These reviews may contain spoilers.
உடையார் :
பாலகுமாரன்
ஆறு பகுதிகள். தஞ்சை பெரிய கோவிலையும் அதை சிறப்பாக கட்டி முடித்த இராஜராஜ சோழனையும் பற்றியது. அவ்வளவு பெரிய கோவிலை எப்படி கட்டியிருப்பார்கள்? கட்டும் போது என்னென்ன இடற்பாடுகள் ஏற்பட்டிருக்கும்? அந்த பிரச்சினைகளை எப்படி சமாளித்திருப்பார்கள்? கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களும், கோவில் கட்ட, சிலை செதுக்க ஆட்களும் எப்படி கிடைத்திருப்பார்கள்? என்பதை பற்றியெல்லாம் தெளிவாக எழுதியுள்ளார்.
முதல் பாகத்தின் முடிவில் இராஜராஜ சோழனின் வாந்தியிலிருந்து ஒரு கல்லை எடுப்பார்கள். ஆனால் அதற்கு பின் அது பற்றி எதுவும் வராது. இந்தமாதிரி
சில விஷயங்கள் விட்டுபோயிருக்கும். (சில வருடங்களுக்கு முன் படித்ததால் சரியாக ஞாபகமில்லை)
மற்றபடி, இதுவும் எனக்கு பிடித்த நாவல்களில் ஒன்று.
இந்த நாவலை
படித்த பிறகு பெரிய கோவிலை தரிசித்தே ஆகவேண்டும் என்ற என் எண்ணம் இன்னும் நிறைவேறவில்லை.
இப்போதெல்லாம் எந்த கோவிலுக்கு போனாலும் அங்குள்ள தூண்களின் மீதும், செதுக்கப்பட்டுள்ள
வடிவங்களின் மீதும் ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது.
கடிகை : பாலகுமாரன்
கேரள அந்தணர்கள் எப்படி வீரபாண்டியனுக்கு சோழத்தை தாக்க உதவினார்கள், ஆதித்த கரிகாலனை கொன்றார்கள் என்பதை பற்றியது.
No comments:
Post a Comment