Showing posts with label Meenakshi Ammam Temple. Show all posts
Showing posts with label Meenakshi Ammam Temple. Show all posts

Tuesday, March 19, 2013

சிவானந்த ஆசிரமம் (Sivananda Ashram) அனுபவம் பாகம் 2

வெள்ளிக்கிழமை(Mar 01), காலை 08:00 மணிக்கு ஆசன வகுப்புக்கு சென்றால், அது அனுபவமுள்ளவர்கள் வகுப்பு மாதிரி இருந்தது. திரும்பி வந்துவிட்டேன். Beginnersக்குன்னு தனியா வகுப்பு இருக்காதோ என்னவோன்னு நினைத்து ஆசிரமத்தைவிட்டு கிளம்பிவிடலாமா என்று யோசித்தேன். Yoga trainer (அவர் தமிழ்) ஒருவரை விசாரித்தேன். வெள்ளிக்கிழமை விடுமுறை என்றும், மதுரைக்கு செல்ல நினைப்பவர்கள்(ஆசிரமம் 20-25KM தொலைவில் உள்ளது) சென்று வரலாம் என்றும், வகுப்புக்கு செல்வது இன்று கட்டாயம் இல்லையென்றும், சிக்கிமிலிருந்து(Sikkim) ஒரு குழு(ஆசிரியருக்கு - Teacher Training படிப்பவர்கள்) வரயிருப்பதால் beginners வகுப்புகள் நாளையிலிருந்து தொடங்கும் என்றும், உணவு ஒரு நாளைக்கு இரு முறை தான் என்றும் சொன்னார்.

அப்புறம், கொஞ்ச நேரம் தூக்கம், கொஞ்ச நேரம் நாவலுன்னு போச்சு.  மாலை உணவிற்கு பின், என் எதிர் கட்டிலிலிருந்த ஜெர்மன்(German) நாட்டைச் சேர்ந்த ஒருவர்(யாருடைய பெயரையும் பயன்படுத்த விரும்பவில்லை) உனக்கு என்ன உடம்பு சரியில்லையா, நீ domeலியே இருக்கியேன்னு கேட்டார். நான் beginner, வகுப்புகள் நாளையிலிருந்து தான் ஆரம்பிக்கிறது என்று சொன்னேன். அவரும் beginner என்று சொன்னார்.

இரவு சிக்கிம் குழு வந்தது. நான் கொஞ்ச நேரம் படித்துவிட்டு, தூங்கினேன்.

சனிக்கிழமை(Mar 02) வகுப்புகள் ஆரம்பித்தது. காலை 08:00 ஆசன வகுப்பை ஜப்பானைச்(Japan) சேர்ந்த பெண் ஒருவரும், மாலை 04:00 ஆசன வகுப்பை தமிழ் நாட்டைச் சேர்ந்தவரும் (எனக்கு பல தகவல்களை கொடுத்தவர்) எடுத்தார்கள். கர்மயோகாவுக்கு ஏன் வரவில்லை(எங்கு போகணுமுன்னு தெரியாததால் நான் போகவில்லை) என்று கேட்டு, receptionனுக்கு பக்கத்தில் காலை 10:45க்கு வரச்சொன்னார்கள்.

ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை காலையில் அமைதியான நடைபயணம் (Silent Walk), சனிக்கிழமை மாலை satsangல் talent show, திங்கட்கிழமை மாலை satsangல் study hourன்னு அப்படியே, ஒரு வாரம் போனது. மதுரையில் பார்க்கவேண்டிய இடங்களை google பண்ணி, அடுத்த வெள்ளிக்கிழமைக்கு திட்டம் போட்டேன்.

வெள்ளிக்கிழமை(Mar 08) காலையிலேயே கிளம்பினேன். பேருந்திற்காக ஒரு மணி நேரம் காத்திருந்து, பெரியார் பேருந்து நிலையம் வந்து, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழி கேட்டு கோவிலை அடைந்தேன்.

