ஞாயிற்றுக்கிழமை(Mar 10) மகாசிவராத்திரி என்பதால் தொடர் பஜனை(காலை 06:00 மணியிலிருந்து மறுநாள் காலை வரைக்கும்) நடைபெறும் என்று சனிக்கிழமையே சொன்னார்கள். அதனால் ஞாயிற்றுக்கிழமை காலை "Silent Walk"க்கு போகாமல் நான் பஜனைக்கு போனேன். என்னோடு சேர்த்து 3 பேர். கிட்டத்தட்ட ஒன்றை மணிநேரம் அங்கு இருந்தேன். அதற்கு பின் கர்ம யோகா முடித்து மறுபடியும் ஒன்றை மணிநேரம் பஜனை செய்தேன்.
மாலையில் உணவுக்கு சென்றேன். எப்போதும் நான் தான் முதலில் செல்வேன். அவ்வளவு பசிக்கும். ஆனால் அன்றோ, ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், TTC(Teacher Training - Yoga) படிக்கும் ஒருவருக்கும் பிறந்தநாள். அதனால் மாலை உணவிற்கு முன், cake cut பண்ணி, அவர்களுக்கு பரிசு கொடுத்து, வாழ்த்துக்கள் படலம். குறைந்தபட்சம் பிறந்தநாள் கொண்டாடுபவர்களை சீக்கிரம் வர சொல்லியிருக்கலாம். அவர்கள் வரும்வரை பசியோடு,
"ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே"
சொல்லிக்கிட்டு உணவுக்காக காத்திருந்தோம். அதைவிட கொடுமை, பிறந்தநாள் கொண்டாடும் ஆசிரமத்தைச் சேர்ந்தவர் சமைத்த பாஸ்தவை(Pasta) மட்டுமே பரிமாறினார்கள். கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, Boutiqueவுக்கு சென்று சில snacks items வாங்கினேன். ஆசிரமத்தில் அவர்களே நடத்தும் பழச்சாறு, sandwiches விற்கும் கடை உள்ளது. அதற்கு செல்லலாம் என்றால், அன்று அதற்கு விடுமுறையாம்.
மாலையில் செய்யபோகும் மகாசிவராத்திரி பூஜை/பஜனையில், அப்பப்ப பிரசாதம்ன்னு சர்கரைபொங்கல், வெண்பொங்கல், புளிச்சாதம் எல்லாம் தருவார்கள் என்று அப்புறம் தான் தெரிந்தது.
என் பக்கத்து bedஐச் சேர்ந்த ஆஸ்திரேலியாகாரர் காதில் பூ கூட வைத்துகொண்டார். அப்படியே மணி விடியற்காலை 03:30 ஆனது. இருந்தவர்களில் முக்கால்வாசி பேர் தூங்க போய்விட்டார்கள். எனக்கும் கண்ணு கட்டியது. இருந்தாலும் அடுத்த அபிஷேகம், அதாவது கடைசி அபிஷேகம் 04:00 மணிக்கு என்பதால் தூங்காமலிருக்க முயற்சிசெய்தேன். ஆனாலும் 03:50க்கு நித்திரைதேவி ஆட்கொண்டாள். அங்கயே படுத்துவிட்டேன்.
04:30 மணிக்கு நானாக எழுந்தேனா அல்லது யாராவது எழுப்பினார்களா என்று தெரியாது. கடைசி அபிஷேகம் முடிந்து பூஜை செய்துகொண்டிருந்தார்கள். நானும் போய் ஆண்டவனை வணங்கிவிட்டு புளிசாத பிரசாதத்தை சாப்பிட்டு விட்டு, Temp Domeவுக்கு வந்து படுத்தேன். மகாசிவராத்திரி கொண்டாடியதால் மதியம் 02:00 மணி வரை விடுமுறை என்றார்கள்.
அப்புறம் ஒரு நாள், என் எதிர் bedஐ சேர்ந்த ஜெர்மன்காரர், "உன்னிடம் மின்னஞ்சல்(email) பார்க்க வழியிருந்தால், எனக்கு கொஞ்ச நேரம் கொடு, நான் அதற்கான பணம் கூட தருகிறேன்" என்றார். ஆசிரமத்தில் மின்னஞ்சல் பார்க்க வழியில்லை. வெளிநாட்டுகாரர்கள், உள்ளூர் sim வாங்குவதும் கஷ்டம்.(அதையும் மீறி ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் எந்த documentsயும் தராமல் sim வாங்கியுள்ளார்) நான் எப்போது ஒரு S/W Engg என்று சொன்னேனோ அப்பவே நீங்க கேட்டுயிருக்கலாம். பணம் எல்லாம் வேண்டாம். நான், என் Tabல் monthly pack activate பண்ணியுள்ளேன். நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று என் Tabஐ தந்தேன். அவ்வளவு தான், அவர் பயன்படுத்துவதை பார்த்து இன்னும் மூவர்(ஒருத்தர் இந்தியன்) கேட்டார்கள். தந்தேன்.
No comments:
Post a Comment