Tuesday, March 19, 2013

சிவானந்த ஆசிரமம் (Sivananda Ashram) அனுபவம் பாகம் 1

மதுரையிலுள்ள சிவானந்த ஆசிரமத்திற்கு, யோகா வகுப்பிற்காக(நான் சென்றதற்கான உண்மையான காரணம் இதுவல்ல) சென்றிருந்தேன். அந்த 16 நாட்களின் அனுபவங்களை பதிவுபண்ண முயற்சித்திருக்கிறேன்.

KSRTCயின்(TNSTC - வலைதளமா அது, 5 பைசாவுக்கு பிரயோஜனமில்லை. KSRTCல அவங்க முதலமைச்சர் புகைப்படம் இருக்கா?), non AC sleeper(Rs.542)ல் வியாழக்கிழமை(Feb, 27) இரவு 09:45க்கு மதுரைக்கு பயணமானேன். மறுநாள் காலை 07:30 மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இறங்கி, உள்ளூர் பேருந்துகள் நிற்கும் இடத்தை தேடும் போது கட்டண கழிப்பறை கண்ணில்பட்டது. நடத்துபவரிடம் சென்று எவ்வளவு என்றேன். அவர் பதில் சொல்லும்முன் அவரிடம் பேசிக்கொண்டிருந்தவர் 3 ரூபாய் என்றார். சண்டை போட மனமில்லாமல், முறைத்து விட்டு வெளியே வந்தேன்.

அங்கிருந்த ஒரு அலுவலகத்தில் இருந்தவரிடம் சிவானந்த ஆசிரமம் முகவரி சொல்லி கேட்டதற்கு, தெரியாதுன்னு சொல்லிவிட்டு, வேறொரு பயணியிடம் விசாரித்தார். அவர் நத்தம் போகிற பேருந்தில் போகசொன்னார். நத்தம் போகும் பேருந்துகள் நிற்கும் தடம்எண் சென்றபோது, நத்தம் பேருந்து ஒன்று கிளம்பியது. அதன் நடத்துனரிடம் பாவனவிளக்கு, சிவானந்த ஆசிரமம் சொன்னதற்கு, அவர் தனக்கு தெரியாதுன்னு கிளம்பினார். அதன்பின், அடுத்த நத்தம் பேருந்தின் நடத்துனரிடம் விசாரித்தத்தில் சத்திரப்பட்டியில் இறங்கி,  உள்ளூர் பேருந்து மூலம் பாவனவிளக்கு போகச்சொன்னார்(ஏனெனில் நத்தம் பேருந்து அந்த நிறுத்தத்தில் நிற்காது). சத்திரப்பட்டியில் இறங்கி, சிவானந்த ஆசிரமம் வலைத்தளத்தில் சொல்லியிருந்த 23P, 23Z பேருந்துகளுக்காக காத்திருந்தேன். ஒன்றரை மணி நேரம் கழித்து 23P வந்தது. ஆசிரமத்திற்கு எதிரிலேயே என்னை இறக்கிவிட்டு சென்றது. (பாவனவிளக்கு நிறுத்ததிலிருந்து ஆசிரமத்திற்கு சிறிது தூரம் நடந்து செல்லவேண்டும்)

ஆசிரமத்திற்குள் நுழைந்ததும், சாப்பிடச்சொன்னார்கள். இல்லை நான் குளிக்க வேண்டும் என்று சொன்னதற்கு, தற்காலிகமாக என் luggageஐ temporary domeல் வைக்க சொல்லி, அதன் பக்கத்திலிருந்த பொது கழிப்பறை/குளியலறையை பயன்படுத்திக்க சொன்னார்கள். Reception காலை 10:30க்கு திறப்பார்கள் என்றும், வேண்டுமென்றால் permanent domeக்கு மாற்றிக்கொள்ளலாம் என்றும் சொன்னார்கள்.

குளித்துவிட்டு, receptionக்கு சென்று Yoga vocation 15 நாட்களுக்கான courseக்கு பதிவு செய்யவேண்டும் என்றேன். பிடிக்காமலோ, வேறு காரணத்தினாலோ 15 நாட்களுக்குமுன் செல்ல வேண்டுமென்றால் கட்டிய பணம் திருப்பி தரமாட்டாது, அதனால் 3 நாட்களுக்கு பதிவு செய்துக்கொள்ளுங்கள். பிடித்திருந்தால் நீடித்துக்கொள்ளலாம் என்றார்கள். நான் வந்துள்ள மனநிலையில் என்ன நடந்தாலும் 15 நாட்களுக்குமுன் செல்லமாட்டேன் என்று நினைத்துக்கொண்டு 3 நாட்களுக்கு பதிவு செய்துக்கொண்டேன்.

Boutiqueக்காக(அவர்களின் கடை, எல்லா பொருட்களுக்கும் 2 ரூபாய் அதிகம்) ஒரு அட்டை கொடுத்தார்கள். Temp domeக்கு வெளியே உள்ள தகவல் பலகையில் ஆசிரமத்தின் அட்டவணை உள்ளதென்றும், அதன்படி வகுப்பிற்கு செல்லுங்கள் என்று சொல்லி, கொசு வலை, தலையணை உரை, 2 bedsheets, கொடுத்தார்கள். Permanent domeஐ விட Temp dome பரவாயில்லை என்று தோன்றியதால் Temp domeக்கு சென்றேன்.


அவர்கள் சொல்லாதது, இல்லை நான் கேட்க தவறியது:
1. Beginners course பற்றி
2. சாப்பாடு பற்றி
3. கர்ம யோகா பற்றி
4. காலை satsangல தான் அன்றைய தினத்திற்கான, வகுப்புகள் நடக்கும் இடம் பற்றி சொல்வார்கள்.

Beginners course 1ம் தேதி தான் தொடங்கும் என்பதால் படுத்து தூங்கினேன். மதியம் ஒரு மணிக்கோ, ஒன்றரை மணிக்கோ எழுந்தேன். அதிகமான பசி. யாரிடம், என்ன கேட்பதுன்னு தெரியவில்லை. அப்படியே மறுபடியும் படுத்தேன். கொஞ்ச நேரம் தூக்கம், கொஞ்ச நேரம் "The First Rule" நாவல் படிப்புன்னு மாலை 06:00 மணியானது. மணி அடித்தார்கள். காலையில் நான் வந்தபோது என்னிடம் பேசியவர், இது உணவருந்தும் நேரம், போய் சாப்பிடுங்கள் என்றார். உணவறைக்கு(Dinning Hall) சென்றேன். காரம், உப்பு, வெங்காயம் இல்லாத கேரளா style உணவு, மூலிகை தண்ணீர். எல்லாரும் limitஆக சாப்பிடுகிறமாதிரி இருந்ததால், கொஞ்சமாகத்தான் சாப்பிட்டேன்(2 நாட்கள் கழித்து தான் நான் எப்படி சாப்பிடுவேனோ அப்படி சாப்பிட ஆரம்பித்தேன்). உணவு நன்றாக இருந்தது. அதன்பின், Temp dome வந்து, Tabல் mail check பண்ணிட்டு, "Whose Body" கொஞ்ச நேரம் படித்துவிட்டு தூங்கினேன்.

No comments: