Showing posts with label Gomathiyin Kadhalan. Show all posts
Showing posts with label Gomathiyin Kadhalan. Show all posts

Tuesday, November 27, 2012

Devan's Work - தேவனின் நாவல்கள்


துப்பறியும் சாம்பு


சி.ஐ.டி சந்துரு
இரண்டு பாகம். ஒரு கார்ட்டூன் (Donald Duckனு நினைக்கிறேன்) எபிசொடுல ஒரு வாத்து வைத்திருக்கும் பையில் என்ன இருக்கிறதென்று மற்ற வாத்துக்கள் பார்க்க முயற்சிக்கும். ஆனா கிளைமாக்ஸ்ல தான் அதுல THE ENDனு கார்டு இருக்கிறது தெரியும். அது போல இந்த கதையும் ஒரு பையை சுற்றியே நடக்கிறது. நீண்ட நெடுந்தொடரை பார்த்த அனுபவத்தை தருகிறது.(சங்கர்னு ஒரு கதாபாத்திரம். அவரை நான்கு முறை கடத்துகிறார்கள்) முதல் பாகம் முடிந்ததும் எப்படா முடியுமுன்னு தோன்றியது.


கோமதியின் காதலன்
நகைசுவையான ஆள்மாறாட்ட கதை. அதுவும் (Enid Blyton-ன் The Adventure Series-ல் வரும் கிகி(Kiki) கிளி மாதிரியே) சம்பந்தமில்லாமல் எதையாவது சொல்லும் அந்த குட்டிபையன் பாலு கதாபாத்திரம் நன்றாக உள்ளது. ஏகப்பட்ட விசயங்கள் "உள்ளதை அள்ளித்தா" படத்தோடு ஒன்றிப்போகிறது.


ஜஸ்டிஸ் ஜெகநாதன்
கோர்ட்டில் ஒரு கொலை கேஸ் எப்படி விசாரிக்கப்படுகிறதுன்னு இந்த கதை மூலமாக சொல்லியிருக்கிறார்.


ராஜத்தின் மனோரதம்
"வீட்டை கட்டிப்பார்! கல்யாணம் செய்துப்பார்!" -ன்னு ஒரு பழமொழி. ஒரு வீடு கட்டுவதென்பது எவ்வளவு கடினமான வேலை என்பதை சொல்லியுள்ளார். ஒரு வீடு கட்டும்போது பலர் தங்கள் அனுபவங்களையும், எண்ணங்களையும் சொல்லி குழப்புவது, கட்டி முடிப்பதற்குள்ளாக படும் அவஸ்தைகள் பற்றி ஒரு கதையாக எழுதியுள்ளார்.

"உடையார்" நாவல் படித்து முடித்ததும் எப்படி கோவில்களின் மேல் ஒரு மரியாதை வந்ததோ அதேபோல் இந்த நாவலை படிக்கும் போதே எங்கள் வீட்டின் மேலும் ஒரு மரியாதை வந்தது. எங்கள் வீட்டை கட்ட, அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாருன்னு இப்ப நினைத்துப் பார்க்கிறேன்.