மீனாட்சி அம்மன் கோவில்: காலணி பாதுகாப்பு இலவசம், bagக்கு 3 ரூபாய் வாங்கினார்கள். சிறப்பு நுழைவு டிக்கெட்(Rs.100 - அம்மன் சந்நிதானதிற்க்கும், சிவன் சந்நிதானதிற்க்கும் ஒரே டிக்கெட்) வாங்கி, ஊரில் கோவிலில் தரிசனம் செய்வதுபோல் பக்கத்திலிருந்து தரிசனம் செய்தேன். யாரும் கிளம்பென்று தள்ளவில்லை. 100 கால் மண்டபம், 1000 கால் மண்டபம்(கட்டணம் Rs.5) பார்த்தேன்.   மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகணுங்கிற நீண்ட நாள் ஆசை, நிறைவேறிய திருப்தியோடு மறுபடியும் பெரியார் பேருந்து நிலையத்திற்கு எதிரிலிருந்த இன்னொரு பேருந்து நிலையத்திற்கு சென்று, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்ல விசாரித்தேன்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்: கோவிலினுள் நுழையும் போது ஸ்கேன் செய்தார்கள். Swiss type knifeஆல் beep sound வந்தது. அந்த போலீஸ்காரர் அது என்ன என்று விசாரித்து, கொஞ்ச நேரம் என்னோட வேலை, ஊர், மதுரை விஜயம், சிவானந்த ஆசிரமம் பற்றியெல்லாம் பேசினார். அப்புறம் உன் bagஐ வேண்டுமானால் வைத்துவிட்டு நிம்மதியாக தரிசனம் செய்துவிட்டு வா என்றார். (என்னை சந்தேகபட்டார் என்று நினைத்துகொள்ளாதீர்கள், கொஞ்ச நேரம் பேசினதால friendlyஅ தான் சொன்னார்) சிறப்பு தரிசனம் டிக்கெட் விலை Rs.50. வேலுக்கு பாலபிஷேகம் செய்து, அந்த பாலை அடுத்த நொடியே பூசாரிகள் விற்றுக்கொண்டிருந்தார்கள். தரிசனம் முடிந்து வரும்போது போலீஸ்காரருக்கும் சேர்த்து முறுக்கு வாங்கி கொண்டு வந்தேன்.(சென்னையில் போலீஸ்காரர்கள் அதிகாலையில் ஏதாவது மந்திரிக்காக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் நிற்பதை பார்த்து அவர்கள் மேல் வந்த கரிசனம் தான் காரணம்) ரொம்ப சந்தோசபட்டார். அப்புறம், எனக்கும் ஆசிரமத்திலுள்ளவர்களுக்கும் சேர்த்து பஞ்சாமிர்தம் வாங்கிக்கொண்டு திரும்பினேன்.

மதியம் ஒரு மணிக்கெல்லாம் மறுபடியும் பேருந்து நிலையம் வந்துவிட்டேன். மதிய உணவு முடித்து விட்டு, என்னசெய்வது என்று தெரியவில்லை. ஆசிரமம் செல்லவும் மனமில்லை. அதனால் இரயில் நிலையம் பக்கத்தில் இருந்த திரையரங்கத்தில் "ஒன்பதுல குரு" படத்திற்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு, படம் 02:45க்கு தான் என்பதால் "ஆனந்த விகடன்" படித்துக்கொண்டு காத்திருந்தேன்.

ஒன்பதுல குரு: செம மொக்கை படம். அரைமணி நேரத்திற்குள் கிளம்பிவிடலாமா என்று தோன்றியது. கிளம்பினாலும் எங்கு செல்வது, வெயில் வேறு. சரி, எவ்வளவோ மொக்கை படம் பார்த்தாச்சு, இதையும் பார்போம்ன்னு பார்த்தேன். இரண்டாவது பாகம் வேற வருமாம். அடக் கடவுளே!

படம் முடிந்து, பெரியார் பேருந்து நிலையம் சென்று ஆசிரமம் வழியாக செல்லும் பேருந்திற்காக காத்திருக்கும் போது, ஸ்பெயினிலிருந்து(Spain) வந்த ஒரு பெண்ணும்(Beginners classல, ரொம்ப குண்டாகயிருந்தாலும் யோகா செய்யும்   அவரை கவனித்திருக்கிறேன்) பேருந்து பற்றி விசாரித்து கொண்டிருந்தார். 23Pயில் ஏறும்போது அந்த பெண்ணிடமும் சொன்னேன். அந்த பேருந்து ஒரு அக்காவின் பரிந்துரையால் ஆசிரமம் செல்லும் பாதைக்கு திரும்பும்முன் எங்களை இறக்கி விட்டு சென்றது.

ஆசிரமம் வந்தபோது மணி இரவு 08:00ன்னு நினைக்கிறேன்.