்கெல்லாம் தயாராகயிருக்க சொன்னார்கள்.
பக்கத்துக்கு bed ஆஸ்திரேலியாகாரருக்கு BSNL GPRS activate பண்ண உதவிசெய்து விட்டு படுத்தேன்.
பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்: இங்கு, சிறப்பு நுழைவு கட்டணம் Rs.5. தரிசிக்க வந்த மக்களை விட குரங்குகள் மூன்று மடங்கு அதிகமாகயிருந்தன. நல்லபடியாக தரிசனம் செய்துவிட்டு, பிரசாதம் வாங்கி சாப்பிட்டு விட்டு(இங்கு பஞ்சாமிர்தம் விற்பதில்லை) அழகர் கோவிலுக்கு திரும்பினேன்.
சிற்றூந்தில் முருகன் கோவிலுக்கு போயிட்டு வர Rs.20 (10+10) ஆனது.