Thursday, December 6, 2012

Adventure Series


Andy McDermott

1. The Hunt for Atlantis (2007)
2. The Tomb of Hercules (2008)
3. The Covenant of Genesis (2008)
4. The Secret of Excalibur (2009)
5. The Cult of Osiris (2009)
6. The Vault of Shiva (India Title) (2010)
7. Empire of Gold (2011)
8. Temple of the Gods (2012)


ஒரு நாள் பேருந்தில் அலுவலகத்திற்கு பயணம் செய்துக்கொண்டிருக்கும் போது, சகபயணி ஒருவர்(அவருக்கு என் நன்றிகள்) படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் தலைப்பை தற்செயலாக கவனித்தேன் - "The Hunt for Atlantis". அத்தலைப்பே அந்த நாவலைப் பற்றி பல விஷயங்களை விளக்குவது போல் இருந்தது. அதாவது, adventure, chasing, suspense, thrill, இப்படி.

அப்புறமென்ன, Googleதான். அந்த seriesல 8 நாவல்கள். Online shopping sitesல அந்த நாவல்களின் விலைகளை compare பண்ணிப்பார்க்கும் போது homeshop18.comல ஒரு offer. Win7ல், task barல் homeshop18.com siteன் short cutஐ pin பண்ணினால், some amount discount பண்றதாக. Order பண்ணினேன். 3 - 4 நாட்களில் அலுவலகத்திற்கு delivery பண்ணிட்டாங்க.


8 நாவல்களுமே விறுவிறுப்பான Jamesbond படம் போல. எனக்கு தெரிந்து மாட்டுவண்டி chasing தான் இல்லை.
 ஒவ்வொரு நாவலும், archaeologist Ninaவும், அவளின் கணவன் Chaseம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு பொருளை எப்படி வில்லன்களிடமிருந்து காப்பாற்றுகிறார்கள், சில கதைகளில் அந்த வரலாற்று சிறப்புமிக்க ஒரு பொருளை வைத்து உலகை அழிக்க நினைக்கும் வில்லன்களிடமிருந்து உலகை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை பற்றியது. ஒவ்வொரு கதையிலும் வரும் சேசிங்(chasing), சண்டைகள் ஒரு அதிரடிப் படம் பார்க்கிற உணர்வை தருகிறது.


Enid Blyton

1. The Island of Adventure (1944)
2. The Castle of Adventure (1946)
3. The Valley of Adventure (1947)
4. The Sea of Adventure (1948)
5. The Mountain of Adventure (1949)
6. The Ship of Adventure (1950)
7. The Circus of Adventure (1952)
8. The River of Adventure (1955)

இந்த குழந்தைகளுக்கான கதைகளின் முக்கிய கதாபாத்திரங்கள் - பிலிப்(Philip), தினா(Dinah), லூசி-அன்(Lucy-Ann), ஜாக்(Jack), ஜாக்கின் கிகி(Kiki) என்ற கிளி, பில்(Bill) அப்புறம் அவர் மனைவி. பிலிப்பும் ஜாக்கும் நண்பர்கள். தினா பிலிப்பின் தங்கை. லூசி ஜாக்கின் தங்கை. பில் ஒரு போலீஸ் ஆபீசர். இவர்கள் எப்படி திருடர்கள், கடத்தல்காரர்கள் பிடிக்கிறார்கள் என்பதை பற்றியது. சம்பந்தமேயில்லாம எதையாவது பேசும் கிகியின் காமெடி, சில சமயங்களில் அதுவே அவர்களுக்கு உதவியாய் அமையும்.


No comments: