Thursday, August 1, 2013

My Brother's Wedding

எழுதியவர்: Andaleeb Wajid. பெங்களுருவை சேர்ந்தவர்.

இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒரு குடும்பம். அவர்களுக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன். பெரியவள், காதலித்து திருமணம் செய்து கொண்டவள். அன்பான கணவன். பிள்ளை பெற்றால் அழகு போய்விடும் என்று பிள்ளை பெறுவதை தள்ளி போடுகிறாள். அவள், திருமணமானவள் என்பதால் வீட்டில் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். அவளும் அதிகாரம் செய்துக்கொண்டு அலைகிறாள். சில பெண்கள் அப்படிதான் திருமணமானதும் தனக்கு இரண்டு கொம்பு முளைத்து விட்டதாக நினைத்து அடாவடித்தனம் செய்கிறார்கள். பெரியவளுக்கும் சின்னவளுக்கும் ஏழாம் பொருத்தம். சிறுவயதிலிருந்தே பெரியவள், சின்னவளை மட்டம் தட்டுகிறாள்.

மகனிற்கு திருமணம் செய்ய பெண் தேடுகிறார்கள். சின்னவள் திருமணமாகாதவள் என்பதால் அவளை அண்ணனின் கல்யாண விசயத்தில் கலந்தாலோசிப்பதில்லை. அவளோட உணர்வுகளை பகிர்ந்துகொள்ள சரியான துணை இல்லை. அதனால் வெறுத்துப்போய் blog எழுத ஆரம்பிக்கிறாள். Blogல் தன் பெயரையும், தன்னை சேர்ந்தவர்களின் பெயரையும் குறிப்பிடாமல் ஆங்கில எழுத்துக்களை (Alphabets), அதாவது Q, R, S, T என்று பயன்படுத்துகிறாள்.


புது துணி எடுப்பது, நிச்சயதார்த்தம், மணமகனின் பழைய காதல், சின்னவள் எழுதும் bolgனால் வரும் பிரச்சனைகள் என்று திருமணம் முடியும் வரை நடக்கும் எதிர்பாராத சம்பவங்களை பற்றிய கதை. நன்றாக உள்ளது. என் அக்காவிற்கு இந்த புத்தகத்தை கொடுத்துள்ளேன். அவரின் feedbackஐ கேட்க வேண்டும்.

No comments: