Showing posts with label Dexter. Show all posts
Showing posts with label Dexter. Show all posts

Monday, August 12, 2013

Dexter - TV Series (Part 3)

Dexterஆக நடிக்கும் Michael C.Hallக்கும், தங்கை Debraவாக நடிக்கும் Jennifer Carpenterக்கும் இத்தொடரில் நடிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு கல்யாணம் செய்துக்கொண்டு ஓரிரு வருடத்தில் பிரிந்திருக்கிறார்கள். அண்ணன் தங்கையாக நடித்தவர்களா? என்று நினைக்கும் போது தான் விஜய் tvல் உன்னை போல் ஒருவன் சிறப்பு நிகழ்ச்சியில் கமல் சூர்யாவிடம், ஒரு விதத்தில் நீ ஸ்ருதிக்கு சித்தப்பா முறை என்று சொன்ன ஓரிரு வாரங்களில் ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவிற்கு ஜோடி ஸ்ருதி என்று அறிவித்தது நினைவுக்கு வந்தது.

Season 06
Dexter, ஒருவரை குற்றவாளியாக சந்தேகப்பட, அவரோ நல்லவராகயிருக்க இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். போலீஸ் துறையினுள் நடக்கும், அரசியலினால் Batista எதிர்பார்க்கும் Lieutenant பதவி Dexterன் தங்கை Debraவுக்கு கிடைக்கிறது. Batistaவும் அதை சகஜமாக எடுத்துகொண்டு Debraவுக்கு கீழ் பணிபுரிகிறார். Debra தன்னுடைய ஐந்தாவது boy friend Detective Quinn கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று கேட்டதற்கு, Quinnஐ பிரிகிறாள்.

இந்த seasonல் அந்நியன் படத்தை போல, Book of Resolutionஐ பின் பற்றி ஒரு கல்லூரி ஆசிரியரும், அவருக்கு உறுதுணையாக அவர் மாணவனும் கொலைகளை செய்கிறார்கள். போலிசும் "The DoomsDay Killers"ன்னு பேரை வைத்து தேட, எப்பவும் போல போலீசிடம் கொலையாளிகளை பற்றிய ஒரு தடயத்தை மறைத்து Dexter கொலையாளிகளை கண்டுபிடிக்கிறான்.

இதற்கிடையில், Dexterன் புதிய நண்பர் கொலை செய்யப்படுவதால் Dexterன் கவனம் நண்பரின் கொலை மேல் திரும்புகிறது. அதற்குள், DDK இன்னும் சில கொலைகளை செய்கிறார்கள். Dexter தன் நண்பனை கொலை செய்தவனை கொன்று விட்டு, DDKயை கொலை செய்வதை Dexterக்கு மிகவும் வேண்டப்பட்டவர் பார்த்துவிடுவதோடு இந்த season முடிவடைகிறது.

Season 07
Dexter, DDKஐ கொல்வதை பார்த்தவருக்கு தன்னை பற்றி சொல்கிறான். அவர் இதற்கு மேல் நீ யாரையும் கொல்லக்கூடாது, நான் உன்னை 24 மணி நேரமும் கண்காணிப்பேன் என்று சொல்ல Dexterம் வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறான்.

இதுவரை Dexterஆல் கொல்லப்பட்டவர்களை யாரும் தேடுவதில்லை. ஆனால் இந்த, seasonன் முதல் episodeல் போலீஸ்காரரை கொல்லும் மாபியா கூட்டத்தை சேர்ந்த ஒருவனை Dexter கொல்ல, அவனது கூட்டாளி Dexterஐ கொல்ல துரத்துகிறான்.

DDKஐ கொல்லுமிடத்தில் Dexter தவறவிடும் ஒரு தடயத்தை வைத்து, Deputy Chief Matthewsஐ மிரட்டி Captain பதவிக்கு வரும் María LaGuerta அந்த கொலையாளியை அதாவது Dexterஐ தேடுகிறார்.

Dexter பயன்படுத்தும் netwrangle என்கிற தேடுபொறியை (search engine) நான் googleல் தேடும்போது தான் தெரிந்தது அது போல் ஒன்று இல்லை என்றும், இந்த தொடரில் பயன்படுத்தும் ஒன்று என்று.

