அதன்பின், கரைக்கு வந்து மற்றவர்களுக்காக காத்திருந்தோம். ஒரு சிலர் வந்து, கரையில் ஆசனங்கள் செய்ய ஆரம்பித்தார்கள். நாங்கள் வந்த வண்டி ஓட்டுனர்கள்(இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள்) நேரமாவதாக சத்தம் போட்டும் ஆசரமத்தை சேர்ந்தவர்கள் கண்டுக்கொள்ளவில்லை.
சிறிது நேரம் கழித்து, சில வெளிநாட்டு பெண்கள் கரையில் உடை மாற்ற(அவர்களிடம் பொது இடத்தில் எப்படி உடை மாற்றுவதென்று கற்றுக்கொள்ளவேண்டும்), நானும், ஒரு சிலரும் வண்டிக்கு வந்து உடை மாற்றி கிளம்பினோம். வரும் வழியில், இராமேஸ்வரம் மேம்பாலத்தில் புகைப்படம் எடுக்க சிறிது நேரம் நிறுத்தினார்கள்.
காலையில் சாப்பிட்ட உணவகத்திற்கு பக்கத்திலிருந்த இன்னொரு உணவகத்தில் சாப்பிட்டோம். நான் சாப்பிட்டு முடித்ததும் வெளியே வந்து நாங்கள் வந்த வண்டி ஓட்டுனரிடம் பேசினேன். அவர்கள் travels தான், பல வருடங்களாக ஆசரமத்தின் சுற்றுலாவிற்கு(ஒவ்வொரு TTC batchக்கும் ஒரு trip மீனாட்சி அம்மன் கோவில், ஒரு trip இராமேஸ்வரம் கோவில்) வண்டி ஓட்டுவதாக சொன்னார். அவர்கள் முதலாளி பற்றியும் ரொம்ப பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தார்.
வண்டியில், சிலர் நடனம் ஆடினார்கள். என்னையும், ஏன் அமைதியாக/தனியாக இருக்கிறாய்? நீயும் வந்து ஆடு என்றார்கள். எனக்கு ஆட விருப்பமில்லை என்றேன். 10 மணிக்கோ 11 மணிக்கோ ஆசரமத்தை அடைந்தும், நான் சென்று தூங்கினேன்.
சனிக்கிழமை(Mar 16): காலையில் எழுந்து, என் உடைமைகளை எடுத்து வைத்துக்கொண்டேன். 10 மணிக்கு உணவு உண்டபின், நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு (ஒரு சிலர் நீயும் வந்து TTC பண்ணு என்றார்கள்), சொல்லிவிட்டு, சமையல் செய்யும் கேரளத்தை சேர்ந்தவரிடம் இந்த 15 நாட்களும் உணவு நன்றாகயிருந்தது என்று அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன்.
பேருந்து நிலையம் வந்து எப்போதும் போல ஒரு மணி நேரம் காத்திருந்தேன். அப்போது, ஆசரமத்திருக்கு அடிக்கடி வருகை தந்து உடைகளை விற்பவரும் பேருந்து நிலையம் வந்தார். பேருந்தும் வந்தது. ஒரு வழியாக பெரியார் பேருந்து நிலையம் வந்து ஒரு சாப்பிட பழங்கள் வாங்கிக்கொண்டு KPN அலுவலகத்திற்கு வந்து பயணசீட்டின் தகவல்கள் அடங்கிய குறுந்தகவலை காட்ட காத்திருக்க சொன்னார்கள். மணி மதியம் 01:30 ஆனது. மறுபடியும் அவர்களிடம் கேட்டதற்கு பேருந்து நிலையம் செல்லுங்கள் என்றும், வண்டி எண்ணும் தந்தார்கள். இங்கயே அரை மணி நேரம் late. இவன் எப்படி இரவு 09:00 மணிக்கு பெங்களூருக்கு போவான் என்று நினைத்துக்கொண்டு வண்டி ஏறினேன். சுந்தரப்பாண்டியன் படத்தை போட்டார்கள். இப்படத்தில் வரும் பெண் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று. காதலிக்கும் போது திரைப்படத்தில் கூட வராத வசனங்களை பேசிவிட்டு, அடுத்த நாள் எங்க அம்மா சொன்னங்க, அப்பா அழுதாங்கன்னு சொல்லி GoodBye சொல்கிற நிஜ உலக பச்சோந்தி பெண்களுக்கு முற்றிலும் எதிரான கதாபாத்திரம்.
வரும் வழியில், ஒரு பெட்ரோல் நிலையத்திலிருந்த ஒரு உணவகத்தில் நிறுத்தினார்கள். Rs.30 கொடுத்து Horlicks குடித்தேன். சிறிது நேரம் "The First Rule" நாவல், சிறிது நேரம் பாட்டு என்று ஓசுரை கடந்ததும், நடத்துனரிடம் வண்டி Express iwayயில் போகுமா என்று விசாரித்தற்கு ஆமாம் என்றார். அதனால் E-Cityயில் இறங்கி BMTC bus பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். புதிய அனுபவங்களுடன் என் மதுரை முடிந்தது. மறுபடியும் வாய்ப்பு கிடைத்தால் சிவானந்த ஆசரம் செல்ல நினைத்துள்ளேன்.

No comments:
Post a Comment