Friday, July 12, 2013

Lie to me - TV Series


imdb.com - http://www.imdb.com/title/tt1235099/?ref_=fn_al_tt_1

நான் பார்த்த ஐந்தாவது ஆங்கில தொடர். என் TL தான் இந்த தொடரை பற்றி சொன்னார். தரவிறக்கம் செய்யலாமென்று torrentல் தேடி, 200MB தரவிறக்கம் செய்திருந்தேன். அப்புறம் தான் என் கூட french படிக்கும் நண்பர் ஒருவர், இத்தொடரை வைத்திருப்பதாக சொல்லி, எனக்கு கொடுத்தார்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப, குற்றவாளிகளை முகத்தின் சின்ன சின்ன expressionஐ(தமிழில் என்ன?) (micro expression) வைத்து எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

இதுவும் CSI மாதிரி விறுவிறுப்பாக, சஸ்பென்சாக இருந்தாலும் CSIயில் இல்லாத நகைச்சுவை, humor இதில் அதிகம்.

அப்பாவுக்கும் மகளுக்குமான உறவு, தன் teenage பெண் ஆண்களோடு பழகுவதை தடுக்கவும் முடியாமல், ஏதாவது தவறு நடந்து விடுமோ? என்று பயப்படுவது, தன் பெண்ணை காக்க என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராகயிருப்பது நம்மவர்களின் பாசத்தை போல தான் அவர்களதும். என்ன, அவர்கள் மிகப்பெரிய ஊழலோ, கொலையோ செய்த தலைவனுக்கு வாழ்க சொல்லும் முட்டாள்கள் அல்ல.

ஒவ்வொரு குற்றவாளியும் ஒவ்வொரு expression செய்வதை உலகத்தின் பிரபலமான நபர்கள் தவறு செய்து மாட்டும் போது செய்த expressionனோடு ஒப்பிடுவது நன்றாக உள்ளது.