சில நாவல்களை
வாங்கியிருந்தாலும், பல நாவல்களை http://thamizhthenee.blogspot.com, http://enewstamil.blogspot.in இன்னும் சில தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துதான்
படித்தேன். நாவல் ஆசிரியர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும், வலைதள உரிமையாளர்களுக்கும்,
up load செய்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
முதலில் கல்கியின் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் படித்தது தவறோ என்னவோ? எந்த நாவல் படித்தாலும் இந்த இரண்டு நாவல்களோடு ஒப்பிடுவதை தவிர்க்க முடியவில்லை. மற்ற நாவல்களை படிக்கும் போதுதான் இந்த இரண்டு நாவல்களின் சிறப்பு புரிகிறது. சில நாவல்களை வரலாற்று புதினங்கள்ன்னு சொல்லிட்டு, பழைய பெயரில் சில இடங்களை மட்டும் சொல்லியிருக்கிறார்கள்.
இதுவரை நான் படித்த வரலாற்று புதினங்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல்கள் - கல்கியின் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், சாண்டில்யனின் கடல் புறா, யவன ராணி. சாண்டில்யனின் நாவல்கள் கொஞ்சம் வெஸ்டேர்ன்(western) டைப்பா(type)
இருக்கும். அதாவது காமம் கொஞ்சம் இருக்கும். ஆனால் கல்கியின் நாவல்களில் அது சுத்தமா இருக்காது.
நாவல்களில் வர்ணனை சிறப்பாகயிருந்தால் தான் அந்த கதையோடு நாம் பயணம் செய்வது போலிருக்கும். அதாவது, ஒரு கதாபாத்திரம் ஒரு வீதியில் பயணம் செய்வதாகவோ அல்லது மாளிகையினுள் செல்லும்போதோ, அவன் அந்த வீதியில் சென்றான், அந்த மாளிகையினுள் நுழைந்தான் என்பதைவிட முதலில் அந்த வீதி எப்படியிருந்தது, மரம் செடி இருந்ததா? அல்லது வேறு மனிதர்கள் அந்த வீதியாக சென்றுகொண்டிருந்தர்களா போன்றவை அந்த வீதியை நம் கண்முன் கொண்டு வரும். கல்கியும், சாண்டில்யனும் இதில் சிறந்தவர்கள். ஆனால் ஒரு சில நாவல்களில் இந்த மாதிரியான வர்ணனை குறைவு. அந்த மாதிரி நாவல்களை படிக்கும் போது எதோ அவசரத்தில் எழுதினார்களோ என்று தோன்றும்.

பல நாவல்களில் கதாநாயகனுக்கு துணையாக சகலகலா வல்லவனாக வேற்று நாட்டவன் இருக்கிறான்.
These reviews may contain spoilers.
படித்து பல
வருடங்களாகிவிட்டதால் சில நாவல்களை பற்றி இப்போது எழுத முடியவில்லை.
பொன்னியின்
செல்வன் : கல்கி
சிவகாமியின்
சபதம் : கல்கி
பார்த்திபன்
கனவு : கல்கி
No comments:
Post a Comment