Showing posts with label Marupadiyum Ganesh. Show all posts
Showing posts with label Marupadiyum Ganesh. Show all posts

Saturday, February 23, 2013

சுஜாதா (பகுதி 2) - Sujatha (Part 2)

சிவந்த கைகள்
MBA போலி சான்றிதழினால் வேலைக்கு சேர்ந்து, அங்கு நடக்கும் எதிர்பாராத சம்பவங்களினால் அந்த கம்பெனியின் டைரக்டராக முயற்சிக்கிறான். இந்த கதை எனக்கு வட்டாரம் திரைப்படத்தை ஞாபகபடுத்தியது.

நிலா நிழல்
காலேஜ் படிக்கும்போது கூட படித்த ஒருவன், நான் ஒரு சனி, ஞாயிறுக்கு ஊருக்கு போயிட்டு வரும்போது முடிந்தால் இந்த நாவலை வாங்கிவர சொல்லியிருந்தான். நானும் சென்னை இரயில் நிலையம் ஹிக்கிம் போதம்ஸில் கேட்டேன், ஆனால் கிடைக்கவில்லை. ஒன்பது இல்லை பத்து வருடம் கழித்து இப்போதுதான் இந்த நாவலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நாவல் படிக்கும் முன்புதான் "கொலையுதிர் காலம்", "கொலை அரங்கம்" படித்திருந்தேன். அதனால் "நிலா நிழல்" பெயரிலிருந்து கொஞ்சம் சஸ்பென்ஸ், த்ரில்லிங்க இருக்குமுன்னு எதிர்பார்த்தேன். ஆனால் இது ஒரு குடும்ப நாவல். கண்டிப்பான அப்பா, படிப்பை விட கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரும் மகன் பற்றியது.

வசந்த்! வசந்த்!
சஸ்பென்ஸ் இருக்கு. ஆனால் த்ரில்லிங்காயில்லை.

மறுபடியும் கணேஷ்
மனைவியை சந்தேகப்பட்டு கொலைசெய்யும் கணவனை 'கணேஷ்-வசந்த்' பிடிக்கும் கதை.

நில்லுங்கள் ராஜாவே 
'கணேஷ்-வசந்த்' நாவல். காலேஜ் படிக்கும்போது, இதே கதைக்கருவில் ராஜேஷ் குமாரின் ஒரு நாவல் படித்ததாக ஞாபகம். அந்த நாவலில் தியானத்தின்(சரியாக ஞாபகமில்லை) மூலமாக கதாநாயகனின் மனதில் அவன் மனைவியை பற்றி தவறான எண்ணத்தை விதைத்து, அதனால் அவன் அவளை கொலை செய்ய முயல்வான்.

விபரீத கோட்பாடு 
'கணேஷ்-வசந்த்' நாவல். குறிப்பிட்ட தேதியில் பிறந்த பெண்ணை மணம் செய்துகொண்டால் நாட்டை ஆளக்கூடிய பையன் பிறப்பான்னு ஒருத்தனும் அவன் சித்தப்பாவும் செய்யும் தில்லுமுல்லுகளை 'கணேஷ்-வசந்த்' கண்டு பிடிக்கும் கதை.

24 ரூபாய் தீவு
வில்லன் யாருன்னு ஈசியா கண்டுபிடிக்கமுடியுது. அந்த சஸ்பென்ஸ் உடைஞ்சாலும், கணேஷ்-வசந்த் என்ட்ரி ஆனதும் கொஞ்சம் த்ரில்லிங்க இருந்தது. ஆனால் கணேஷ்-வசந்த் வருவது விசுவை(கதாநாயகன்) பெயில் எடுக்கமட்டும்தான்.