Thursday, August 1, 2013

Dexter - TV Series (Part 1)

imdb link: http://www.imdb.com/title/tt0773262/ 
Rating: 9

என்னோடு பிரெஞ்சு மொழி பயிலும் நண்பர்கள் மூலம் அறிமுகமான இன்னொரு ஆங்கில தொடர். அவர்கள் serial killer கதையென்றதும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. நண்பர் ஒருவர் கொடுத்தார். சில நாட்களுக்கு முன் தான் ebayவில் 7 seasonகளின் விலை Rs.5000க்கும் மேல் என்று பார்த்ததும், உங்களால் எனக்கு Rs.5000 மிச்சம் என்றேன். சரி தொடருக்கு வருவோம்.

நான் பார்க்கும் ஆறாவது தொடர். இதற்கு முன் பார்த்த ஐந்து தொடரும் வேறுவேறு கதை களம் கொண்டவை. அது போலத்தான் இதுவும். இத்தொடரில் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் அண்ணன் தங்கை உறவு - "தங்கைக்கு ஏதாவதென்றால், கொலை கூட செய்ய தயங்காத அண்ணன், அண்ணனை விட்டு கொடுக்காத தங்கை".

த்ரில்லர், சஸ்பென்ஸ் தொடர் என்பதால் என்ன எழுதுவதென்று தெரியவில்லை. ஒரு வேலை நீங்கள் அத்தொடரை பார்க்கும் போது நான் அனுபவித்த அந்த உணர்வு கிடைக்காமல் போய்விடுமோ? என்ற எண்ணம்.

இதுவரை 4 season பார்த்துள்ளேன். Dexter சாதாரண வாழ்கை வாழ ஆசைபடுவது, சில குற்றவாளிகளை சட்டத்திலிருந்து  தப்பிக்க விட்டு கொலை செய்வது, தங்கை, காதலி, காதலியின் கொழந்தைகளின் மீதான ஈர்ப்பு, சில விசங்களை அணுகும் முறை என்று இத்தொடர் நன்றாகத்தான் உள்ளது. Debraக்கு(Dexterன் தங்கை) ஒவ்வொரு seasonனிலும் ஒவ்வொரு காதலன்.

Season 01
ஒரு கொலை சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஒரு குழந்தையை ஒரு போலீஸ்காரர் காப்பாற்றி, தன் குழந்தையாக தத்தெடுத்துக் கொள்கிறார். தன் அம்மாவின் கொலையை நேரில் பார்த்த அந்த குழந்தையோ, கொலையை ரசிக்க ஆரம்பித்து, யாரையாவது கொலை செய்ய துடிக்கிறான். அந்த மனநிலையை மாற்ற முடியாதென்பதால், அந்த போலீஸ்காரர் அதாவது அப்பா, தவறு செய்து சட்டத்திலிருந்து தப்பிக்கும் குற்றவாளிகளை ஆதாரங்கள் இல்லாமல் எப்படி  கொலை செய்து தப்பிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிறார். அவனும் பல பேரை கொலை செய்து அவர்கள் ரத்த துளியை தான் செய்யும் வேலைக்கான பரிசாக சேகரிக்கிறான். Miami போலீசில் அவன் தங்கையும்(போலீஸ்காரரின் பெண்), forensics பிரிவில் அவனும் வேலை செய்கிறார்கள்.

இந்நிலையில், மியாமியில் தொடர் கொலைகள் நடக்கிறது. ஒவ்வொரு கொலையிலும் Dexterக்கு(கதையின் நாயகன்) கிடைக்கும் துப்பு, Dexterவுடன் சம்பந்தப்பட்டு இருக்கிறது. அந்த கொலைகாரனுக்கு "Ice Truck Killer" என்று பெயரிட்டு மியாமி போலீஸ் ஒருபுறமும், Dexter மறுபுறமும் தேடுகிறார்கள். இடையிடையே Dexterன் வாழ்கையில் நடந்த விசயங்கள் flashbackஆக வருகிறது. கடைசியில் Dexter அந்த கொலைகாரனை பிடித்து, Dexterக்கும் அவனுக்கும் உள்ள உறவுவை பற்றி தெரிந்துக்கொள்கிறான்.