Wednesday, April 24, 2013

Pretty Little Liars - TV Series


imdb.comல் rating 7.9 (http://www.imdb.com/title/tt1578873/?ref_=fn_al_tt_1)

CSI, The Rome, Game of Thronesக்கு பிறகு நான் பார்க்கும் நான்காவது ஆங்கில தொடர். ஏகப்பட்ட நாவல்களை திரைப்படமாகவோ அல்லது தொடராகவோ அவர்களால் மட்டும் எப்படி இயக்க முடிகிறதோ?

Sara Shepard எழுதிய Pretty Little Liars seriesஐ தான் நீண்ட நெடுந்தொடரா எடுத்திருக்கிறார்கள். அந்த கதையை படிக்கும் போதே அதை serialஅ எடுத்திருக்காங்கன்னு தெரிந்ததும், torrentல் டவுன்லோடு பண்ண தேடிக்கொண்டிருந்தேன். சரியான torrent கிடைக்கவில்லை. பத்து நாட்களுக்கு முன்னாடி தான் கிடைத்தது. Season 1ஐ நானும், என் அக்காவை season 2 டவுன்லோடு செய்ய சொல்லியுள்ளேன்.

Season 1ல் பத்து episode பார்த்துள்ளேன். கதையை ஏற்கனவே படித்துவிட்டதால் முதலில் சற்று குழப்பமாகயிருந்தது. தெலுங்கு படத்தை தமிழில் எடுப்பார்களே அது போல அப்படியே எடுக்காமல் பல மாற்றங்களை செய்துள்ளார்கள். சில கதாபாத்திரங்களை புதிதாகவும், கதையில் வரும் சில கதாபாத்திரங்களை நீக்கியும் உள்ளார்கள். Emilyக்கு தங்கையில்லை, கதையில் நால்வரும் ஒரு கட்டத்தில் தான் இணைவார்கள் ஆனால் இதில் முதலிலிருந்தே இணைந்த்திருப்பார்கள். இந்த மாதிரி ஏகப்பட்ட மாற்றங்கள்.

Hannaஐ flashbackல் குண்டாக காட்ட, ஒரு படத்தில் விவேக் உடம்பில் அங்கங்கு பலூன் கட்டிக்கொள்வதை போல் செய்துள்ளார்கள். பார்க்க காமெடியாக இருந்தது.

ஒரே கதையை இரண்டு விதமாக பார்க்கிற புதிய அனுபவம். மிகவும் விறுவிறுப்பாகவும், திரில்லிங்காகவும் உள்ளது. இதுவரை மூன்று seasonகள் வந்துள்ளது. நான்காவது season June மாதத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

Oct 15, 2013
Season 4, Episode 12 வரை பார்த்துள்ளேன். இந்த தொடரை பற்றி பல விஷயங்கள் மறந்த மாதிரி இருக்கிறது. ஜவ்வாக ஏன் இப்படி இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இன்னும் பல முடிச்சுகள் உள்ளது. ஆனால் இந்த episodeஐ பார்த்தப்பின், நான்காவது பாகத்தோடு படிப்பதை நிறுத்திய இந்நாவலை மறுபடி தொடரலாமா? என்ற எண்ணம்.

"கண்டேன் சீதையை" படத்தில் தீபா வெங்கட், ஒரு தொலைக்காட்சி தொடரை பற்றி சொல்லி, தான் 8 வருடமாக (சரியாக ஞாபகமில்லை) அத்தொடரை பார்த்து வருவதாக சொல்வார். நம்ம ஆளுங்க தான் அப்படி என்று நினைத்திருந்தேன். ஆனால் வெளிநாட்டினர் கூட எந்த அளவுக்கு தொடர்களை பார்க்கிறார்கள் என்பதை PLL பற்றி youtubeல் பார்த்த பிறகு தான் தெரிந்துக்கொண்டேன்.

ஏராளமான பேர் "A" யாராகயிருக்குமென்றும், அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார்கள். அதாவது, அவர்கள் ஒவ்வொரு episodeயும் பிரித்து மேய்ந்துள்ளார்கள். ஒரு காட்சியில் Ezra (Ariaவின் முன்னாள் காதலர், ஆசிரியர்) தன் வகுப்பில் பலகையில் எழுதிய பாடங்களில் சில வார்த்தைகளை வட்டமிட்டு, அதை ஒரு குழுவாக(hint) சொல்லியுள்ளார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு உன்னிப்பாக கவனித்துள்ளார்கள் என்று எண்ணிப்பாருங்கள். நான் அந்த அளவுக்கு உன்னிப்பாக கவனித்ததில்லை. அதனால் தான் என்னவோ எனக்கு கொஞ்சம் சலிப்பாக தோன்றியதோ?


Season 4, Episode 12 முடிவில் இன்னொரு "A"வை காட்டுவார்கள். நான் கூட, அந்த கதாபாத்திரம் "A"வாகயிருக்குமோ? என்று நினைத்திருந்தேன். ஏனெனில் அந்த கதாபாத்திரத்தை ஒரு flashbackல் பார்த்த மாதிரி ஞாபகம். youtubeல் ஒரு வருடத்திற்கு முன்னமே அவர் "A"வாகயிருப்பதற்கான காரணங்களை சொல்லியுள்ளார்கள்.

இத்தொடரில், இந்நாவலில் எனக்கு பிடிக்காத ஒன்று - ஒரு விஷயம் "A"ஆல் செய்யப்பட்டது என்பார்கள், ஆனால் எப்படி செய்யப்பட்டது என்று சொல்லமாட்டார்கள். ஒருத்தர் நம்மை எங்கு சென்றாலும், நாம் என்ன செய்தாலும் கண்காணிக்கிறார் என்றால் நாம் கொஞ்சமாவது எச்சரிக்கையாக இருப்போம் இல்லையா ஆனால் இதில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் அப்படி இருப்பதில்லை. எதையாவதை செய்து "A"வுக்கு இன்னொரு வழி தருவது போல் தான் இருக்கிறது.

No comments: