Wednesday, September 4, 2013

அழியா நினைவுகள்... 3

6.2 படத்தில் வரும் ஒரு நகைசுவை காட்சி, "வடிவேலுவிடம், சிங்கமுத்து சில அடையாளங்களை சொல்லி அந்த ஆள் தெரியுமா? என்பார். வடிவேலு தெரியாதென்று சொல்ல, சிங்கமுத்துவும் அவர் அடியாட்களும் வடிவேலுவை அடிப்பார்கள்". இது என் வாழ்வில் நடந்த ஒன்று, ஆனால் வேறு விதமாக.

Updated on Mar 12: நீண்ட இடைவெளிக்கு பின், இன்றுதான் blogஐ திறந்தேன். இந்த நான்கு மாதங்களிலும் ஏகப்பட்ட நிகழ்வுகள். கொஞ்சம் நினைத்து பார்த்தால், ஒரு விதத்தில் என்னை சந்தோசபடுத்தியவைகள்.

இரண்டரை - மூன்று வருடங்களில் நடந்தவைகளில் சிலவற்றை உறவினர்கள், சிலருடன் பகிர்ந்துக்கொள்ளும்படியான சூழ்நிலை. என்னை எந்தளவுக்கு புரிந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பமாக இருந்தது. என் குடும்பத்தை விட என் நண்பர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தந்திருக்கிறேன். ஆனால் USலிருந்து தோற்று திரும்பியபோதும், இன்றைய மிக மோசமான நிலையிலும் என்னை புரிந்துக்கொண்டு பக்கபலமாக இருக்கிறவர்கள் என் குடும்பமும் உறவினர்களும் தான்.

இப்போதெல்லாம் கூட 1100, 1200 மணிக்கு தூங்கி, 0330, 0400 மணிக்கு விழிப்பு வந்து, என்ன செய்வது என்று தெரியாமல், பலவற்றை நினைத்து பார்க்க விரும்பாமல் புரண்டு புரண்டு படுத்து, எப்போது தூங்கினேன் என்று தெரியாமல் 0830 மணிக்கு எழுந்து அலுவலகம் சென்றுக் கொண்டிருக்கிறேன்.

இன்றும் அப்படிதான். 0330 மணிக்கு எனது, என் நண்பர்களின் முகபக்கங்களை பார்த்துவிட்டு, (இரண்டு வருடங்களுக்கு முன் இருந்த மனநிலையில் என் முகபக்கத்தை அழித்து விட்டேன். சில மாதங்களுக்கு முன் தான் மறுபடியும் முகபக்கத்தை திறந்தேன். இப்போது அதில் பிரெஞ்சு வகுப்பு தோழர்கள் ஒரு சிலரும், முகப்பக்கம் வழியாக ஒரு சிலரும் நண்பர்களாக இருக்கிறார்கள்) மறுபடியும் படுக்க போன போது blog பற்றி ஞாபகம் வர, வந்தேன்.

புலம்பலுக்கு காலம் தான் முற்றுப்புள்ளி வைக்கணும், வைக்கும் என்று நம்புகிறேன். சரி. இந்த நான்கு மாதங்களில் நடந்த நல்ல விஷயங்கள், இந்த வருடத்தின் தொடக்கத்தில்(அதாவது நான் 30தை கடந்த பின்) பதவி உயர்வு தந்தார்கள். ஒரு மாதத்திற்கு முன், இப்போது செய்துக்கொண்டிருக்கும் projectன் TL ஆக்கினார்கள். போன வாரம் Spot Award தந்தார்கள். சொந்த வாழ்கையில் தோற்றாலும், பணியிலாவது சொல்லிக்கொள்ளும்படி இருக்கிறேன்.

No comments: